முட்டையை அவிப்பது என்ன அவ்வுளவு கஷ்டமா? இதற்கு ஒரு போஸ்ட்-ஆ அப்படினு நீங்கள் நினைக்கலாம். கண்டிப்பாக கஷ்டம் எல்லாம் இல்லை , ஆனால் சில நுணுக்கங்கள் உள்ளன அதை தெரிந்து வைத்து கொண்டால் ஒவ்வொரு முறையும் சரியான பதத்தில் முட்டையை அவித்து எடுக்கலாம். முட்டையை தேவையான நேரம் வேகவைக்கவில்லை என்றால் மஞ்சள் கரு வேகாமல் தண்ணியாக இருக்கும்,அதே போல அதிக நேரம் வேகவைத்துவிட்டால் மஞ்சள் கருவை சுற்றி கருப்பு வளையம் வந்துவிடும். உங்களுக்கும் எப்படி நடந்த அனுபவம் இருந்தால் உங்களுக்கு இந்த ரெசிபி உபயோகமாக இருக்கும். ஒரு இரண்டு வருடமாக இந்த முறையில் தான் நான் முட்டையை அவிக்குறேன்,ஒவ்வொவொரு முறையும் அவித்த முட்டையை ஃபெர்பெக்டாக இருக்கு.
செய்முறை
How to boil eggs??
Preparation Time : 30 mins | Cooking Time : 3 mins | Makes : 3
Recipe Category: Basics | Recipe Cuisine: General
Recipe Category: Basics | Recipe Cuisine: General
தேவையான பொருட்கள்
முட்டை - 3
முட்டை - 3
ஒரு பெரிய பாத்திரத்தில் முட்டை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதி வர விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதி வந்த பின் அதில் ஒவ்வொரு முட்டையாக மெதுவாக போடவும்.
சரியாக 1 & 1/2 நிமிடம் முட்டையை கொதிக்க விட வேண்டும், பின் அடுப்பை அணைத்து விட்டு ஒரு மூடியால் 30 நிமிடம் முட்டையை மூடி வைத்துவிடவும்.முட்டையின் ஓட்டை உரிப்பதற்கு முன், வெந்நீரை தூர ஊற்றி விட்டு , நல்ல குளிர்ந்த நீரில் ஒரு 2 நிமிடம் முட்டையை காட்டி எடுத்து முட்டையை உரித்தால் எளிதாக உரிக்க வரும்.
சூப்பரா அவித்த முட்டை தயார்.
குறிப்புகள்

- முட்டை மூழ்கும் அளவு தண்ணீர் இருக்க வேண்டும்.
- உரிப்பதற்கு முன் 30 நிமிடம் முட்டையை மூடி வைப்பது அவசியம்.
No comments:
Post a Comment