Wednesday, June 27, 2018

மைதா பூரி | Maida Poori

மைதா பூரி,கோதுமை மாவிற்கு பதில் மைதாவில் செய்யப்படும் இந்த பூரி எங்கள் ஊரில்(திருநெல்வேலி ) பிரபலம். ரொம்ப சுவையான இந்த பூரி கிழங்கு மற்றும் சென்னா மசாலா எப்படி எதனுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். மேலும் கோதுமை பூரி விட இந்த பூரி கம்மியாக தான் எண்ணெயை குடிக்கும், ஆதலால் எங்கள் வீட்டில் கோதுமை பூரியை விட இந்த மைதா பூரி தான் அதிகம் செய்வோம். வாங்க இப்போ இந்த மைதா பூரி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

மைதா பூரி | Maida Poori

Preparation Time : 10 mins | Cooking Time : 15 minsMakes : 8 to 9 
Recipe Category: Breakfast | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
மைதா - 1 கப் 
ரவை  - 1 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
தண்ணீர் - தேவைக்கேற்ப 
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையானளவு 


செய்முறை
முதலில் மைதா,ரவை மற்றும் உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மாவில் நன்கு விரைவி கொள்ளவும்.அடுத்து தேவையானளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.ஒரு 10 நிமிடம் மூடி வைத்து விடவும். பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து கொஞ்சம் தடிமனாக திரட்டி கொள்ளவும்.பொரிப்பதற்கு எண்ணெயை காய வைத்து கொள்ளவும்.எண்ணெயை காய்ந்த பின்(ஒரு சிறு துண்டு மாவை எண்ணெயில் போட்டால் மாவு உடனே மேலே எழுந்து வர வேண்டும் ), திரட்டிய மாவை எண்ணெயில் போட்டு கரண்டியால் மேலே லேசாக அழுத்திவிடவும்.அப்போதுதான் பூரி நன்றாக மேலே எழுந்து வரும்.பூரி நன்கு மேலே எழுந்து வந்த பின், மெதுவாக திருப்பிப்போட்டு அடுத்த பக்கமும் நானு சிவக்க பொரித்து எடுக்கவும்.சுவையான புஸ் புஸ்வென்ற  பூரி தயார்.
குறிப்புக்கள் 
  • மாவை நன்றா கெட்டியாக பிசைந்து கொள்ளவும், இல்லையென்றால் அதிகமாக எண்ணெயை குடிக்கும்.
  • பூரிக்கு மாவு பிசைந்து அதிக நேரம் ஊற விட தேவையில்லை, ஒரு 10-15 நிமிடத்தில் பூரி செய்து விடலாம்.
  • சப்பாத்திக்கு போல் அதிகம் மாவு தொட்டு தேய்க்க வேண்டாம். எண்ணெய் நிறம் சீக்கரம் கருத்து  விடும்.

No comments:

Post a Comment