அப்பளத்தை மைக்ரோ வேவ் ஓவெனில் எண்ணெய் இல்லாமல் அல்லது சில சொட்டு எண்ணெயில் சூப்பராக பொரித்து எடுக்கலாம். எண்ணையில் பொரித்த அப்பளம் போல ரொம்ப சூப்பரா மொறுமொறுவென்று இருக்கும். உங்கள் வீட்டில் மைக்ரோ வேவ் ஓவென் இருந்தால் கண்டிப்பாக இதனை செய்து பாருங்கள், ரொம்ப சுலபமாக மட்டுமில்லாமல் சுவையாகவும் இருக்கும்.
செய்முறை
Microwave Appalam
Preparation Time : 2 mins | Cooking Time : 2 mins | Makes : 5
Recipe Category: Microwave | Recipe Cuisine: Indian
Recipe Category: Microwave | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அப்பளம் - 5
எண்ணெய் - 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால் )
அப்பளம் - 5
எண்ணெய் - 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால் )
ஒரு அப்பளத்தை எடுத்து கொள்ளவும், தேவைப்பட்டால் இரண்டு சொட்டு எண்ணெய் ஒரு பக்கம் ஊற்றி கைகளால் நன்கு எல்லா பக்கமும் தடவவும், அதே போல இன்னொரு பக்கமும் எண்ணையை தடவிக்கொள்ளவும்.அப்பளத்தை மைக்ரோ வேவ் ஓவெனில் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறு தட்டில் வைத்து 20- 30 நொடி மைக்ரோ வேவ்-யில் வைக்கவும்.மொறுமொறு அப்பளம் தயார் !!
குறிப்புக்கள் - மைக்ரோ வேவ் ஓவெனின் பவர்-க்கு ஏற்ப அப்பளம் பொரியும் நேரம் மாறுபடும்.
- 20 நொடியில் இருந்தே ஓவென்-யை கவனமாக பார்த்து அப்பளம் பொரிந்தவுடன் எடுத்து விடவும்.
- எண்ணெயில்லாமலும் அப்படியே அப்பளதை மைக்ரோ வேவ்-ல் பொரிக்கலாம்.
No comments:
Post a Comment