Monday, May 14, 2018

லெமன் சோடா | எலுமிச்சை பழம் சோடா

லெமன் சோடா, வெயில் காலத்திற்கேற்ற ஒரு குளிர் பானம். வெயில் காலம் தொடங்கியவுடன் நம் ஊரில் தெருவுக்கு ஒரு லெமன் சோடா மற்றும் சர்பத் கடையை பார்க்கலாம். அங்கே கிடைக்கும் இந்த சோடா வெயில் நேரத்தில் தாகத்தை தணிப்பதோடு மட்டுமின்றி நன்கு புத்துணர்ச்சியும் தரும். அந்த லெமன் சோடாவை நம் வீட்டிலே எப்படி செய்வது இப்போ பார்க்கலாம் !!! 

Lemon Sosa | எலுமிச்சை பழம் சோடா

Preparation Time : 5 mins | Cooking Time : 5 minsServes :
Recipe Category: Drinks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
எலுமிச்சை பழம் - 2
சர்க்கரை - 1/2 கப் 
தண்ணீர் - 1/2 கப்
சோடா - தேவைக்கேற்ப
ஐஸ் கட்டி - தேவைக்கேற்ப 


செய்முறை
முதலில் சர்க்கரை பாகு தயார் செய்து கொள்வோம், அதற்கு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும், சர்க்கரை முழுவதும் கரைந்த பின் தீயை அனைத்து விடவும் . பாகை நன்கு குளிர விடவும் .எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி , சாரை ஒரு டம்ளரில் பிழிந்து கொள்ளவும் , ஒரு 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை பாகை அதில் ஊற்றவும், அதன்மேல் தேவைக்கேற்ப சோடா ஊற்றவும்.தேவைக்கேற்ப ஐஸ் கட்டிகள் மற்றும் லெமன் துண்டங்களை போட்டு பரிமாறவும்.
குறிப்புக்கள் 
  • எலுமிச்சை பழத்தின் புளிப்பிற்கேற்ப சர்க்கரை பாகை சேர்க்கவும்.
  • ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
  • சோடாவை ஊற்றியவுடன் பரிமாறவும்.



No comments:

Post a Comment