பானகாரம் /பானகம், ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு நீர் ஆகாரம். கோடை காலத்தில் அல்லது ஆடி மாதம் நடைபெறும் தமிழக கோவில் விழாக்களில் இந்த பானம் பக்தர்களின் தாகம் தணிக்க வழங்கப்படும். எளிதில் தாகம் தணிக்கும் மற்றும் ரொம்ப சுவையாக இருக்கும். இதனை வீட்டிலே எப்படி ரொம்ப சுலபாக செய்வதுனு பார்க்கலாம்.

செய்முறை
பானகாரம் | பானகம்| Panakaram | Panakam
Preparation Time : 10 mins | Cooking Time : 0 mins | Serves : 2
Recipe Category: Drinks | Recipe Cuisine: Indian
Recipe Category: Drinks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
எலுமிச்சை பழம் - 1/2
வெள்ளம் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 1 &1/2 கப்
ஏலக்காய் போடி - ஒரு சிட்டிகை
துளசி - சிறுதளவு
எலுமிச்சை பழம் - 1/2
வெள்ளம் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 1 &1/2 கப்
ஏலக்காய் போடி - ஒரு சிட்டிகை
துளசி - சிறுதளவு
செய்முறை
முதலில் வெல்லத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அதனை கரைய விடவும்.
முழுவதும் கரைந்த பின் அதனை வடித்து கொள்ளவும், அடுத்து வெல்ல கரைசலில் எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளவும்.
பின் உப்பு ,ஏலக்காய் போடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
சுவையான பானகாரம் /பானகம் தயார்.
குறிப்புக்கள் 


- துளசி இல்லாததால் சேர்க்கவில்லை, நீங்கள் இருந்தால் கண்டிப்பாக சேர்த்து கொள்ளவும்.
- வெல்லத்தை நன்கு பொடித்து கொள்ளவும் ,சீக்கரம் கரைய உதவும்.
- விருப்பபட்டால் சிறுதளவு சுக்கு போடி சேர்த்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment