Thursday, September 26, 2019

வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி| தடியங்காய் தயிர் பச்சடி | Vella Poosanaikai Thayir Pachadi

வெள்ளை பூசணிக்காய் /தடியங்காய் தயிர் பச்சடி, சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் பச்சடி. வெள்ளை பூசணிக்காயில் நீர் சத்து அதிகம் உள்ளது, இதனை வெயில் காலங்களில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் உடல் சூடு தணிந்து குளுமையாக இருக்கும். இதற்கு முன் இந்த தயிர் பச்சடி செய்தது இல்லையென்றால் கண்டிப்பான செய்து பாருங்கள், ரொம்ப கம்மியான நேரத்தில் செய்யக்கூடிய ஒரு பச்சடி. வாங்க இப்போ எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி| தடியங்காய் தயிர் பச்சடி

Preparation Time : 10 mins | Cooking Time : 10 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
Vella poosanikai Thayir Pachadi,Raita,White Pumpkin,வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி, தடியங்காய் தயிர் பச்சடி,வெள்ளை பூசணிக்காய்,தடியங்காய்,தயிர் பச்சடி வெள்ளை பூசணிக்காய் /தடியங்காய் தயிர் பச்சடி, சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் பச்சடி. வெள்ளை பூசணிக்காயில் நீர் சத்து அதிகம் உள்ளது, இதனை வெயில் காலங்களில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் உடல் சூடு தணிந்து குளுமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெள்ளை பூசணிக்காய்(சிறு துண்டுகளாக நறுக்கியது ) - 1/2 கப் 
தயிர் - 1/2 கப் 
உப்பு - தேவையானளவு 
கொத்தமல்லி இலை - சிறுதளவு 
தாளிக்க 
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது)-1
பச்சை மிளகாய்(பொடியாக நறுக்கியது ) - 1
கடுகு & உளுந்து - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - சிறுதளவு 


செய்முறை
முதலில் வெள்ளை பூசணிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் நறுக்கிய வெள்ளை பூசணிக்காயை மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
பூசணிக்காயை வெந்தபின் அதனை வடிகட்டி நன்கு ஆற விடவும். அடுத்து அதில் தயிர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதில் சேர்க்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.சுவையான வெள்ளை பூசணிக்காய்/தடியங்காய் தயிர் பச்சடி தயார்.
குறிப்புக்கள் 
  • தடியங்காவில் தண்ணீரை நன்கு வடித்த பின் அதனை தயிரில் சேர்க்கவும். 
  • நன்கு திக்கான மற்றும் புளிக்காத தயிரை பயன்படுத்தவும்.
  • தேங்காய் எண்ணெய் நல்ல சுவை மற்றும் மணத்தை கொடுக்கும்.



Read more »

Wednesday, September 18, 2019

Ponnanganni Keerai Kootu | பொன்னாங்கண்ணி கீரை கூட்டு

பொன்னாங்கண்ணி/பொன்னாங்காணி கீரை கூட்டு, ஒரு சுவையான மற்றும் சத்தான கூட்டு வகை. பொன்னாங்கண்ணி கீரையில் நிறைய சத்துகள் உள்ளன,அதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்யத்திற்கு ரொம்ப நல்லது.பொன்னாங்கண்ணி கீரையில் பொரியல் மற்றும் கூட்டு வகைகள் செய்யலாம்,இன்னைக்கு நாம் பார்க்க போவது சுலபமாக செய்யக்கூடிய ஒரு கூட்டு வகை,வாங்க எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

Ponnanganni Keerai Kootu | பொன்னாங்கண்ணி கீரை கூட்டு

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Kootu | Recipe Cuisine: Indian
பொன்னாங்கண்ணி கீரை, கூட்டு, பொன்னாங்காணி கீரை,Ponnanganni Keerai Kootu, Dwarf Copperlead பொன்னாங்கண்ணி/பொன்னாங்காணி கீரை கூட்டு, ஒரு சுவையான மற்றும் சத்தான கூட்டு வகை. பொன்னாங்கண்ணி கீரையில் நிறைய சத்துகள் உள்ளன,அதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்யத்திற்கு ரொம்ப நல்லது.
தேவையான பொருட்கள்
பொன்னாங்கண்ணி கீரை - 1/2 கட்டு 
துவரம் பருப்பு - 1/4 கப் 
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 3
மஞ்சள் தூள்  - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள்  - 3/4 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
பெருங்காயம் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க 
எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - சிறுதளவு 


செய்முறை
முதலில் துவரம் பருப்புடன் பெருங்காயம் தூள் சேர்த்து  குக்கரில் வைத்து ஒரு 2 விசில் வேகவிடவும். அதற்குள் கீரையை காம்பு நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.குக்கரில் பிரஷர் அடங்கிய பின் திறந்து அதனுடன் கழுவிய கீரையை சேர்க்கவும்.அடுத்து அதில் சின்ன வெங்காயம் ,பூண்டு,மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் ஒரு விசில் வேகவிடவும்.குக்கரில் பிரஷர் அடங்கிய பின் திறந்து உப்பு மற்றும் "தாளிக்க" கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.சுவையான மற்றும் சத்தான பொன்னாங்கண்ணி கீரை கூட்டு தயார்.
குறிப்புக்கள் 
  • துவரம் பருப்பிற்கு பதில் பாசி பருப்பு கூட இதற்கு பயன்படுத்தலாம்.
  • தேவைக்கேற்ப மிளகாய் தூளை கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளலாம்.

Read more »