Friday, May 11, 2018

சாம்பார் பொடி| சாம்பார் தூள்

சாம்பார் பொடி/தூள் , சாம்பாருக்கு மட்டுமல்ல மற்ற குழம்புக்கும்,பொரியலுக்கு இதை பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டில் செய்யும் சாம்பார் பொடியும் ஒவ்வொரு சுவையில் மற்றும் மணத்தில் இருக்கும். கடையில் கிடைக்கும் பொடியை விட நாம் வீட்டில் செய்யும் பொடிக்கு மணமும் , சுவையும் தனி தான். ரொம்ப நாட்கள் வாசம் போகாமலும்  இருக்கும். இந்த சாம்பார் பொடி ரெசிபியை டிவியில் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சில் பார்த்தேன், வீட்டில் செய்வதை விட கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் உடனே செய்து பார்த்தேன் , ரொம்ப நன்றா இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள் !!!

Sambar Powder|சாம்பார் தூள்

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsMakes : 1 cup 
Recipe Category: Spice Powder | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி விதை -  3 டேபிள்ஸ்பூன் 
துவரம் பருப்பு - 1 & 1/4 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு  - 1/2 டேபிள்ஸ்பூன்
முழு உளுந்து  - 1/2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம்  - 1/4 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/4 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 15
கறிவேப்பில்லை - 1 கொத்து 
மஞ்சள் போடி - 1/2 டீஸ்பூன் 
பெருங்காயம் - 3/4 டீஸ்பூன்


செய்முறை
அனைத்து பொருட்களையும் அளந்து எடுத்து வைத்துக்கொள்ளவும் . ஒரு கடாயை காயவைத்து அதில் முதலில் கொத்தமல்லி விதை போட்டு நன்கு வாசம் வரும்வரை வறுக்கவும்.வறுத்த கொத்தமல்லியை ஒரு தட்டுக்கு மாற்றவும், பின்பு அதே கடாயில் துவரம் பருப்பு,கடலை பருப்பு  மற்றும் முழு உளுந்து போட்டு நன்கு பொன்னிறமகா வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.அடுத்து மிளகு,சீரகம் , கடுகு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை நன்கு வாசம் வரும்வரை வறுத்து எடுத்துவைத்து கொள்ளவும்.கறிவேப்பில்லையையும் நன்கு மொறு மொறுவென்று ஆகும் வரை வறுத்துக்கொள்ளவும். கடைசியாக மிளகாயையும் மொறு மொறுவென்று  வறுத்துக்கொள்ளவும்.வறுத்த அனைத்தையும் சிறுது நேரம் ஆற விடவும்.கொஞ்சம் ஆரியபின் மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை போடவும்.அதனுடன் மஞ்சள் பொடி மற்றும் பெருங்காய பொடியை சேர்த்து கொள்ளவும்.நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்,பின்பு அரைத்த பொடியை பேப்பரில்/பெரிய தட்டில்  பரப்பி நன்கு ஆறவிடவும். மசாலா டப்பாவில் போட்டுவைத்து தேவைக்கு பயன்படுத்தி கொள்ளவும்.சுவையான  மற்றும் மணமான சாம்பார் பொடி தயார்.
குறிப்புக்கள் 
எல்லாம் பொருட்களையும் மெல்லிய தீயில் வறுக்கவும்.
சாம்பார் பொடி கொரகொரவன்று இருந்தால் ஒரு முறை சலித்து, மிதமுள்ளவற்றை மீண்டும் ஒரு முறை அரைத்து கொள்ளவும்.


No comments:

Post a Comment