Friday, September 28, 2018

ஏபிசி ஜூஸ் | ABC Juice

ஏபிசி ஜூஸ், ரொம்ப ஹெல்த்தியான மற்றும் சுவையான ஒரு ஜூஸ். ஆப்பிள்,கேரட் மற்றும் பீட்ரூட் கொண்டு செய்யப்படும் எந்த ஜூஸில் உடம்பிற்கு தேவையான முக்கிய சத்துக்கள் நிறைய உள்ளன. கடையில் கிடைக்கும் பாட்டில் ஜூசை வாங்குவதை விட,இந்த மாதிரி வீட்டிலே சத்தான ஜூஸ்களை நிமிடத்தில் செய்துவிடலாம். காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட இந்த மாதிரி ஜூஸ் செய்துகொடுத்தல் ரொம்ப விரும்பி குடிப்பார்கள். வாங்க இப்போ இந்த ஜூஸ் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

ஏபிசி ஜூஸ் | ABC Juice

Preparation Time : 5 mins | Cooking Time : 0 minsServes :
Recipe Category: Juice | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
ஆப்பிள் - 1
பீட்ரூட் - 1 
கேரட் - 2
லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன் 
தண்ணீர்  -1 கப் 

செய்முறை
முதலில்  பீட்ரூட் மற்றும் கேரட்-யை தோல் சீவி கொள்ளவும், பின் ஆப்பிள் , பீட்ரூட் மற்றும் கேரட்-யை  சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதனை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி அதில் லெமன் ஜூஸை சேர்த்து கலந்து கொள்ளவும்.சத்தான,சுவையான ஏபிசி ஜூஸ் தயார். 
குறிப்புக்கள் 
  • இதில் நான் ஆப்பிளின் தோலை நீக்கவில்லை, நீங்கள் விருப்பபட்டால் நீக்கி கொள்ளலாம்.
  • இந்த ஜூஸுக்கு பழங்களிலுள்ள இனிப்பே போதும்,மேலும் தேவைப்பட்டால் சிறுது தேன் சேர்த்து கொள்ளவும்.

Read more »

Wednesday, September 26, 2018

மஷ்ரூம் மசாலா | Mushroom Masala

மஷ்ரூம் மசாலா, சுவையான இந்த மஷ்ரூம் மசாலா சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். இந்த ரெசிபியில் கொடுத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி மசாலாவை நீங்கள் ஒரு நாள் முன்னாடியே கூட செய்து வைத்துவிடலாம், தேவைப்படும் போது சூடு பண்ணி அதில் மஷ்ரூம்,பன்னீர் மற்றும் அவித்த காய்கறிகள் எப்படி எதுவென்றாலும் சேர்த்து நொடியில் ஒரு சைடு டிஷ் ரெடி பண்ணிவிடலாம். சுவையான இந்த மஷ்ரூம் மசாலா எப்படி செய்வதுனு இப்போ பார்க்கலாம்.

மஷ்ரூம் மசாலா | Mushroom Masala

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
மஷ்ரூம்   - 1 கப்(நறுக்கியது )
குடை மிளகாய் - 1 கப் (நறுக்கியது ) 
வெங்காயம் - 2 
தக்காளி - 2
இஞ்சி - 1/2 இன்ச்  துண்டு 
பூண்டு  - 5 பல் 
சீரகம் - 1/4 டீஸ்பூன்  
சோம்பு - 1/4 டீஸ்பூன் 
முந்திரி பருப்பு - 4
மஞ்சள் பொடி - 1/4 டீ ஸ்பூன் 
மிளகாய் பொடி - 1/2 டீ ஸ்பூன் 
கொத்தமல்லி பொடி - 2  ஸ்பூன் 
எண்ணெய்  - 2 டேபிள் ஸ்பூன் 
பட்டை - 1/2 அங்குலம் துண்டு 
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
கொத்தமல்லி இலை - தேவைக்கேற்ப 
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
முதலில் வெங்காயம்,தக்காளி மற்றும் இஞ்சி பூண்டை சிறிதாக நறுக்கி கொள்ளவும். அடுத்து ஒரு வாணலில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி,சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்.அடுத்து வெங்காயம் ,இஞ்சி மற்றும் பூண்டு கூடவே சிறுதளவு உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும்.பின்பு முந்திரி பருப்பு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு தக்காளி வேகும் வரை வதக்கி கொள்ளவும். பின் அதனை சிறுது நேரம் ஆற விடவும்.ஆறியபின் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ளவும். மீதும் ஒரு வாணலில் 1 டேபிள் ஸ்பூன் பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்து கொள்ளவும்.அடுத்து அரைத்த விழுது  மற்றும் மஞ்சள்,மிளகாய், கொத்தமல்லி பொடி & உப்பை சேர்த்து கொள்ளவும்.மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரம் கொதிக்க விடவும் (தேவைப்பட்டால் இடையில் தண்ணீர் சேர்த்து கொள்ளவும் ). கடைசியாக கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்.இதற்கிடையில் மஷ்ரூம் மாற்றம் குடை மிளகாயை சிறு உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.வதக்கிய மஷ்ரூம் மற்றும்  குடை மிளகாயை மசாலாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி இலையை தூவி கொள்ளவும் . சுவையான மஷ்ரூம் மசாலா தயார்.
குறிப்புக்கள் 
  • உங்கள் தேவைக்கேற்ப மசாலாவில் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  • இன்னும் நன்கு மசாலா வாசம் வேண்டுமென்றால் ஒரு சிறு துண்டு பட்டை,1 கிராம்பு மற்றும் 1 ஏலக்காயை வெங்காயம் தக்காளியுடன் வதக்கி அரைத்து கொள்ளவும்.
Read more »

Monday, September 24, 2018

புதினா சட்னி | Pudhina Chutney

புதினா சட்னி, சுவையான நொடியில் செய்யக்கூடிய ஒரு சட்னி, இது இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். புதினா சட்னியை தேங்காய் சேர்த்து அல்லது  இல்லாமல் இரண்டு விதமாகவும் பண்ணலாம்,இன்னைக்கு ஷேர் பண்ற ரெசிபி தேங்காய் இல்லாமல் செய்யக்கூடியது, உணவகங்களில் கிடைக்கும் புதினா சட்னி போலவே ரொம்ப சுவையாக இருக்கும். வாங்க இப்போ இந்த புதினா சட்னி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

புதினா சட்னி | Pudhina Chutney

Preparation Time : 5 mins | Cooking Time : 10 minsServes :
Recipe Category: Chutney | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
புதினா - 1/2 கட்டு 
வெங்காயம் - 1 (சிறியது )
தக்காளி - 1 
பூண்டு - 1 பல் 
காய்ந்த மிளகாய் - 2
கடலை பருப்பு  - 1/2 டேபிள் ஸ்பூன் 
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
தாளிக்க 
நல்லெண்ணெய் - 1/2 டீ ஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீ ஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து


செய்முறை
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை கொஞ்சம் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். புதினாவை காம்பு நீக்கி எடுத்து கொள்ளவும் அடுத்து ஒரு வாணலில் நல்லெண்ணெய்  ஊற்றி காய்ந்த பின் அதில் கடலைப்பருப்பை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.அடுத்து அதில் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து ஒரு 30 நொடி வதக்கவும் , பின் அதில் வெங்காயம் மற்றும் சிறுதளவு உப்பு சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.பின் தக்காளி சேர்த்து நன்கு தக்காளி வேகும் வரை  வதக்கி கொள்ளவும்.அடுத்து புதினா சேர்த்து ஒரு 2 நிமிடம் புதினா சுருக்கும் வரை வதக்கி கொள்ளவும். பின் சிறுது நேரம் ஆறவிடவும் .ஆறியபின் மிக்ஸி ஜாரில் போட்டு கூடவே உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்த்து கொள்ளவும்.சுவையான புதினா சட்னி தயார்.
குறிப்புக்கள் 

  • கடலை பருப்பு சட்னிக்கு நல்ல கெட்டித்தன்மையை கொடுக்கும்,அதனால் உங்கள் தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.
Read more »

Thursday, September 20, 2018

பீட்ரூட் பொரியல் | Beetroot Poriyal

பீட்ரூட் பொரியல், ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு பொரியல். இது சாம்பார் மற்றும் கார குழம்பு-வுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். மேலும் பீட்ரூட்டில் நிறைய சத்துகள் உள்ளன, இதனை அடிக்கடி நமது உணவில் சேர்த்து கொள்வது நல்லது, பீட்ரூட்டையை கொண்டு பொரியல் மட்டுமின்றி புலாவ் மற்றும் தயிர் பச்சடி கூட செய்யலாம் ரொம்ப நன்றாக இருக்கும். வாங்க இப்போ இந்த பீட்ரூட் பொரியல் எப்படி செய்வதுனு பார்க்கலாம். 

பீட்ரூட் பொரியல் | Beetroot Poriyal

Preparation Time : 10 mins | Cooking Time : 10 minsServes :
Recipe Category: Poriyal | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 
அரைத்து கொள்ள தேவையான பொருட்கள் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
சின்ன வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 1 
தாளிக்க 
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
கடுகு & உளுந்து - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - சிறுதளவு 

செய்முறை
முதலில் பீட்ரூட்-யை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அடுத்து ஒரு வாணலியில் பீட்ரூட், தேவையான தண்ணீர் மற்றும் உப்பு  சேர்த்து  நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கொரகொரவென்று அரைத்து பீட்ரூட்-யில் சேர்க்கவும்.அடுத்து துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பீட்ரூட் பொரியலில் சேர்க்கவும் .சுவையான பீட்ரூட் பொரியல் தயார்.
குறிப்புக்கள் 
  • பீட்ரூட்-யை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும், சீக்கிரம் வேக உதவும்.
  • காரத்திற்கு ஏற்ப மிளகாய் சேர்த்து கொள்ளவும்.

Read more »

Tuesday, September 11, 2018

கொழுக்கட்டை மாவில் பிள்ளையார் சிலை செய்வது எப்படி??

வீட்டிலே பிள்ளையார் சிலை செய்வது எப்படி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. கொழுக்கட்டை மாவை கொண்டு ரொம்ப சூப்பரா வீட்டிலே இந்த  பிள்ளையார் சிலை செய்துவிடலாம், இதற்கு  என்று தனியாக எதுவும் பொருட்கள் வாங்க தேவையில்லை. கொஞ்சம் கலர்புல்லாக இருக்கட்டும் என்பதற்காக நான் கொழுக்கட்டை மாவில் கலர் சேர்த்துள்ளேன் ஆனால் கலர் சேர்க்காமலும் இதனை செய்தாலும் பார்க்க ரொம்ப அழகா தான் இருக்கும். நீங்களும் வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு செய்து பாருங்கள்.

கொழுக்கட்டை மாவில் பிள்ளையார் சிலை செய்வது எப்படி??

Preparation Time : 20 mins | Cooking Time : 0 minsMakes :
Recipe Category: Idol | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1/2 கப் 
சூடு தண்ணீர் - 1/2 கப்-க்கு கொஞ்சம் கம்மியாக 
நல்லெண்ணெய்  - 1 டீஸ்பூன் 

செய்முறை
முதலில் அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்,கூடவே எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும், அடுத்து அதில் நன்கு கொதிக்கும் தண்ணீரை சேர்த்து கெட்டியாக மாவை பிசைந்து கொள்ளவும்.தேவைக்கேற்ப மாவை இரண்டு பகுதியாக பிரித்து விருப்பபட்ட(நான் மஞ்சள் மற்றும் நீல கலர் சேர்த்துள்ளேன் ) கலரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.அடுத்து மஞ்சள் கலர் மாவை இரண்டு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். அதில் ஒரு உருண்டை கொஞ்சம் பெருசா இருக்கும் மாதிரி பார்த்து கொள்ளவும். பெரிய உருண்டையை கீழே வைத்து அடுத்த உருண்டையை மேலே வைக்கவும் நன்கு ஓட்டும் வரை லேசாக அழுத்திக்கொள்ளவும் . அடுத்து ஒரு சிறு துண்டு மாவை எடுத்து காது மாதிரி செய்துகொள்ளவும்.அதனை மேல் உருண்டைகளின் சைடு-யில் ஒட்டி கொள்ளவும்.அடுத்து கை பகுதி செய்து கொள்ளவும். அதில் நுனி பகுதி தட்டையாக இருக்கும் மாதிரி பார்த்துக்கொள்ளவும்.அதனை பிள்ளையாரின் இடது காதுக்கு கீழே ஒட்டி கொள்ளவும். அதே மாதிரி அடுத்த கையை செய்து ஒட்டி கொள்ளவும். அதில் முன்பகுதி தட்டையாக இருக்கும் மாதிரி பார்த்துக்கொள்ளவும்.அடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொழுக்கட்டை மாதிரி கையில் வைக்கவும்.அடுத்து தும்பிகைக்கு தேவையான மாவை எடுத்து நீளமா உருட்டி கொள்ளவும்.அதனை இரண்டு காதுகளுக்கு இடையே ஒட்டி கொள்ளவும். அடுத்து நீல கலர் மாவை எடுத்து கால் பகுதி செய்து கொள்ளவும்.கால் பகுதியை இரண்டு பக்கமும் ஒட்டி கொள்ளவும். நுனி பகுதியில் கொஞ்சம் மஞ்சள் கலர் மாவை எடுத்து பாதம் போல் ஒட்டி கொள்ளவும். நீல கலர் மாவை எடுத்து தந்தம் மாதிரி வைத்து கொள்ளவும். அடுத்து நீல மற்றும் மஞ்சள் கலர் மாவை கொண்டு கீரிடம் மாதிரி செய்துகொள்ளவும். கடைசியாக கடுகை கண் மாதிரி வைத்து கொள்ளவும்.சூப்பர் பிள்ளையார் சிலை தயார்.
குறிப்புக்கள்:

  • நன்கு நைசாக அரிசி மாவை பயன்படுத்தி கொள்ளவும்.
  • நன்கு கொதிக்கும் தண்ணீரை மாவு பிசைவதற்கு பயன்படுத்தவும்.அப்போதுதான் மாவு நன்கு மிருதுவாக இருக்கும்.
  • கலர் இல்லாமல் கூட இதே மாதிரி செய்யலாம்.

Read more »

இனிப்பு மணி கொழுக்கட்டை | Sweet Mani Kozhukattai

மணி கொழுக்கட்டை,ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு கொழுக்கட்டை ரெசிபி. வரும் விநாயகர் சதுர்த்திக்கு, புதுசா சமையல் செய்றவங்க மோதக கொழுக்கட்டை செய்வது கொஞ்சம் கடினம்னு நெனைச்சீங்கனா, உங்களுக்கு  இந்த மணி கொழுக்கட்டை ரெசிபி ரொம்ப உபயோகமாக இருக்கும். இந்த கொழுக்கட்டைக்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டுவதற்கு தான் கொஞ்சம் நேரம் ஆகும் மற்றபடி ரொம்ப சீக்கரம் செய்யக்கூடிய ஒரு இனிப்பு கொழுக்கட்டை. வாங்க இப்போ எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இனிப்பு மணி கொழுக்கட்டை | Sweet Mani Kozhukattai

Preparation Time : 10 mins | Cooking Time : 10 minsServes :
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1/2 கப் 
சூடு தண்ணீர் - 1/2 கப்-க்கு கொஞ்சம் கம்மியாக 
நல்லெண்ணெய்  - 2 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 
ஏலக்காய் - 1 
வெல்லம் - 1/4 கப் 
துருவிய தேங்காய் -1 டேபிள் ஸ்பூன் 
வெள்ளை எள்ளு - 1 டீஸ்பூன் 

செய்முறை
முதலில் மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்,கூடவே அதில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் ,அடுத்து அதில் நன்கு கொதிக்கும் தண்ணீரை சேர்த்து கெட்டியாக மாவை பிசைந்து கொள்ளவும்.அடுத்து அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். பின் இட்லி சட்டியில்/வேக வைக்கும் பாத்திரத்தில் ஒரு 8-10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.ஒரு பாத்திரத்தில்  வெல்லம் மற்றும் அது மூழ்கும் வரை  தண்ணீர் சேர்த்து வெல்லம்  கரையும் வரை கொதிக்க விடவும்.வெல்லம் கரைந்த பின் அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும் அடுத்து ஒரு கடாயில் எள்ளை நன்கு வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் வெல்ல கரைசலை ஊற்றி பிசுக்கு பதம் வரும்வரை கொதிக்க விடவும்.அடுத்து அதில் ஏலக்காய்,எள்ளு மற்றும் வேகவைத்த கொழுக்கட்டையை சேர்த்து கொள்ளவும்.நன்கு வெல்ல பாகு கொழுக்கட்டையில் ஓட்டும் வரை கலந்து கொள்ளவும் .கடைசியாக தேங்காயை சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.சுவையான இனிப்பு மணி கொழுக்கட்டை தயார்.
குறிப்புக்கள் 
  • நன்கு கொதிக்கும் தண்ணீரை மாவு பிசைவதற்கு பயன்படுத்தவும்.அப்போதுதான் மாவு நன்கு மிருதுவாக இருக்கும்.
  • நன்கு கையில் எண்ணெய் தடவி கொள்ளவும்,அப்போதுதான் கொழுக்கட்டை ஒட்டாமல் உருட்ட  வரும். 
  • எள்ளு நன்கு வாசம் வரும் வரை வறுத்தால் போதும்.

Read more »