Friday, December 6, 2019

ராகி சப்பாத்தி | கேழ்வரகு சப்பாத்தி | Ragi Chapathi

ராகி சப்பாத்தி, ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு சத்தான சப்பாத்தி. ராகி மாவில் களி,கஞ்சி-க்கு பதில் இந்த மாதிரி சப்பாத்தி கூட செய்யலாம், ரொம்ப சுவையாக இருக்கும். சதா சப்பாத்தி செய்யக்கூடிய நேரம் தனக்கும் ஆனால் ராகி சப்பாத்தி கோதுமை சப்பாத்தியை விட ஆரோகியமானது. இதற்கு முன்னாடி நீங்க இந்த ராகி சப்பாத்தியை ட்ரை பண்ணதில்லனா இப்போ ட்ரை பண்ணி பாருங்க,வாங்க இந்த ராகி சப்பாத்தி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.  

ராகி சப்பாத்தி | கேழ்வரகு சப்பாத்தி

Preparation Time : 15 mins | Cooking Time : 15 minsMakes : 8-10 
Recipe Category: Roti | Recipe Cuisine: Indian
ராகி சப்பாத்தி | கேழ்வரகு சப்பாத்தி | Ragi Chapathi ராகி சப்பாத்தி, ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு சத்தான சப்பாத்தி. ராகி மாவில் களி,கஞ்சி-க்கு பதில் இந்த மாதிரி சப்பாத்தி கூட செய்யலாம், ரொம்ப சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப் 
ராகி மாவு - 1 கப் (கோபுரமாக )
உப்பு - தேவைக்கேற்ப 
தண்ணீர் - தேவைக்கேற்ப


செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மற்றும் ராகி மாவை அளந்து எடுத்து அதனை  ஒன்றாக கலந்து கொள்ளவும்.பின் அதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். ஒரு 10-15 நிமிடம் ஊற விடவும்.அடுத்து தேவைக்கேற்ப உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். கோதுமை மாவை தொட்டு சப்பாத்தி போல் மெல்லிசாக திரட்டி கொள்ளவும்.தோசை கல் / தவா-வை காய வைத்து சப்பாத்தி போல் இருபுறமும் சுட்டு எடுக்கவும். சுவையான மற்றும் சத்தான ராகி சப்பாத்தி தயார்.இதனை குருமா,சாம்பார் இப்படி எதனுடமும் பரிமாறலாம். நான் இன்னைக்கு பருப்பு கீரையுடன் பரிமாறியுள்ளேன்.
குறிப்புக்கள் 
  • தேவைக்கேற்ப எண்ணெய்-யை சப்பாத்தி சுடும் போது சேர்த்து கொள்ளவும்.
  • சப்பாத்தி சுடும் போது தீ அதிகமாக வைத்து கொள்ளவும்,அப்போதுதான் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

Read more »