Saturday, May 12, 2018

உளுந்த வடை | மெது வடை

உளுந்த வடை/ மெது வடை , மொறுமொறுபான இந்த மெது வடை உலக பிரசித்தம். சுட சுட காபி / டீ யுடன் சாப்பிட அருமையாக இருக்கும். ரொம்ப சுலபாக செய்யக்கூடிய இந்த வடை ரெசிபியை இன்னைக்கு பார்க்கலாம். முதல்முதலாக இந்த வடை நீங்க செய்யப்போறீங்கனா ? மாவு அரைக்கும் போது கொஞ்சம் கவனம் தேவை. மாவு பக்குவமா அரைத்துவிட்டால் போதும் பாதி வேலை முடிந்த மாதிரி தான், மாவு பக்குவமா அரைப்பதற்கு சில குறிப்புகள் இந்த ரெசிபியில் கொடுத்துளேன்,அதை கடைபிடித்தாலே போதும் முதல் முயற்சிலே சூப்பரா இந்த மெது வடை செய்துடலாம் .

Medu Vadai/ மெது வடை

Preparation Time : 2 hrs | Cooking Time : 20 minsMakes : 12 
Recipe Category: Snack | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
முழு உளுந்து - 1/2 கப் 
வெங்காயம் - 1 
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பில்லை - 1 கொத்து 
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - பொரிப்பதற்கு


செய்முறை
உளுந்தை 2-3 மணி நேரம் நன்கு ஊற வைக்கவேண்டும், பின் ஊறிய தண்ணீரை வடித்துவிட்டு உளுந்தை மிக்ஸி ஜாரில் போடவும் .தேவைக்கேற்ப ஐஸ் வாட்டர் ஊற்றி உளுந்தை நன்கு வெண்ணெய் பதத்திற்கு அரைத்து எடுக்கவும் . அரைத்த மாவில் சிறிதாக அரிந்த வெங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.அடுத்து தேவைக்கேற்ப உப்பும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஒரு பாத்திரத்தில் காய வைக்கவும். கையை நன்கு தண்ணீரில் நனைத்த பின் தேவையான மாவை எடுத்துக்கொள்ளவும் .கட்டைவிரலை கொண்டு சிறிதாக மாவில் ஒரு ஓட்டை போடவும்.அதனை அப்படியே காய்ந்த எண்ணெயில் போட்டு , இருபுறமும் நன்கு சிவக்க பொரித்து எடுக்கவும்.சுவையான மற்றும் மொறுமொறுப்பான மெது வாடை தயார் !!!
குறிப்புக்கள் 
  • மிக்ஸில் அரைக்கும் போது ஐஸ் வாட்டர் ஊற்றி அரைத்தால் மாவு நன்கு பந்து போல வரும்.
  • மாவு அரைக்கும் போது தண்ணீர் தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • மாவு அரைக்கும் போது மிக்ஸி சூடாகாமல் பார்த்து கொள்ளவும்.
  • கையிலே ஓட்டை போட வரவில்லை என்றால் , வாழை இலை பயன்படுத்தி வடையை தட்டி கொள்ளவும்.



No comments:

Post a Comment