Tuesday, October 30, 2018

பொட்டுக்கடலை முறுக்கு | Pottukadalai Murukku

பொட்டுக்கடலை முறுக்கு, ரொம்ப சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஒரு சூப்பர் முறுக்கு. முறுக்குக்கு வீட்டில் எப்போதும் உளுந்து மாவு சேர்த்து தான் செய்வோம், இப்போ சமீபத்தில் தான் பொட்டுக்கடலை மாவும்  சேர்த்து செய்யலாம்னு தெரிச்சிச்சு,சரி ட்ரை பண்ணி பார்க்கலாம்னு செய்து பார்த்தேன்,ரொம்ப சூப்பரா நல்ல மொறுமொறுப்பாக இருந்துச்சு. சுவையும் கடையில் கிடைக்கும் முறுக்கு போலவே இருந்துச்சு, நீங்களும் இந்த தீபாவளிக்கு இந்த முறுக்கை செய்து பாருங்கள்.

பொட்டுக்கடலை முறுக்கு | Pottukadalai Murukku

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsMakes : 16 to 18 
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப் (கோபுரமாக )
பொட்டுக்கடலை  - 3 டேபிள் ஸ்பூன் 
வெண்ணெய் - 2 டீ ஸ்பூன் 
எள்ளு - 1 டீஸ்பூன்  
தண்ணீர் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு 
எண்ணெய் - பொரிப்பதற்கு 

செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,உப்பு  மற்றும் எள்ளை எடுத்து கொள்ளவும்,அடுத்து பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடித்து கொள்ளவும் .அதையும் அரிசி மாவுடன் சேர்த்து  நன்கு கலந்து கொள்ளவும் ,அடுத்து அதில் உருகிய வெண்ணெயை சேர்த்து நன்கு மாவுடன் பிசைந்து கொள்ளவும்.பின்பு தேவையானளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக மாவை பிசைந்து வைத்து கொள்ளவும். முறுக்கு பிழியும் கருவியில் தேன்குழல்  அச்சை பயன்படுத்தி கொள்ளவும்.அதில் தேவைக்கேற்ப மாவை நிரப்பி கொள்ளவும்.சிறிய கரண்டி/தட்டில் முறுக்கை பிழிந்து ரெடியாக வைத்து கொள்ளவும்.பொரிப்பதற்கு எண்ணெயை காய வைத்து கொள்ளவும். எண்ணெய் சூடான பின் அதில் பிழிந்து வைத்துள்ள மாவை  மெதுவாக போடவும் .எண்ணெயில் "ஸ்ஸ்"என்ற  சத்தம் அடங்கிய பின் எண்ணெயிலிருந்து முறுக்கை எடுத்துவிடவும். நன்கு ஆறியபின் ஒரு காற்று போகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும். சுவையான மற்றும் மொறுமொறுப்பான முறுக்கு தயார்.
குறிப்புக்கள்
  • முறுக்கை நேரடியாக எண்ணெயில் பிழியும் போது அதிலிருந்து சூடான ஆவி அதிகமாக வரும், அதனால்  முன்னாடியே எப்படி பிழிந்து வைத்து கொண்டால் சுலபமாக இருக்கும் 
  • பொட்டுக்கடலை மாவு நன்கு நைசாக இருக்குவேண்டும், இல்லாவிட்டால் ஒரு முறை சலித்து கொள்ளவும்.



Read more »

Sunday, October 28, 2018

அதிரசம் | Athirasam | Deepavali Sweet

அதிரசம், பச்சரிசி மற்றும் வெல்லம்  கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரியமான இனிப்பு பலகாரம். தீபாவளி மற்றும் சில முக்கியமான பண்டிகைகளுக்கு தலைமுறையாக செய்யப்படும் ஒரு பலகாரம் இது. அத்தகைய  பாரம்பரியமானஅதிரசத்தை எப்படி செய்வதுனு இன்னைக்கு பார்க்கலாம் வாங்க. அதிரசம் செய்வதுற்கு பாகு பதம் மிக முக்கியம் அடுத்து பச்சரிசி மாவு அப்போது செய்ததாக இருக்க வேண்டும், அவ்வளவுதான் இத மட்டும் சரியாக செய்துவிட்டால் போதும் சூப்பரா அதிரசம் செய்துவிடலாம், நீங்களும் இந்த தீபாவளிக்கு செய்து பாருங்கள்.

அதிரசம் | Athirasam

Preparation Time : 3 hr | Cooking Time : 20 minsMakes : 15 
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பச்சரிசி  - 1 கப் 
வெள்ளம் - 3/4 கப்
ஏலக்காய் - 4
எள்ளு - 1 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - 1/4 கப் 
எண்ணெய் - பொரிப்பதற்கு 

செய்முறை
முதலில் பச்சரிசியை நன்கு 2 முறை கழுவி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஒரு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.2 மணி நேரத்துக்கு அப்புறம் தண்ணீரை வடித்து அதனை ஒரு துணியில் 30 நிமிடம் உலர்த்தவும். 30 நிமிடத்திற்கு அப்புறம் அரிசி லேசாக ஈரப்பதத்துடன் இருக்கும் அப்போது மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும்.பொடித்த அரிசி மாவை மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து கொள்ளவும். மீதமாகும் அரிசி குருணையை மீண்டும் ஒரு முறை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து கொள்ளவும்.அடுத்து எள்ளை வெறும் வாணலில் நன்கு பொரியும் வரை வறுத்து அதனை மாவுடன் சேர்க்கவும்.பின் வெல்ல பாகுக்கு தேவையான வெல்லம் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.வெல்லம் கரைந்த பின் அதனை ஒரு முறை வடிகட்டி மீட்டும் ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும், இடையில் பொடித்த ஏலக்காயை சேர்த்துக்கொள்ளவும்.மாவு மற்றும் எள்ளை நன்கு கலந்து வைத்து கொள்ளவும் ,அதில் வெல்ல பாகை ஊற்றி நன்கு கிளறவும்.பாகு நன்கு மாவுடன் கலந்த பின் அதனை மூடி வைத்து  ஒரு நாள் வரை அப்படியே விடவும்.அடுத்த நாள் மாவு கொஞ்சம் கெட்டிப்பட்டு இருக்கும். இப்போது பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை காய வைத்துகொள்ளவும்.மாவை சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் ஒரு இலையில்/பட்டர் பேப்பரில் தட்டி கொள்ளவும்.அதனை எண்ணெயில் சேர்த்து மெல்லிய தீயில் பொரித்து எடுக்கவும்.சுவையான அதிரசம் தயார் .
குறிப்புக்கள் 

  • அதிரசம் பொரிப்பதற்கு எண்ணெய் மிதமான சூட்டிலேயே இருக்க வேண்டும். அதனால் மெல்லிய தீயிலே அடுப்பை வைத்து கொள்ளவும்
  • பாகு ஒரு கம்பி பதம் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் நேரம் ஆனா பின்பும் மாவு தண்ணீயாகவே இருக்கும் கெட்டியாகாது.
  • மாவு தயார் ஆனவுடனே அதிரசம் செய்யலாம் ஆனால் ஒரு நாள் கழித்து செய்தால் சுவை இன்னும் நன்றாக இருக்கும்.
  • தயார் செய்த மாவை ஒரு நாளுக்கு அப்புறம் பிரிட்ஜில் 7-10 நாட்கள் வரை வைத்து தேவையான போது பொரித்து கொள்ளலாம்.
Read more »

Saturday, October 27, 2018

பட்டர் முறுக்கு | Butter Murukku

பட்டர் முறுக்கு, சுலபமாக வீட்டிலே செய்யக்கூடிய ஒரு சூப்பர் முறுக்கு ரெசிபி. மற்ற முறுக்குக்கை  போல இதற்கு shape பற்றி எல்லாம் கவலைபடாமல்  ரொம்ப ஈஸியாக செய்துவிடலாம்.  வரும் தீபாவளிக்கு நீங்களும் இந்த சூப்பர் முறுக்கை நீங்களும் செய்துபாருங்கள்.

பட்டர் முறுக்கு | Butter Murukku

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப் 
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
எள்ளு - 1 டீஸ்பூன் 
சோடா உப்பு - 1 சிட்டிகை 
தண்ணீர் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு 
எண்ணெய் - பொரிப்பதற்கு 


செய்முறை
வெண்ணெய் மற்றும் பொரிப்பதற்காக எண்ணெய் தவிர பிற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்கு கலந்து கொள்ளவும்,அதில் அடுத்து வெண்ணெயை சேர்த்து நன்கு மாவுடன் பிசைந்து கொள்ளவும்.பின்பு தேவையானளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக மாவை பிசைந்து வைத்து கொள்ளவும்.பொரிப்பதற்கு எண்ணெயை காய வைத்து கொள்ளவும். முறுக்கு பிழியும் கருவியில் ஸ்டார் வடிவம் உள்ள அச்சை பயன்படுத்தி கொள்ளவும், அதில் தேவைக்கேற்ப மாவை நிரப்பி கொள்ளவும்.எண்ணெய் சூடான பின் அதில் முறுக்கை பிழிந்து கொள்ளவும். எண்ணெயில் "ஸ்ஸ்"என்ற  சத்தம் அடங்கிய பின் எண்ணெயிலிருந்து முறுக்கை எடுத்துவிடவும்.நன்கு ஆறியபின் ஒரு காற்று போகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும். சுவையான பட்டர் முறுக்கு தயார்.
குறிப்புக்கள் 
  • முறுக்கை நேரடியாக எண்ணெயில் பிழியும் போது அதிலிருந்து சூடான ஆவி அதிகமாக வரும், அதனால்  கையில் ஆவி படாதபடி சற்று உயரத்தில் வைத்து பிழிந்து கொள்ளவும்.
  • பொட்டுக்கடலை மாவு நன்கு நைசாக இருக்கவேண்டும், இல்லாவிட்டால் முறுக்கு வெடிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

Read more »

Thursday, October 25, 2018

பச்சரிசி மாவு | Home made Rice flour

தீபாவளிக்கு செய்யப்படும் நிறைய பலகாரங்களுக்கு பச்சரிசி மாவு தேவைப்படும், அதிலேயும் அதிரசம் போன்ற பலகாரத்துக்கு வீட்டிலே தயாரித்த  பச்சரிசி மாவு தான் நன்றாக இருக்கும். அதுமட்டுமின்றி முறுக்கு மற்றும் சீடை ஆகியவையும் அதில் செய்தலால் இன்னும் ருசியாக இருக்கும். நிறைய மாவு தேவைப்பட்டால் நீங்கள் மாவு மெஷினில் அரைத்து வாங்கி கொள்ளலாம், அப்படியில்லாமல் கொஞ்சமாக தேவைப்படுது அல்லது நீங்கள் இருக்கும் இடத்தில் மாவு மெஷின் இல்லயென்றால், இந்த பதிவு உங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். வாங்க எப்போ வீட்டிலே பச்சரிசி மாவு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

பச்சரிசி மாவு | Home made Rice flour

Preparation Time : 2 hrs | Cooking Time : 15 minsMakes : 2 & 1/2 cup 
Recipe Category: Basic | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 2 கப் 

செய்முறை
முதலில் பச்சரிசியை நன்கு 2 முறை கழுவி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஒரு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.2 மணி நேரத்துக்கு அப்புறம் தண்ணீரை வடித்து அதனை ஒரு துணியில் 30 நிமிடம் உலர்த்தவும். 30 நிமிடத்திற்கு அப்புறம் அரிசி லேசாக ஈரப்பதத்துடன் இருக்கும் அப்போது மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும்.பொடித்த அரிசி மாவை மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து கொள்ளவும். மீதமாகும் அரிசி குருணையை மீண்டும் ஒரு முறை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து கொள்ளவும்.அடுத்து ஒரு வாணலியில் அரிசி மாவை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை கைவிடாமல் வறுத்து கொள்ளவும். அரிசி மாவு நன்கு வறுபட்டபின் மணல் போன்று இருக்கும், அதனை கொண்டு கோலம் கூட போட முடியும். அது தான் பதம், அப்போது மாவை அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறவிடவும், ஆறியபின் அதனை காற்று போகாத பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும்.சுத்தமாக தயாரிக்கப்பட்ட அரிசி மாவு தயார்.
குறிப்புக்கள் 

  • ஊறவைத்த தண்ணீரை நன்கு வடித்து அரிசியை உலரவிடவும், அப்போதுதான் சீக்கரம் உலரும்.
  • அரிசி மாவை நிறம் மாறாமல் நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.

Read more »

Wednesday, October 24, 2018

ரசகுல்லா | பெங்காலி ஸ்வீட் | Rasgulla Sweet

ரசகுல்லா, ரொம்ப சுவையான மற்றும் பிரபலமான ஒரு பெங்காலி ஸ்வீட். நிறைய பேரு இதனை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க, ஆனால் உங்களுக்கு தெரியுமா இதனை வீட்டில் செய்வது ரொம்ப சுலபம். பால் மற்றும் சர்க்கரை இருந்தால் போதும் நிமிடத்தில் இதனை நீங்களே செய்துவிடலாம். ரசகுல்லா செய்வதற்கு முதலில் மிருதுவான பன்னீர் செய்ய வேண்டும்.மிருதுவான பன்னீர்  தயார் என்றால் சூப்பரா வாயில் கரையும் ரசகுல்லா நொடியில் செய்து விடலாம். வாங்க முதலில் மிருதுவான பன்னீர் அப்புறம் சுவையான ரசகுல்லா எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

ரசகுல்லா | பெங்காலி ஸ்வீட் | Rasgulla Sweet

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பால் - 2 கப் 
லெமன் ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன் 
சர்க்கரை - 1 கப் 
தண்ணீர் - 2 & 1/4  கப்
ஐஸ் கட்டி - 2 கப் 
ஏலக்காய் - 2
பிஸ்தா பருப்பு - 3-4


செய்முறை
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு சூடு பண்ணவும், பால் பொங்கி வரும்போது தீயை குறைத்து வைத்து லெமன் ஜூஸை சிறுது  சிறிதாக ஊற்றி கலக்கவும்.பால் முழுவதும் திரிந்து பின் அதில் உடனடியாக ஐஸ் கட்டியை சேர்க்கவும்.பின் அதனை ஒரு துணியில் வடிகட்டி விடவும், தண்ணீரை நன்கு பிழிந்து துணியில் ஒரு அரை மணி நேரம் வடியவிடவும்.அடுத்து அதனை ஒரு தட்டில் போட்டு உள்ளங்கையால் நன்கு பிசைந்து கொள்ளவும். ஒரு 6-8 நிமிடம் பிசைந்த பின் பன்னீர் நன்கு மிருதுவாக பால் போல வந்துவிடும்.அதிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். அடுத்து சர்க்கரை பாகு தயார் செய்ய ஒரு பாத்திரத்தில் சர்க்கரை எடுத்து கொள்ளவும்.அதில் தண்ணீர் சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும், பின் அதில் ஏலக்காய் தூளை சேர்க்கவும்.சர்க்கரை பாகு நன்கு கொதிக்கும் போது பன்னீர் உருண்டைகளை அதில் சேர்க்கவும். பன்னீர் உருண்டைகளை இரண்டு மடங்காகும் வரை கொதிக்க விடவும், அதற்கு மிதமான தீயில் 18-10 நிமிடம் வரை ஆகும்.சுவையான  ரசகுல்லா தயார். நன்கு ஆறவைத்து பிரிட்ஜில் ஒரு 3-4 மணிநேரம் வைத்து பின்பு பரிமாறவும். 
குறிப்புக்கள் 

  • ரசகுல்லா வெந்த பின்பு சர்க்கரை பாகு ரொம்ப தண்ணீராக இருந்தால், ரசகுல்லாவை பாகிலிருந்து எடுத்து விட்டு சர்க்கரை பாகை இன்னும் கொஞ்சம் நேரம் கொதிக்க விட்டு பின் ரசகுல்லாவை அதில் சேர்த்து கொள்ளவும்.
  • ஐஸ் கட்டியை சேர்ப்பது நல்ல மிருதுவான ரசகுல்லாவை கொடுக்கும்.
  • ரசகுல்லாவை மிதமான தீயில் வேகவைக்கவும்.

Read more »