மீன் குழம்பு/கூட்டு , ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான மீன் குழம்பு. இந்த குழம்பு எங்க வீட்டில் தலைமுறையாக செய்து வரக்கூடிய ஒரு ரெசிபி.ரொம்ப கம்மியான பொருட்களை கொண்டு செய்யக்கூடிய ஒரு சூப்பர் மீன் குழம்பு.இன்னைக்கு ரெசிபில் நான் சங்கரா மீனை இந்த குழம்புக்கு பயன்படுத்துள்ளேன்,ஆனால் நீங்க முள்ளு கம்மியா இருக்குற எந்த மீனையும் இந்த குழம்புக்கு பயன்படுத்தலாம். மீன் குழம்பை பொறுத்தவரை புளிப்பு ,கரம் மற்றும் உப்பு இந்த மூன்றும் சரியாக இருந்தால் போதும் மீன் குழம்பு அட்டகாசமாக இருக்கும்.அதனால் நீங்க மீனை குழம்பில் போட்டும் முன்பு புளிப்பு ,கரம் மற்றும் உப்பு இந்த மூன்றும் சரியாக இருக்குதுனு ருசி பார்த்துவிட்டு அப்புறம் மீனை போட்டுங்க, எதுவும் கூட குறைய தேவைப்பட்டால் மீனை போட்டும் முன்பே சரி பண்ணிக்கோங்க, மீனை போட்ட பின்பு மிளகாய் தூள் அல்லது புளி கரைசல் சேர்த்தீங்கனா அதனுடைய பச்சை வாசம் போகுறதுக்குள்ள மீன் ரொம்ப வெந்து குழம்புடன் கரைந்து விடும். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருந்தாலே போதும் சூப்பரான மீன் குழம்பு நீங்களும் செய்யலாம் .வாங்க இப்போ எப்படி இந்த மீன் குழம்பு செய்றதுன்னு பார்க்கலாம்.
செய்முறை
மீன் குழம்பு | சங்கரா மீன் கூட்டு | Fish Kuzhambu
Preparation Time : 30 mins | Cooking Time : 20 mins | Serves : 2-3
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
சங்கரா மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் -15
தக்காளி - 1
புளி - சிறு எலுமிச்சை பழம் அளவு
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 & 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - 1 கொத்து
அரைப்பதற்கு
துருவிய தேங்காய் - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 2
சங்கரா மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் -15
தக்காளி - 1
புளி - சிறு எலுமிச்சை பழம் அளவு
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 & 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - 1 கொத்து
அரைப்பதற்கு
துருவிய தேங்காய் - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 2
முதலில் புளியை ஒரு 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். மீனை நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.தேவையான சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து கொள்ளவும்.வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெயை சூடு பண்ணிக்கொள்ளவும்.அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கிய பின் அதில் புளி கரைசலை சேர்க்கவும்.பின்பு மஞ்சள் ,மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.நன்கு கலந்து கொதி வரவிடவும். இதற்கிடையில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.அரைத்த தேங்காய் விழுதை கடாயில் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.பின் அதில் மீனை சேர்த்து லேசாக கலந்து விட்டு மூடி வைத்து 5-8 நிமிடம் மீனை வேகவிடவும்.சூப்பர் மீன் குழம்பு/கூட்டு தயார்.
குறிப்புக்கள் - சின்ன வெங்காயம் இந்த குழம்புக்கு நல்ல சுவையை கொடுக்கும்,அதனால் முடிந்தளவு அதே பயன்படுத்துங்கள்.
- மீனை குழம்பில் போட்ட பிறகு ரொம்ப கரண்டியால் கிளற வேண்டாம் இல்லையென்றால் மீன் உடைந்து விடும்.
No comments:
Post a Comment