Tuesday, May 22, 2018

குடை மிளகாய் சட்னி

ஒரே மாதிரியே சட்னி செய்து போர் அடிக்குதா ?? கொஞ்சம் வித்தியாசமாக இந்த குடை மிளகாய் சட்னி செய்து பாருங்கள். இட்லி மற்றும் தோசைக்கு சூப்பரா இருக்கும். பச்சை மற்றும் சிவப்பு குடை மிளகாய் இரண்டையும் இந்த சட்னிக்கு பயன்படுத்தலாம், இரண்டுமே நன்றாக இருக்கும். வாங்க இப்போ இந்த சட்னி எப்படி செய்வதுனு பாக்கலாம்.

Kudai milagai Chutney

Preparation Time : 5 mins | Cooking Time : 15 minsServes : 2 to 3 
Recipe Category: Chutney | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
சிவப்பு குடை மிளகாய்  - 2(சிறியது )
கடலை பருப்பு - 2 டீஸ்பூன் 
சிவப்பு மிளகாய் - 2 
தக்காளி - 1
சின்ன வெங்காயம்  - 2
பூண்டு - 1 பல் 
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
தாளிக்க 
நல்லெண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
கடுகு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 


செய்முறை
குடை மிளகாய் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடான பின் கடலை பருப்பு மற்றும் சிவப்பு காய்ந்த மிளகாய் போட்டு நன்கு சிவக்க வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.அடுத்து அதே கடாயில் சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வதக்கவும்.அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு மசிந்த பின் அடுப்பை அணைத்து விடவும். சிறுது நேரம் ஆறவிடவும்.முதலில் கடலை பருப்பு மற்றும் சிவப்பு காய்ந்த மிளகாயை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து கொள்ளவும். அடுத்து வதக்கி வைத்த தக்காளி, குடை மிளகாயை மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்த்து கொள்ளவும்.சுவையான குடை மிளகாய் சட்னி ரெடி.
குறிப்புக்கள் 

  • சிவப்புக்கு பதில் பச்சை குடை மிளகாயை கூட பயன்படுத்தலாம்.
  • நல்லெண்ணெய் இந்த சட்னிக்கு நல்ல மணத்தை கொடுக்கும்.
  • உங்கள் காரத்திற்கேற்ப காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ளவும்.

No comments:

Post a Comment