Friday, May 18, 2018

தேங்காய் சாதம்

தேங்காய் சாதம், நொடியில் செய்யக்கூடிய ஒரு சுவையான கலவை சாதம். வேகவைத்த சாதம் மட்டும் இருந்தால், தாளிக்குறது மட்டும் தான் வேலை, ஐந்து நிமிடத்தில் இந்த தேங்காய் சாதத்தை செய்துவிடலாம். காலை அவசரத்திற்கு எளிதாக செய்து கொடுக்கக்கூடிய  ஒரு டிபன் பாஸ் ரெசிபி இது.வாங்க இப்போ இதை எப்படி செய்றதுனு பாக்கலாம்.

Coconut Rice

Preparation Time : 5 mins | Cooking Time : 10 minsServes :
Recipe Category: Rice | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வேகவைத்த சாதம் - 1 & 1/2 கப் 
துருவிய தேங்காய் - 1/2 கப் 
இஞ்சி - 1/2 அங்குலம் துண்டு 
சின்ன வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/2  டீ ஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீ ஸ்பூன்
வேர்க்கடலை - 1&1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பில்லை - 1 கொத்து 

செய்முறை
வெங்காயம் மற்றும் இஞ்சியை  தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை பாதியாக வகுந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முதலில் கடுகு மற்றும் உளுந்து தாளித்து கொள்ளவும், அடுத்ததாக கடலை பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.அடுத்து வெங்காயம், இஞ்சி,பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்க்கவும், வெங்காயம் வதங்கிய பின் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.தேங்காயை ஒரு இரண்டு நிமிடம் வதக்கிய பின், சாதம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.சூப்பரா நொடியில் செய்த சுவையான தேங்காய் சாதம் தயார்.
குறிப்புக்கள் 

  • விருப்பப்பட்டால் முந்திரிப்பருப்பு கூட சேர்த்து கொள்ளலாம்.
  • தேவைக்கேற்ப பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்.
  • மிதமாகி போன சாதத்தில் கூட இதை செய்யலாம்.



No comments:

Post a Comment