Thursday, May 17, 2018

பலாக்கொட்டை பொரியல்

கோடைக்காலத்தில் கிடைக்கும் சுவையான பழங்களில் ஒன்று பலாப்பழம். நிறைய பேருக்கு பலாக்கொட்டையை சாப்பிடலாம் என்று தெரியாமல் பலாப்பழம் சாப்பிட பின் கொட்டையை தூர போட்டுவிடுவார்கள்.அனால் பலாக்கொட்டை அப்படியே வேகவைத்தும் சாப்பிடலாம் அல்லது இந்த மாதிரி பொரியல் செய்து சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். சூப்பரா இருக்கும் இந்த பலாக்கொட்டை பொரியலை நிமிடத்தில் செய்துவிடலாம் ,வாங்க இப்போ எப்படி செய்வதுனு பார்ப்போம்.

Jackfruit Seed Poriyal

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பலாக்கொட்டை - 1 & 1/2 கப் 
வெங்காயம் - 1(சின்னது )
மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை 
உப்பு - தேவைக்கேற்ப
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்  
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து

செய்முறை
முதலில் பலாக்கொட்டை தோலை நீக்கி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.ஒரு பிரஷர் குக்கரில் பலாக்கொட்டை போட்டு முழுகும் வரை தண்ணீர் ஊற்றி , உப்பு சேர்த்து 3 விசில் வேகவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்அடுத்து வெங்காயம் மற்றும் பலாக்கொட்டையை பொடியாக நறுக்கி கொள்ளவும்,ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்து கொள்ளவும். அடுத்து வெங்காயத்தை போட்டு நன்கு சிவக்க வதக்கிக்கொள்ளவும்.பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.அதனுடன் பலாக்கொட்டையை சேர்த்து மசாலாவில் நன்கு பிரட்டி எடுக்கவும். 5-7 நிமிடங்கள் மெல்லிய தீயில் வதக்கவும். கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்சுவையான பலாக்கொட்டை பொரியல் தயார்!!!
குறிப்புக்கள் 

  • வேகவைத்த பின் பலாக்கொட்டை தோல் நீக்குவது கடினமாக இருக்கும். அதனால் முதலே தோலை நீக்கி விடவும்.
  • பலாக்கொட்டையில் லேசாக இனிப்பு இருக்கும், அதனால் கொஞ்சம் கூடுதல் மிளகாய் பொடி சேர்த்து கொண்டால் சுவை நன்றாக இருக்கும்.
  • இதனை சாயந்தரம் ஸ்னாக்ஸ்-ஆக கூட பரிமாறலாம்.

No comments:

Post a Comment