உருளைக்கிழங்கு வறுவல் , ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு சைடு டிஷ் . சாம்பார் மற்றும் ரசம் சாதம் உடன் சாப்பிட அருமையாக இருக்கும் . உருளைக்கிழங்கு வறுவலுக்கு முதலே உருளைக்கிழங்கை வேகவைத்தும் செய்யலாம் , ஆனால் இந்த வறுவல் அது தேவையில்லை, உடனே செய்யக்கூடிய ஒரு சூப்பர் வறுவல். குக்கர் -ல உருளைக்கிழங்கு போட மறந்துடுச்சே அப்படிக்குற சமயம் இந்த வறுவல் ரெசிபி உங்களுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும் . வாங்க, இப்போ எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
செய்முறை
Potato Fry| உருளைக்கிழங்கு வறுவல்
Preparation Time : 5 mins | Cooking Time : 15 mins | Serves : 2
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 3
பூண்டு - 2 பல்
சமையல் எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/2 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 1 கொத்து
உருளைக்கிழங்கு - 3
பூண்டு - 2 பல்
சமையல் எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/2 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
உருளைக்கிழங்கை மற்றும் பூண்டை தோல் நீக்கி சிறிதாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி , அது சூடான பின் கடுகு மற்றும் உளுந்து சேர்த்து கொள்ளவும் . கடுகு வெடித்தவுடன் பூண்டை சேர்த்து ஒரு 2 நிமிடம் மெல்லிய தீயில் வதக்கவும் .அடுத்து உருளைக்கிழங்கு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும், உருளைக்கிழங்கை எண்ணையில் ஒரு 3-4 நிமிடம் வதக்கவும். பின்பு மிளகாய் பொடி, சாம்பார் பொடி ,மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் .ஒரு மூடியால் வாணலியை மூடி, உருளைக்கிழங்கை வேகவிடவும் ,அடிப்பிடிக்காமல் இருக்க, இடையே அடிக்கடி கிளறி கொள்ளவும் .அவ்வளவுதான், சுவையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி !!
குறிப்புக்கள் - உங்கள் தேவையான காரத்துக்கேற்ப மிளகாய் பொடி சேர்த்துக்கொள்ளவும்.
- சாம்பார் பொடிக்கு பதில் கரம் மசாலா பொடி சேர்த்தாலும் நன்றாக இருக்கும் .
- உருளைக்கிழங்கை சிறிதாக நறுக்கி கொள்ளவும்,வேக எளிதாக இருக்கும் .
No comments:
Post a Comment