Friday, December 6, 2019

ராகி சப்பாத்தி | கேழ்வரகு சப்பாத்தி | Ragi Chapathi

ராகி சப்பாத்தி, ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு சத்தான சப்பாத்தி. ராகி மாவில் களி,கஞ்சி-க்கு பதில் இந்த மாதிரி சப்பாத்தி கூட செய்யலாம், ரொம்ப சுவையாக இருக்கும். சதா சப்பாத்தி செய்யக்கூடிய நேரம் தனக்கும் ஆனால் ராகி சப்பாத்தி கோதுமை சப்பாத்தியை விட ஆரோகியமானது. இதற்கு முன்னாடி நீங்க இந்த ராகி சப்பாத்தியை ட்ரை பண்ணதில்லனா இப்போ ட்ரை பண்ணி பாருங்க,வாங்க இந்த ராகி சப்பாத்தி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.  

ராகி சப்பாத்தி | கேழ்வரகு சப்பாத்தி

Preparation Time : 15 mins | Cooking Time : 15 minsMakes : 8-10 
Recipe Category: Roti | Recipe Cuisine: Indian
ராகி சப்பாத்தி | கேழ்வரகு சப்பாத்தி | Ragi Chapathi ராகி சப்பாத்தி, ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு சத்தான சப்பாத்தி. ராகி மாவில் களி,கஞ்சி-க்கு பதில் இந்த மாதிரி சப்பாத்தி கூட செய்யலாம், ரொம்ப சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப் 
ராகி மாவு - 1 கப் (கோபுரமாக )
உப்பு - தேவைக்கேற்ப 
தண்ணீர் - தேவைக்கேற்ப


செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மற்றும் ராகி மாவை அளந்து எடுத்து அதனை  ஒன்றாக கலந்து கொள்ளவும்.பின் அதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். ஒரு 10-15 நிமிடம் ஊற விடவும்.அடுத்து தேவைக்கேற்ப உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். கோதுமை மாவை தொட்டு சப்பாத்தி போல் மெல்லிசாக திரட்டி கொள்ளவும்.தோசை கல் / தவா-வை காய வைத்து சப்பாத்தி போல் இருபுறமும் சுட்டு எடுக்கவும். சுவையான மற்றும் சத்தான ராகி சப்பாத்தி தயார்.இதனை குருமா,சாம்பார் இப்படி எதனுடமும் பரிமாறலாம். நான் இன்னைக்கு பருப்பு கீரையுடன் பரிமாறியுள்ளேன்.
குறிப்புக்கள் 
  • தேவைக்கேற்ப எண்ணெய்-யை சப்பாத்தி சுடும் போது சேர்த்து கொள்ளவும்.
  • சப்பாத்தி சுடும் போது தீ அதிகமாக வைத்து கொள்ளவும்,அப்போதுதான் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

Read more »

Friday, October 4, 2019

அவரைக்காய் கூட்டு | Avarakkai Kootu

அவரைக்காய் கூட்டு, சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான கூட்டு. அவரைக்காயில் சாம்பார் மற்றும் பொரியல் செய்வது வழக்கம்,கொஞ்சம் வித்தியாசமாக இந்த கூட்டை செய்து பாருங்கள்,அட்டகாசமாக இருக்கும். இதனை வத்த குழம்பு  மற்றும் காரா குழம்புடன் சாப்பிட அருமையாக இருக்கும். வாங்க எப்போ இந்த சுவையான அவரைக்காய் கூட்டை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

அவரைக்காய் கூட்டு | Avarakkai Kootu

Preparation Time : 5 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
Avarakkai Kootu, Board Beans Kootu,அவரைக்காய் கூட்டு, அவரைக்காய், கூட்டு,Dal,Avarakkai அவரைக்காய் கூட்டு, சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான கூட்டு. அவரைக்காயில் சாம்பார் மற்றும் பொரியல் செய்வது வழக்கம்,கொஞ்சம் வித்தியாசமாக இந்த கூட்டை செய்து பாருங்கள்,அட்டகாசமாக இருக்கும். இதனை வத்த குழம்பு மற்றும் காரா குழம்புடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
அவரைக்காய்  - 15
துவரம் பருப்பு - 1/4 கப் 
சின்ன வெங்காயம் - 4
தக்காளி - 1 
மஞ்சள் தூள்  - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள்  - 3/4 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
பெருங்காயம் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க 
எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - சிறுதளவு 

செய்முறை
முதலில் துவரம் பருப்புடன் பெருங்காயம் தூள் சேர்த்து  குக்கரில் வைத்து ஒரு 3 விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து அவரைக்காயை 1/2 இன்ச் துண்டுகளாக மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் அதில் அவரைக்காயை சேர்த்து வேகவிடவும்.அவரைக்காய் முக்கால் பதம் வெந்தவுடன் அதில் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து அதனையும் வேகவிடவும்.நன்கு காய்கறிகள் வெந்தபின் அதில் பருப்பு, மசாலா (மஞ்சள் ,மிளகாய்த்தூள் )மற்றும் உப்பை சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும்.அடுத்து  தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும். கடைசியாக கொத்தமல்லி இலையை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.சுவையான அவரைக்காய் கூட்டு தயார்.
குறிப்புக்கள் 
  • துவரம் பருப்பிற்கு பதில் பாசி பருப்பு கூட இதற்கு பயன்படுத்தலாம்.
  • தேவைக்கேற்ப மிளகாய் தூளை கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளலாம்.

Read more »

Thursday, September 26, 2019

வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி| தடியங்காய் தயிர் பச்சடி | Vella Poosanaikai Thayir Pachadi

வெள்ளை பூசணிக்காய் /தடியங்காய் தயிர் பச்சடி, சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் பச்சடி. வெள்ளை பூசணிக்காயில் நீர் சத்து அதிகம் உள்ளது, இதனை வெயில் காலங்களில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் உடல் சூடு தணிந்து குளுமையாக இருக்கும். இதற்கு முன் இந்த தயிர் பச்சடி செய்தது இல்லையென்றால் கண்டிப்பான செய்து பாருங்கள், ரொம்ப கம்மியான நேரத்தில் செய்யக்கூடிய ஒரு பச்சடி. வாங்க இப்போ எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி| தடியங்காய் தயிர் பச்சடி

Preparation Time : 10 mins | Cooking Time : 10 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
Vella poosanikai Thayir Pachadi,Raita,White Pumpkin,வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி, தடியங்காய் தயிர் பச்சடி,வெள்ளை பூசணிக்காய்,தடியங்காய்,தயிர் பச்சடி வெள்ளை பூசணிக்காய் /தடியங்காய் தயிர் பச்சடி, சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் பச்சடி. வெள்ளை பூசணிக்காயில் நீர் சத்து அதிகம் உள்ளது, இதனை வெயில் காலங்களில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் உடல் சூடு தணிந்து குளுமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெள்ளை பூசணிக்காய்(சிறு துண்டுகளாக நறுக்கியது ) - 1/2 கப் 
தயிர் - 1/2 கப் 
உப்பு - தேவையானளவு 
கொத்தமல்லி இலை - சிறுதளவு 
தாளிக்க 
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது)-1
பச்சை மிளகாய்(பொடியாக நறுக்கியது ) - 1
கடுகு & உளுந்து - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - சிறுதளவு 


செய்முறை
முதலில் வெள்ளை பூசணிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் நறுக்கிய வெள்ளை பூசணிக்காயை மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
பூசணிக்காயை வெந்தபின் அதனை வடிகட்டி நன்கு ஆற விடவும். அடுத்து அதில் தயிர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதில் சேர்க்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.சுவையான வெள்ளை பூசணிக்காய்/தடியங்காய் தயிர் பச்சடி தயார்.
குறிப்புக்கள் 
  • தடியங்காவில் தண்ணீரை நன்கு வடித்த பின் அதனை தயிரில் சேர்க்கவும். 
  • நன்கு திக்கான மற்றும் புளிக்காத தயிரை பயன்படுத்தவும்.
  • தேங்காய் எண்ணெய் நல்ல சுவை மற்றும் மணத்தை கொடுக்கும்.



Read more »

Wednesday, September 18, 2019

Ponnanganni Keerai Kootu | பொன்னாங்கண்ணி கீரை கூட்டு

பொன்னாங்கண்ணி/பொன்னாங்காணி கீரை கூட்டு, ஒரு சுவையான மற்றும் சத்தான கூட்டு வகை. பொன்னாங்கண்ணி கீரையில் நிறைய சத்துகள் உள்ளன,அதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்யத்திற்கு ரொம்ப நல்லது.பொன்னாங்கண்ணி கீரையில் பொரியல் மற்றும் கூட்டு வகைகள் செய்யலாம்,இன்னைக்கு நாம் பார்க்க போவது சுலபமாக செய்யக்கூடிய ஒரு கூட்டு வகை,வாங்க எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

Ponnanganni Keerai Kootu | பொன்னாங்கண்ணி கீரை கூட்டு

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Kootu | Recipe Cuisine: Indian
பொன்னாங்கண்ணி கீரை, கூட்டு, பொன்னாங்காணி கீரை,Ponnanganni Keerai Kootu, Dwarf Copperlead பொன்னாங்கண்ணி/பொன்னாங்காணி கீரை கூட்டு, ஒரு சுவையான மற்றும் சத்தான கூட்டு வகை. பொன்னாங்கண்ணி கீரையில் நிறைய சத்துகள் உள்ளன,அதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்யத்திற்கு ரொம்ப நல்லது.
தேவையான பொருட்கள்
பொன்னாங்கண்ணி கீரை - 1/2 கட்டு 
துவரம் பருப்பு - 1/4 கப் 
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 3
மஞ்சள் தூள்  - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள்  - 3/4 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
பெருங்காயம் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க 
எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - சிறுதளவு 


செய்முறை
முதலில் துவரம் பருப்புடன் பெருங்காயம் தூள் சேர்த்து  குக்கரில் வைத்து ஒரு 2 விசில் வேகவிடவும். அதற்குள் கீரையை காம்பு நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.குக்கரில் பிரஷர் அடங்கிய பின் திறந்து அதனுடன் கழுவிய கீரையை சேர்க்கவும்.அடுத்து அதில் சின்ன வெங்காயம் ,பூண்டு,மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் ஒரு விசில் வேகவிடவும்.குக்கரில் பிரஷர் அடங்கிய பின் திறந்து உப்பு மற்றும் "தாளிக்க" கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.சுவையான மற்றும் சத்தான பொன்னாங்கண்ணி கீரை கூட்டு தயார்.
குறிப்புக்கள் 
  • துவரம் பருப்பிற்கு பதில் பாசி பருப்பு கூட இதற்கு பயன்படுத்தலாம்.
  • தேவைக்கேற்ப மிளகாய் தூளை கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளலாம்.

Read more »

Wednesday, August 14, 2019

பானகாரம் | பானகம்| Panakaram | Panakam

பானகாரம் /பானகம், ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு நீர் ஆகாரம். கோடை காலத்தில் அல்லது ஆடி மாதம் நடைபெறும் தமிழக கோவில் விழாக்களில் இந்த பானம் பக்தர்களின் தாகம் தணிக்க வழங்கப்படும். எளிதில் தாகம் தணிக்கும் மற்றும் ரொம்ப சுவையாக இருக்கும். இதனை வீட்டிலே எப்படி ரொம்ப சுலபாக செய்வதுனு பார்க்கலாம்.

பானகாரம் | பானகம்| Panakaram | Panakam

Preparation Time : 10 mins | Cooking Time : 0 minsServes :
Recipe Category: Drinks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
எலுமிச்சை பழம் - 1/2
வெள்ளம் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை 
தண்ணீர் - 1 &1/2 கப் 
ஏலக்காய் போடி - ஒரு சிட்டிகை 
துளசி - சிறுதளவு 


செய்முறை
முதலில் வெல்லத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அதனை கரைய விடவும்.முழுவதும் கரைந்த பின் அதனை வடித்து கொள்ளவும், அடுத்து வெல்ல கரைசலில் எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளவும்.பின் உப்பு ,ஏலக்காய் போடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.சுவையான  பானகாரம் /பானகம் தயார்.
குறிப்புக்கள் 
  • துளசி இல்லாததால் சேர்க்கவில்லை, நீங்கள் இருந்தால் கண்டிப்பாக சேர்த்து கொள்ளவும்.
  • வெல்லத்தை நன்கு பொடித்து கொள்ளவும் ,சீக்கரம் கரைய உதவும்.
  • விருப்பபட்டால் சிறுதளவு சுக்கு போடி சேர்த்து கொள்ளலாம்.

Read more »

Friday, July 26, 2019

வாழைக்காயை சிப்ஸ் | Raw Banana Chips

வாழைக்காயை சிப்ஸ், ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ். வாழைக்காய் மட்டும் இருந்தால் போதும் நொடியில் இந்த சிப்ஸ்-யை செய்து விடலாம்.மொறு மொறுவென்று ரொம்ப சுவையாக இருக்கும். வாங்கஇப்போ இந்த சிப்ஸ்-யை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

வாழைக்காயை சிப்ஸ் | Raw Banana Chips

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes : 2-3 
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வாழைக்காய் -1 
எண்ணெய் - பொரிப்பதற்கு 
உப்பு  மற்றும் மிளகு தூள் - தேவையானளவு 


செய்முறை
முதலில் வாழைக்காயை தோல் சீவி மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து, வெட்டி வைத்துள்ள வாழைக்காயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொரிக்கவும்.எண்ணெயில் "ஷ் ஷ் " என்ற சத்தம் அடங்கிய பின்  சிப்ஸ்-யை எண்ணெயிலிருந்து எடுத்துவிடவும்.தேவையானளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.சுவையான வாழைக்காயை சிப்ஸ்  தயார்.
குறிப்புக்கள் 

  • எண்ணெய் காய்ந்த பின் மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும் 
  • வாழைக்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் அப்போது தான் சிப்ஸ் நன்கு மொறு மொறுவென்று இருக்கும்.
  • விருப்பபட்டால் மிளகு தூளுக்கு பதில் மிளகாய் பொடி சேர்த்து கொள்ளலாம்.

Read more »

Friday, May 24, 2019

பால் ஐஸ் | Paal Ice | Summer Special

பால் ஐஸ்,எளிதில் வீட்டில் செய்யக்கூடிய ஒரு சுவையான குச்சி ஐஸ். உங்களுக்கு தள்ளு வண்டியில் விற்கும் பால் ஐஸ் பிடிக்குமென்றால் இந்த பால் ஐஸ் ரெசிபி-யை ட்ரை பண்ணி பாருங்க, தள்ளு வண்டியில் கிடைக்கும் ஐஸ்-யை விட ரொம்ப சூப்பராக இருக்கும். பால் மற்றும் சீனி இருந்தால் போதும் நொடியில் இந்த ஐஸ்-யை செய்துவிடலாம், இந்த சம்மரில் நீங்களும் இதனை செய்து உங்கள் குடும்பத்தோடு என்ஜாய் பண்ணுங்க,குட்டிஸ் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.வாங்க எப்போ இதனை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

பால் ஐஸ் | Paal Ice

Preparation Time : 6 hrs | Cooking Time : 10 minsServes :
Recipe Category: Dessert | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பால் - 1 கப் 
சர்க்கரை - 3 - 4 டேபிள் ஸ்பூன் 
ஏலக்காய் - 2 (பொடித்தது)
கார்ன் ஃப்ளோர்- 2 டீஸ்பூன் 

செய்முறை
முதலில் கார்ன் ஃப்ளோர்-யை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் போல பால் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.அடுத்து மீதமுள்ள பாலை ஒரு கடாயில் ஊற்றி நன்கு காய்ச்சவும், பால் பொங்கியபின் 3-4 நிமிடங்கள் லேசான தீயில் கொதிக்க விடவும். பின் சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ளவும்.அடுத்து பொடித்த ஏலக்காய் மற்றும் கார்ன் ஃப்ளோர் கரைசலை சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு நிமிடத்தில் பால் லேசாக கெட்டியாகும், அப்போது அடுப்பை அணைத்து விடவும்.பால் நன்கு குளிர்ந்தபின் அதனை ஐஸ் மோல்ட்-யில் ஊற்றி மூடிவிடவும்.பிரிசரில் ஒரு 6-8 மணி நேரம் வைத்து எடுக்கவும். ஐஸ்-யை  மோல்ட்-யில் இருந்து எடுக்க சிறுது நேரம் நீரில் காட்டவும்,ரொம்ப சுலபமாக மோல்ட்-யில்இருந்து வந்து விடும்.சுவையான பால் ஐஸ் தயார் .
குறிப்புக்கள் 

  • கார்ன் ஃப்ளோர் மேலே கொடுத்துள்ள அளவை விட அதிகம் பயன்படுத்த வேண்டாம். 
  • தண்ணீர் சேர்க்காத பாலை பயன்படுத்தவும்.
  • ஐஸ் மோல்ட் இல்லாவிடில் சிறு டம்ளர் அல்லது கிண்ணத்தில் கூட ஊற்றி வைக்கலாம்.

Read more »