Tuesday, July 24, 2018

மஷ்ரூம் சுத்தம் செய்வது எப்படி?? | How to clean and cut Mushroom ??

மஷ்ரூம் எப்படி சுத்தம் செய்வது ?? நீங்க புதுசா மஷ்ரூம் குக் பண்ண போறீங்க அல்லது சமையலே இப்போ தான் கற்றுகொள்ளுறீங்க அப்படினா உங்களுக்கு மஷ்ரூம் எப்படி சுத்தம் செய்வதுனு அப்படிக்குற இந்த போஸ்ட் ரொம்ப உதவியாக இருக்கும்.சின்ன வயசுல எங்க வீட்டில எல்லாம் மஷ்ரூம் சமைச்சது கிடையாது அதனால் நான் குக் பண்ண ஆரம்பிச்சபோது  இந்த மஷ்ரூம் எப்படி கிளீன் பண்றதுனு நிறைய சந்தேகம் எனக்கு இருந்துச்சு,அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக படிச்சு தெரிச்சுக்கிட்டேன், நான் கத்துக்கிட்டதை எப்போ உங்களுக்கு ஷேர் பண்றேன் ,வாங்க மஷ்ரூம் எப்படி சுத்தம் செய்வது பார்க்கலாம்.

மஷ்ரூம் எப்படி சுத்தம் செய்வது | How to clean and cut Mushroom

Preparation Time : 10 mins | Cooking Time : 0 minsServes :
Recipe Category: Basics | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
மஷ்ரூம் - 1 பாக்கெட் 

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து கொள்ளவும், அதில் மஷ்ரூம்-யை போட்டு, ஒவ்வொரு மஷ்ரூம்-ஆகா விரல்களால் தேய்த்து மேலே இருக்கும் மண் மற்றும் தூசி போகும் வரை கழுவிக்கொள்ளவும்.அதே போல அணைத்து மஷ்ரூம்-யும் கழுவி எடுத்துக்கொள்ளவும். மஷ்ரூம் நிறம் ரொம்ப பழுப்பாக இருந்தால், மேலே உள்ள தோல் போன்ற பகுதியை உரித்து எடுத்துவிடவும். அதற்கு பின்வரும் படங்களை பாருங்கள்,ஈஸியாக புரியும்.இது கட்டாயம் இல்லை ரொம்ப நிறம் பழுப்பாக இருந்தால் மட்டும் உரித்தால் போதும்.
அடுத்து காம்பின் நுனி பகுதியை மட்டும் லேசாக நறுக்கி கொள்ளவும். இப்போது மஷ்ரூம் தயார்,இனிமேல் உங்களுக்கு விருப்பப்பட்ட சைஸ்யில் மஷ்ரூம்-யை நறுக்கி கொள்ளவும்.அவ்வளவு தான் மஷ்ரூம் இப்போ குக் பண்ண தயார்.
குறிப்புக்கள்

  • உங்களுக்கு மஷ்ரூம் பின்னாடி முடி மாதிரி கருப்பாக இருக்கும் பகுதியும் பிடிக்கவில்லை என்றால்,சிறிய துண்டுகளாக நறுக்கும் முன்பு அதையும் நீக்கி கொள்ளவும் 
  • மஷ்ரூம்-யை ரொம்ப நேரம் தண்ணிரில் ஊற வைக்காதீர்கள்.மஷ்ரூம் ரொம்ப சீக்கரம் தண்ணீரை இழுத்து கொள்ளும்.

No comments:

Post a Comment