Thursday, January 31, 2019

காஞ்சிபுரம் இட்லி | Kancheepuram Idli | Idly recipe

காஞ்சிபுரம் இட்லி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரசாதமாக தரப்படும் ஒரு சுவையான இட்லி வகை. கோயிலில் இதற்காக தனியாக இட்லி மாவு தயார் பண்ணுவாங்க , ஆனால் இன்னைக்கு ஷேர் பண்ற இந்த ரெசிபில் நாம் வீட்டில் பயன்படுத்தும் இட்லி மாவை கொண்டே சூப்பரா இந்த இட்லியை நொடியில் செய்து விடலாம். வாங்க இப்போ இந்த பாரம்பரியமான காஞ்சிபுரம் இட்லி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

காஞ்சிபுரம் இட்லி | Kancheepuram Idli | Idly recipe

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes : 2 to 3 
Recipe Category: Breakfast/Dinner | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
இட்லி மாவு - 2 கப் 
மிளகு (கொர கொரவென்று  பொடித்தது) - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பெருங்காயத்தூள் - 1/8 டீஸ்பூன் 
நெய் - 1 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - ஒரு கொத்து 


செய்முறை
முதலில் இட்லி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும், அடுத்து ஒரு வாணலியில் நெய்யை சூடு பண்ணி அதில் மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து நன்கு வாசம் வரும் படி தாளித்து கொள்ளவும்.தாளித்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் இட்லி வேக வைக்க சிறு சிறு டம்ளர்-யை எடுத்து கொள்ளவும்.அடுத்து வாழை இலையை சிறு சிறு பட்டையாக வெட்டி எடுத்து கொள்ளவும்.அதனை டம்ளரின் உட்புறத்தை சுற்றி வைக்கவும்.டம்ளரில் முக்கால் பக்கம் இட்லி மாவை ஊற்றவும், அதனை ஒரு வேகவைக்கும் பாத்திரத்தில் அடுக்கி கொள்ளவும்.மிதமான தீயில் 12-15 நிமிடம் அல்லது இட்லி நன்கு வேகும் வரை வேகவைத்து எடுக்கவும்.சிறுது நேரம் ஆறவிட்டு பின் டம்ளரை தலைகீழ் கவிழ்த்தால் இட்லி அழகாக வெளியே வந்துவிடும், பின் வாழை இலையை எடுத்துவிட்டு பரிமாறவும்.உங்களுக்கு விருப்பபட்டால் சிறு சிறு வட்டமாக இட்லியை வெட்டியும் பரிமாறலாம். சாம்பார் மற்றும் சட்னி இரண்டுமே அட்டகாசமாக இருக்கும்.
குறிப்புக்கள்:
  • டம்ளருக்கு பதில் இட்லி தட்டில் கூட இந்த இட்லியை அவிக்கலாம்.
  • நெய் இந்த இட்லிக்கு நல்ல மணத்தையும் சுவையையும் தரும்.

Read more »

Tuesday, January 29, 2019

அவல் நனைச்சது | இனிப்பு அவல் | Sweet Aval

அவல் நனைச்சது/ இனிப்பு அவல், ரொம்ப சீக்கரம் அவலை கொண்டு செய்யக்கூடிய ஒரு பாரம்பரிய ஸ்நாக்/ஸ்வீட் ரெசிபி. சின்ன வயசில் ஸ்கூல் விட்டு வந்த பின் அடிக்கடி அம்மா செய்து கொடுத்த ஒரு திண்பண்டம் இந்த அவல் நனைச்சது. இப்போவும் எப்போவது ஈவினிங் டைம் இந்த இனிப்பு அவல் செய்வேன், ரொம்ப சுலபமாக செய்யக்கூடியது மற்றும் சுவையும் அட்டகாசமாக இருக்கும். இந்த ஹெல்த்தியான ஸ்நாக்-யை  நீங்களும் உங்க குட்டிஸ்-க்கு செய்து கொடுத்து பாருங்க, ரொம்ப என்ஜாய் பண்ணி சாப்பிடுவாங்க.

அவல் நனைச்சது | இனிப்பு அவல்

Preparation Time : 10 mins | Cooking Time : 5 mins minsServes : 1 to 2 
Recipe Category: Sweet/Snack | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அவல் - 1/2 கப் 
பால் - 3/4 கப் 
சீனி - 1 டேபிள் ஸ்பூன் 
துருவிய தேங்காய்  - 1 டேபிள் ஸ்பூன் 
ஏலக்காய் தூள்  - ஒரு சிட்டிகை 

செய்முறை
முதலில் அவலை ஒரு கப்பில் எடுத்து கொள்ளவும், பின் அதில் ஏலக்காய் தூளை சேர்த்து கொள்ளவும். அடுத்து தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு நன்கு கொள்ளவும். பின் பாலை நன்கு காய்ச்சி கொள்ளவும்.சூடான பாலை அவலில் ஊற்றவும். இதனை ஒரு 10 நிமிடம் ஊற விடவும்.சுவையான அவல் சாப்பிட தயார்.
குறிப்புக்கள் 
  • உங்களுக்கு தேவைபட்டால் பாலை கூட ஒரு 1/4 கப் சேர்த்து கொள்ளலாம்.  
  • ஏலக்காய் மற்றும் தேங்காய் அவலுக்கு நல்ல மணமும், சுவையும் கொடுக்கும்.
  • லேசான அவல் இதற்கு ரொம்ப நன்றாக இருக்கும்.

Read more »

Thursday, January 24, 2019

ஸ்பினாச் கார்ன் சான்ட்விச் | Spinach Corn Sandwich

ஸ்பினாச் கார்ன் சான்ட்விச், சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஹெல்த்தியான சான்ட்விச். கீரை மற்றும் காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும்  குட்டிஸ்-க்கு இந்த மாதிரி டேஸ்டாக சான்ட்விச் செய்து கொடுத்து பாருங்கள், ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.  இந்த சான்ட்விச்-யை காலையில் பிரேக்பாஸ்ட்-ஆக அல்லது ஈவினிங் ஸ்னாக்-ஆக கூட செய்து கொடுக்கலாம்.நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.வாங்க இப்போ இந்த ஹெல்த்தியான சான்ட்விச் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

ஸ்பினாச் கார்ன் சான்ட்விச் | Spinach Corn Sandwich

Preparation Time : 10 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Breakfast/Snack | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள்  - 8
ஸ்வீட் கார்ன் - 1/4 கப் 
ஸ்பினாச் கீரை - 1 கப் 
தயிர்/Sour cream - 2 டேபிள் ஸ்பூன் 
பூண்டு - 2 பல் 
இத்தாலியன் சீசனிங் - 1/2 டீ ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
மொசரெல்லா சீஸ் - 1/4 கப் 
எண்ணெய்  - 1 டீஸ்பூன் 
உப்பு & மிளகு தூள் - தேவைக்கேற்ப 
வெண்ணெய் - பிரட் டோஸ்ட் பண்ண தேவையானளவு 

செய்முறை
முதலில் பூண்டு மற்றும் கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும், பின் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் அதில் பூண்டை போட்டு நன்கு வாசம் வரும் வரை வதக்கி கொள்ளவும்.அடுத்து ஸ்வீட் கார்ன்-யை சேர்த்து கொள்ளவும்.கூடவே கீரையை சேர்த்து நன்கு கீரை வேகும் வரை வதக்கி கொள்ளவும், அடுத்து அதில் தேவையானளவு உப்பு,மிளகு தூள் மற்றும் இத்தாலியன் சீசனிங் சேர்த்து கொள்ளவும். அடுப்பை அணைத்து சிறுது நேரம் ஆறவிடவும்.ஒரு துணியில் தயிரை சிறுது நேரம்  தண்ணீர் வடிய கட்டிவைத்து கொள்ளவும்,பின் அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.ஆறிய கார்ன் மற்றும் கீரை கலவையை அதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.அடுத்து ஒரு பிரட் துண்டில் இந்த கலவையை தேவையானளவு வைத்து கொள்ளவும்,மேலே விருப்பமானளவு சீஸ் சேர்த்து இன்னுமொரு பிரட் துண்டால் மூடிவிடவும்.தோசை கல்லை காய வைத்து,வெண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் பிரட் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் பண்ணி எடுத்துக்கொள்ளவும்.சுவையான மற்றும் சத்தான பிரட் சான்ட்விச்  தயார்.
குறிப்புக்கள்:
  • ஸ்பினாச் மற்றும் கார்ன் கலவை ஆறிய பின் தயிரில் சேர்க்கவும் இல்லாவிட்டால் தயிர் திரிந்து போக வாய்ப்புள்ளது.
  • செய்தவுடன் இந்த சான்ட்விச் செய்தவுடனே சாப்பிடவும் இல்லாவிட்டால் பிரட் ஊறிப்போய் கிரிஸ்பாக இருக்காது.
  • உங்களுக்கு விருப்பமான பிரட் வகையை பயன்படுத்தி கொள்ளலாம்.

Read more »

Tuesday, January 22, 2019

கரும்பு சாறு | கரும்பு ஜூஸ் | Karumbu Juice

கரும்பு சாறு/ ஜூஸ், வீட்டிலே கரும்பு ஜூஸ் எப்படி செய்வதுனு இன்னைக்கு பார்க்கலாம். பொங்கலுக்கு வாங்கின கரும்பு இன்னும் அப்படியே இருக்கா ?? யாரும் சாப்பிடவில்லையா ?? சூப்பரான இந்த கரும்பு ஜூஸ்-யை செய்து கொடுத்து பாருங்க, சட்டுனு காலியாகிவிடும்.எங்க ஊரு பக்கம் எல்லாம் கரும்பு கடிச்சு சாப்பிட முடியாதவங்க பக்கத்துல இருக்குற கரும்பு ஜூஸ் கடைக்கு எடுத்து போய் சாறு பிழிந்து எடுத்துக்கிட்டு வந்து குடிப்பாங்க,ஆனா எல்லா பக்கமும் அப்படி கடையில சாறு பிழிந்து  தரமாட்டாங்க அவுங்க வியாபாரம் பாதிக்கும்னு அந்த மாதிரி இடங்களில் இப்படி நாமே வீட்டுல ஈஸியாக கரும்பு ஜூஸ் செய்திடலாம்.

கரும்பு சாறு | கரும்பு ஜூஸ் | Karumbu Juice

Preparation Time : 20 mins | Cooking Time : 0 minsServes :
Recipe Category: Juice | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
கரும்பு - 1/2
இஞ்சி - சிறிய துண்டு 
எலுமிச்சை பழம் - 1/2 மூடி 


செய்முறை
முதலில் கரும்பை அரிவாளால் ஒரு அடி துண்டுகளாக வெட்டி கொள்ளவும் , பின் ஒவ்வொரு துண்டுகளையும் குறுக்கே அரிவாளால் 3 ஓர் 4 பகுதியாக வகுந்து கொள்ளவும்.அடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக கையாலே ஒடித்து விடலாம்,அப்போது அப்படியே தோலை நீக்கி விடவும்.இதே போல் முழுவதற்கும் தோலை நீக்கி கரும்பை தயார் செய்து வைத்துக்கொள்ளவும். பின் இஞ்சியை தோல் சீவி மிக்ஸி ஜாரில் போடவும், அடுத்து கரும்பை போட்டு நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.அரைத்ததை ஒரு வடிகட்டியில் போட்டு ஜூஸ்-யை பிழிந்து எடுக்கவும், அப்புறம் தேவைப்பட்டளவு எலுமிச்சை பழம் பிழிந்து கொள்ளவும்.சுவையான வீட்டிலே செய்த கரும்பு சாறு/ஜூஸ் தயார். குறிப்புக்கள்:
  • சில்லென்று வேண்டுமென்றால் சிறுது நேரம் பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
  • ஐஸ் கட்டி சேர்த்தால் ஜூஸ் தண்ணிவிட்டு போய்விடும்,அதனால் சேர்க்கவேண்டாம்.
  • இஞ்சி மற்றும் லெமன் ஜூஸ் நல்ல சுவை மற்றும் மணத்தை கொடுக்கும்,விருப்பப்பட்ட அளவு சேர்த்து கொள்ளவும்.

Read more »

Sunday, January 20, 2019

பரோட்டா சால்னா | Parotta Salna

பரோட்டா சால்னா, ரொம்ப சுவையான மற்றும் சீக்கரம் செய்ய கூடிய ஒரு வெஜ் சால்னா. இந்த சால்னாவின் சுவை  தென் தமிழகத்தில் பரோட்டா கடையில் கிடைக்கும் சால்னா போலவே இருக்கும்.உங்களுக்கும் கடையில் கிடைக்கும் சால்னா பிடிக்குமென்றால் கண்டிப்பாக இத ட்ரை பண்ணி பாருங்க,ரொம்ப சூப்பரா இருக்கும்.  பரோட்டா-க்கு மட்டுமல்ல இட்லி ,தோசைக்கு கூட அட்டகாசமாக இருக்கும். வாங்க இப்போ எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

பரோட்டா சால்னா | Parotta Salna

Preparation Time : 5 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வெங்காயம்(சிறியது ) - 1 
தக்காளி - 1 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 
பட்டை - 1 அங்குல துண்டு 
கிராம்பு  - 2 
ஏலக்காய் - 2 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
கொத்தமல்லி தூள் - 1 & 1/2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
கொத்தமல்லி இலை  - சிறுதளவு 
எண்ணெய்  - 2 டீஸ்பூன் 
அரைப்பதற்கு தேவையான பொருட்கள் 
வேர்க்கடலை(வறுத்து  & தோல் நீக்கியது ) - 3 டேபிள் ஸ்பூன் 
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் 
சோம்பு - 1 டீஸ்பூன் 
முந்திரி பருப்பு - 4

செய்முறை
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய்  மற்றும் தக்காளி-யை பொடியாக அரிந்து கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெயை  சூடு பண்ணி பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்து கொள்ளவும்,அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.கூடவே பச்சை மிளகாய் கறிவேப்பில்லை மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வெங்காயம் நன்கு வதக்கும் வரை வதக்கி கொள்ளவும்.அடுத்து தக்காளி மற்றும் மசாலா பொடிகளை (மஞ்சள்,மிளகாய்,கொத்தமல்லி) சேர்த்து வதக்கி கொள்ளவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு நைசாக அரைத்து எடுத்து கொள்ளவும்.அரைத்த விழுதை வெங்காய தக்காளி மசாலாவில் சேர்த்து கூடவே தேவையானளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.பின் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும். கடைசியாக கரம் மசாலா சேர்த்து,எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.சுவையான பரோட்டா சால்னா தயார்.
குறிப்புக்கள்
  • சால்னா கொஞ்சம் தண்ணியாக இருந்தால் தான் நல்லாயிருக்கும், அதனால் தண்ணீர் கொஞ்சம் கூடவே சேர்த்து கொள்ளவும்.
  • உங்கள் சுவைக்கேற்ப கரம் சேர்த்து கொள்ளவும்.
  • வேர்க்கடலை பச்சை வாசம் போக கொஞ்சம் நேரமாகும்,அதனால் மற்ற குழம்பை விட இதை கூட கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்.

Read more »

Thursday, January 17, 2019

பிச்சு போட்ட கோழி கறி | சிக்கன் கறி

பிச்சு போட்ட கோழி கறி, ரொம்ப சுவையான ஒரு சிக்கன் கறி. இது சாதம் மற்றும் இட்லி,தோசை இப்படி எதனுடவும் சாப்பிடவும் அருமையாக இருக்கும். சேலம் பக்கம் உள்ள ரோடு சைடு கடைகளில் இந்த பிச்சு போட்ட சிக்கன் கறி ரொம்ப பிரபலம். கொஞ்ச நாட்களுக்கு முன்பு இந்த ரெசிபி பற்றி கேள்வி பட்டு ஒரு நாள் செய்து பார்த்தேன் ரொம்ப நன்றாக இருந்தது. அதிலிருந்து இது ரெகுலராக வீட்டில் செய்யும் ஒரு சிக்கன் டிஷ்-ஆக மாறிவிட்டது.நீங்களும் வித்தியாசமான சிக்கன் கறி செய்து பார்க்கலாம்னு நெனைச்சீங்கனா இதனை ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப நன்றாக இருக்கும்.

பிச்சு போட்ட கோழி கறி

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes : 2 to 4 
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
சிக்கன்(எலும்பு இல்லாத ) - 1/2 கிலோ 
வெங்காயம் - 2(பெரியது )
தக்காளி - 2 
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு 
மஞ்சள் தூள்  - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
பட்டை - 1 அங்குல துண்டு 
கிராம்பு - 6
ஏலக்காய் - 2 
உப்பு - தேவையானளவு 

செய்முறை
முதலில் சிக்கன்-யை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும். பின் அதனை பிரஷர் குக்கரில் சேர்த்து கூடவே 1/8 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.அடுத்து அதில் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, தேவையான உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.அனைத்தையும் கலந்து ஒரு 3 விசில் வேகவைத்து கொள்ளவும்.அடுத்து வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்து கொள்ளவும்.பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து கொள்ளவும்.வெங்காயம் நன்கு வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும், இஞ்சி பூண்டு வாசம் போனபின் அதில் தக்காளி சேர்த்து கொள்ளவும்.அடுத்து அதில் மஞ்சள்,மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி கொள்ளவும்.சிக்கன்-யை சிறுது சிறிதாக பிச்சு கொள்ளவும்.மசாலா நன்கு வதங்கிய பின் சிக்கன் மற்றும் வேக வைத்த தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.தண்ணீர் நன்கு வற்றும் வரும் வரை வதக்கவும், பின் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.சிக்கன் நன்கு சுருண்டு வரும் வதக்கி கொள்ளவும். பின் கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.சுவையான பிச்சு போட்ட கோழி கறி தயார்.
குறிப்புக்கள்
  • தேங்காய் எண்ணெய் இந்த கறிக்கு நல்ல மணத்தை கொடுக்கும்.
  • கரம் ரொம்ப கம்மியாக இருந்தால் போதும் என்றால் மிளகாய் தூளை தவிர்த்து வெறும் மிளகு தூளை மட்டும் சேர்த்து கொள்ளலாம்.
  • எலும்பு இல்லாத சிக்கன் கிடைக்கவில்லையென்றால், எலும்பு உள்ளதே பயன்படுத்தி கொள்ளலாம், வேக வைத்த பின் எலும்பை நீக்கி கொள்ளவும்.

Read more »