மங்கோ லஸ்ஸி, தயிரில் செய்யக்கூடிய ஒரு சுவையான மாம்பழ குளிர்பானம். இந்த மாம்பழ சீனில் அப்படியே மாம்பழம் சாப்பிடு போர் அடிக்குதா? கொஞ்சம் வித்தியாசமாக இந்த லஸ்ஸியை செய்து பாருங்கள். சுவையாக மட்டுமின்றி இந்த வெயிலுக்கு குடிப்பதற்கு ரொம்ப இதமாகவும் இருக்கும். நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த லஸ்ஸியின் ரெசிபியை இப்போ பார்ப்போம்.

செய்முறை
Mango lassi | மாம்பழம் லஸ்ஸி
Preparation Time : 10 mins | Cooking Time : 0 mins | Serves : 2
Recipe Category: Drinks | Recipe Cuisine: Indian
Recipe Category: Drinks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
மாம்பழம் - 2
சிலென்ற தயிர் - 3/4 - 1 கப்
ஏலக்காய் - 1
சர்க்கரை - தேவைக்கேற்ப
நட்ஸ் - சிறுதளவு (தேவைப்பட்டால் )
குங்குமப்பூ - சிறுதளவு (தேவைப்பட்டால் )
மாம்பழம் - 2
சிலென்ற தயிர் - 3/4 - 1 கப்
ஏலக்காய் - 1
சர்க்கரை - தேவைக்கேற்ப
நட்ஸ் - சிறுதளவு (தேவைப்பட்டால் )
குங்குமப்பூ - சிறுதளவு (தேவைப்பட்டால் )
செய்முறை
முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய மாம்பழ துண்டங்களை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். அதனுடன் ஏலக்காய் மற்றும் தயிரை சேர்க்கவும்.
கடைசியாக தேவைப்பட்டளவு சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸில் அடித்து கொள்ளவும்.
சுவையான மங்கோ லஸ்ஸி தயார். தேவைப்பட்டால் மேலே சிறுதளவு நட்ஸ் மற்றும் குங்குமப்பூ சேர்த்து பரிமாறவும்.
குறிப்புக்கள் 


- புளிக்காத பிரெஷ் தயிரை பயன்படுத்தவும்.
- நார் அதிகமில்லாத எல்லா மாம்பழமும் லஸ்ஸிக்கு நன்றா இருக்கும்.
- மாம்பழத்தின் இனிப்புக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
- சர்க்கரை பதில் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment