Wednesday, May 9, 2018

ரோஸ் மில்க்

ரோஸ் மில்க், ரொம்ப சுவையான வீட்டிலே செய்யக்கூடிய குளிர்பானம். கோடை காலத்துக்கு ரொம்ப ஏற்றது !!! ரோஸ் மில்க் எசென்ஸ்-யை மட்டும் செய்து வைத்துக்கொண்டால் போதும் , எப்போது  ரோஸ் மில்க் தேவை என்றாலும் நிமிடத்தில் செய்து விடலாம். கடையில் கிடைக்கும் ரோஸ் மில்க் எசென்ஸ்-யை விட வீட்டிலே செய்வது ரொம்ப மணமாக இருக்கும் !!!

ரோஸ் மில்க்|Rose Milk

Preparation Time : 10 mins | Cooking Time : 10 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian

தேவையான பொருட்கள் 
சர்க்கரை - 1/2 கப் 
தண்ணீர் - 1/2 கப் 
ரோஸ் எசென்ஸ் - 1/2 டீஸ்பூன் 
ரோஸ் கலர் - 2 துளிகள் 
பால் - 1 கப் (சுடவைத்து ஆறியது )
ஐஸ் கட்டி - தேவைக்கேற்ப 
செய்முறை 
முதலில் சர்க்கரை பாகு தயார் செய்து கொள்வோம், அதற்கு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும், சர்க்கரை முழுவதும் கரைந்த பின் தீயை அனைத்து விடவும் . பாகை நன்கு குளிர விடவும் .பின்பு அதில் ரோஸ் எசென்ஸ் மற்றும் ரோஸ் கலர் சேர்த்து கலக்கவும். இப்போது ரோஸ் மில்க் எசென்ஸ் தயார்.ஒரு டம்ளர்-லில் 2 டேபிள்ஸ்பூன் ரோஸ் மில்க் எசென்ஸ்-யை ஊற்றவும். பின் நன்கு ஆறிய பாலை அதில் ஊற்றி கலக்கவும், தேவைக்கேற்ப ஐஸ் கட்டி போட்டு பரிமாறவும்.சுவையான ரோஸ் மில்க் தயார் !!
குறிப்புகள் 

  • கொடுத்திருக்கும் அளவை கொண்டு 4 கப் ரோஸ் மில்க் தயாரிக்கலாம் .
  • மீதமான ரோஸ் மில்க் எசென்ஸ்-யை பிரிட்ஜ்-லில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment