Thursday, November 22, 2018

பொரி உருண்டை | Pori Urundai

பொரி உருண்டை, சுலபமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு பலகாரம். பெரும்பாலும் இதனை கார்த்திகை தீபம் பண்டிகைக்கு செய்வார்கள், நாளை  கார்த்திகை தீபம்  சுலபமாக செய்யக்கூடிய இந்த பொரி உருண்டையை நீங்களும் செய்து பாருங்கள். இதனை செய்வது ரொம்ப சுலபம், வெல்ல பாகு செய்வது தான் வேலை, மற்றபடி சற்றென்று செய்துவிடலாம்,வாங்க இப்போ பொரி உருண்டை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

பொரி உருண்டை | Pori Urundai

Preparation Time : 5 mins | Cooking Time : 15 minsMakes : 10 
Recipe Category: Snack | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பொரி - 2 கப் 
வெல்லம் - 1/2 கப் 
சுக்கு பொடி - 1/4 டீஸ்பூன் 
தண்ணீர்  - தேவையானளவு 
நெய் - சிறுதளவு 


செய்முறை
முதலில் வெல்லத்தை சிறிதாக பொடித்து ஒரு வாணலில் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லம் கரைந்த பின் ஒரு முறை வடிகட்டி மீண்டும் அதனை கொதிக்க விடவும்.கூடவே சிறுது சுக்கு பொடி சேர்த்துக்கொள்ளவும் வெல்லம் உருட்டும் பதம்(சிறுதளவு வெல்ல பாகை எடுத்து தண்ணீரில் ஊற்றவும், பாகு கரையாமல் கையில் எடுத்து உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும் ) வந்த பின் அடுப்பை அனைத்து உடனே பொரியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.கையில் லேசாக நெய் தடவி பொரியை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.சுவையான பொரி உருண்டை தயார்.குறிப்புக்கள் 
  • சுக்கு பொடிக்கு பதில் ஏலக்காய் பொடி கூட சேர்க்கலாம்.
  • பொரி லேசாக சூடாக இருக்கும் போதே உருண்டை பிடித்து விடவும், ஆறியபின் உருண்டை பிடிக்க முடியாது.



Read more »

Tuesday, November 20, 2018

ஓட்ஸ் உப்புமா | Oats Upma

ஓட்ஸ் உப்புமா, சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு சூப்பர் சிற்றுண்டி. முதலில் எனக்கு அவ்வளவாக இந்த ஓட்ஸ் உப்புமா பிடிக்காது, எப்போது செய்தாலும்  கொஞ்சம் குழைந்து போய்விடும்,எனக்கு உப்புமாவே கொஞ்சம் உதிரியாக இருந்தால் தான் பிடிக்கும். அப்புறம் உதிரியாக செய்றது எப்படினு தெரிந்தபின் இப்போ இதனை அடிக்கடி செய்றேன், ரொம்ப சுவையாகவும் இருக்கு. வாங்க இந்த சத்தான ஓட்ஸ் உப்புமா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

ஓட்ஸ் உப்புமா | Oats Upma

Preparation Time : 5 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Breakfast | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கப் 
வெங்காயம் - 1/2
தண்ணீர் - 1/2 கப் 
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் 
சாம்பார் தூள் - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை 
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
கொத்தமல்லி இலை - சிறிதளவு 
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை
முதலில் வெங்காயத்தை  பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலில் எண்ணெய் காய வைத்து கடுகு உளுந்து தாளித்து கொள்ளவும்.அடுத்து வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் ஓட்ஸ்  சேர்த்து கொள்ளவும்.பின் மஞ்சள்,மிளகாய் சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து 1/2 கப் தண்ணீரை ஓட்ஸ் முழுவதும் படும்படி சிறுசிறுதாக ஊற்றி கலந்து கொள்ளவும்.அடுப்பில் தீயை சிறிதாக வைத்து ஒரு மூடி போட்டு நன்கு ஓட்ஸ்-யை வேகவிடவும். அடிபிடிக்காமலிருக்க அடிக்கடி கிளறி கொள்ளவும். சுவையான மற்றும் சத்தான ஓட்ஸ் தயார். பரிமாறும் போது சிறுது கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளவும்.
குறிப்புக்கள்

  • ஓட்ஸ் உப்புமா நன்கு குழைய வேண்டுமென்றால் மேலும் 1/2 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  • 1/2 கப் தண்ணீரை நன்கு அனைத்து ஓட்ஸிலும் படும்படி சேர்த்து கொள்ளவும், அப்போது தான் ஓட்ஸ் நன்கு வெந்து மிருதுவாக இருக்கும்.

Read more »

Friday, November 16, 2018

கல்யாண ரசம் | மைசூர் ரசம் | Kalyana Rasam

கல்யாண ரசம்/மைசூர் ரசம், ரொம்ப சுவையான ஒரு ரசம் வகை. கல்யாண வீடுகளில் செய்யப்படும் இந்த ரசத்தின் சுவையும் மணமும் அட்டகாசமாக இருக்கும்.உங்களுக்கு கல்யாண வீட்டு ரசம் பிடிக்குமென்றால் கண்டிப்பாக இதனை செய்து பாருங்கள். சாதத்துடன் இந்த ரசம் மற்றும் ஒரு அப்பளம் இருந்தால் கூட போதும் அட்டகாசமான சாப்பாடு தயார்.வாங்க எப்போ இந்த கல்யாண ரசம் எப்படி செய்வதுனு பார்க்கலாம். 

கல்யாண ரசம் | மைசூர் ரசம்| Kalyana Rasam

Preparation Time : 30 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Rasam | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 
தக்காளி - 1 
புளி - ஒரு எலுமிச்சை அளவு 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 
பெருங்காயத்தூள் - 1/8 டீஸ்பூன் 
நெய் - 1 டீஸ்பூன் 
கடுகு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
கொத்தமல்லி - சிறுதளவு 
வறுத்து பொடி செய்து கொள்ள தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன் 
மிளகு - 1 & 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் 


செய்முறை
முதலில் புளியை ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும், பின் வறுத்து கொள்ள வேண்டிய பொருட்களை நன்கு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.அதனை சிறுது நேரம் ஆற விட்டு நன்கு நைசாக பொடித்து கொள்ளவும். துவரம் பருப்பை நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்,அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடு பண்ணி அதில் கடுகு மற்றும் கறிவேப்பில்லை தாளித்து கொள்ளவும் ,பின் பொடியாக நறுக்கிய தக்காளி பழத்தை அதில் சேர்க்கவும் ஒரு நிமிடம் வதக்கவும்.அடுத்து ஊற வைத்த புளியிலிருந்து புளி கரைசல் எடுத்து அதில் சேர்க்கவும்,பின் வேகவைத்த பருப்பு மற்றும் பொடித்த பொடியை சேர்க்கவும்.அடுத்து மஞ்சள் தூள், உப்பு மற்றும் பெருங்காத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.ஒரு 5-8 நிமிடம் கொதித்த பின்,அதில் கொத்தமல்லி தழை  சேர்த்து இறக்கவும்.சுவையான மற்றும் மணமான ரசம் தயார்.
குறிப்புக்கள் 
  • கரம் அதிகமாக வேண்டுமென்றால் தாளிக்கும் போது  2 காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ளவும்.
  • நெய்  இந்த ரசத்துக்கு நல்ல மணத்தை கொடுக்கும்.

Read more »

Saturday, November 3, 2018

சுசியம் | சுசியம் செய்முறை | Susiyam

சுசியம், கடலை பருப்பு கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரியமான தீபாவளி பலகாரம். முறுக்கு மற்ற இனிப்பு வகைகள் எல்லாம் தீபாவளிக்கு முன்னமே செய்தாலும், இந்த சுசியும் மற்றும் வடை வகைகளை தீபாவளி அன்று காலையில் தான் செய்து சாமிக்கு படைத்தது பின் சாப்பிடும் பழக்கம் அநேக இடங்களில் இன்றும் உள்ளது. அத்தகைய பாரம்பரியமான சுசியம் எப்படி செய்வதுனு இப்போ பார்க்கலாம்.

சுசியம் | சுசியம் செய்முறை | Susiyam

Preparation Time : 1 hr | Cooking Time : 30 minsMakes : 15 
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பூர்ணத்துக்கு தேவையான பொருட்கள் 
கடலை பருப்பு - 1/2 கப் 
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் 
ஏலக்காய் - 2 
வெல்லம் - 1/2 கப் 

மேல் மாவிற்கு தேவையான பொருட்கள்
மைதா - 1/2 கப் 
உப்பு - 1/8 டீஸ்பூன்

தண்ணீர் - தேவையானளவு 


செய்முறை
முதலில் கடலை பருப்பை  ஒரு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் கடலைப்பருப்பை சேர்த்து வேகவிடவும்.கடலை பருப்பை எடுத்து விரல்களில் இடையே வைத்து அழுத்தினால் மைய வேண்டும், அந்த பதத்தில் கடலை பருப்பை அடுப்பிலிருந்து இறக்கி தண்ணீரை வடித்து நன்கு ஒரு துணியில்/அல்லது tissue பேப்பர்-ல் உலர விடவும்.கடலை பருப்பு லேசாக உலர்ந்த பின் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து கொள்ளவும்.பின் ஒரு கடாயில் வெல்லம் மற்றும் அது மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து வெல்லம்  கரையும் வரை கொதிக்க விடவும்.பொடித்த ஏலக்காயை அதில் சேர்த்து கொள்ளவும்.அடுத்து அதில் பொடித்த கடலைப்பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.பூர்ணம் நன்கு கெட்டியாக வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆறியபின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.இப்போது மேல் மாவுக்கு தேவையான மைதா மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும், அதில் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மாவை கெட்டியாக கரைத்து கொள்ளவும்.அடுத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை காய வைத்து கொள்ளவும்.பின்  ஒவ்வொரு கடலை பருப்பு உருண்டைகளை மாவில் தோய்த்து  எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.இரண்டு பக்கமும் வெந்த பின் எண்ணெயிலிருந்து எடுத்து ஒரு tissue பேப்பரில் போட்டு கொள்ளவும்.சுவையான சுசியம் தயார்.
குறிப்புக்கள் 
  • வெல்லத்தில் தூசி இருந்தால் வெல்லம் கரைந்த பின் அதனை ஒருமுறை வடிகட்டிக்கொள்ளவும்.
  • மைதா மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும், அப்போது தான் எண்ணெயில் பொரிக்கும் போது பூரணம் வெளியில் வராமல் இருக்கும். 
Read more »

Friday, November 2, 2018

பாதுஷா | Badusha | Deepavali Sweet

பாதுஷா,ஒரு சுவையான இனிப்பு வகை. சாப்பிட சாப்பிட திகட்டாத ஒரு ஸ்வீட்!!! மற்ற இந்திய இனிப்புகள் போல் ரொம்ப ஸ்வீட் இல்லாமல்,லேசான இனிப்புடன் நன்கு மிருதுவாக இருக்கும். வரும் தீபாவளிக்கு இந்த பிரமாதமான பாதுஷாவை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். நிறைய பேர் நினைப்பது போல் இதனை செய்வது ஒன்றும் கஷ்டமில்லை,ரொம்ப சுலபமாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே செய்துவிடலாம். வாங்க இப்போ இந்த சுவையான பாதுஷாவை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.   

பாதுஷா | Badusha | Deepavali Sweet

Preparation Time : 10 mins | Cooking Time : 25 minsMakes : 10 
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
மைதா - 1 கப் 
வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை 
உப்பு - ஒரு சிட்டிகை 
சர்க்கரை - 1 டீஸ்பூன் 
தயிர் - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - பொரிப்பதற்கு 
சர்க்கரை பாகுக்கு தேவையானவை 
சர்க்கரை -1/2 கப் 
ஏலக்காய் - 2
குங்குமப்பூ - சிறுதளவு 
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
தண்ணீர் - தேவையானளவு 


செய்முறை
முதலில் வெண்ணையை உருக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும், கூடவே 1 டீஸ்பூன் எண்ணெய் & சர்க்கரை , பேக்கிங் சோடா, உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.அடுத்து அதில் மைதா மாவை சேர்த்து நன்கு கைகளால் கலந்து கொள்ளவும்.பின் தேவையானளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக மாவை பிசைந்து கொள்ளவும், ஒரு 10 நிமிடம் மூடி வைக்கவும். அடுத்து சர்க்கரை பாகு-க்கு தேவையான சர்க்கரை மற்றும் மூழ்கும் வரை தண்ணீர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொதி வரவிடவும்.சர்க்கரை கரைந்து ஒரு கம்மி பதம் வரும் வரை கொதிக்க விடவும்,பின் அடுப்பை அணைத்து அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.கடைசியாக குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூளையும் சேர்த்து கொள்ளவும். அடுத்து மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்,பின் அதன் நடுவில் ஒரு ஓட்டை போட்டு கொள்ளவும்.பொரிப்பதற்கு எண்ணெய் காய வைத்து கொள்ளவும், பின் அதை மெல்லிய தீயில் வைத்து பாதுஷா-வை போட்டு பொரித்து எடுக்கவும்.இரண்டு பக்கமும் நன்கு சிவந்து வரும் வரை வேகவிட்டு எடுத்து உடனே சர்க்கரை பாகில் போடவும்.ஒரு இரண்டு நிமிடம் சர்க்கரை பாகில் பிரட்டி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். இதே மாதிரி அனைத்தையும் பொரித்து எடுத்து சர்க்கரை பகலில் போட்டு எடுத்து கொள்ளவும்.சுவையான மற்றும் மிருதுவான பாதுஷா தயார்.
குறிப்புக்கள் 
  • பாதுஷா-வை மெல்லிய தீயில் தான் பொரிக்க வேண்டும் , அப்போதுதான் உள்ளவரை நன்கு வேகும்.
  • சர்க்கரை பாகு இடையில் கெட்டியாக ஆகிவிட்டால் மீண்டும் லேசாக சூடுபடுத்தி கொள்ளவும்
  • குங்குமப்பூ இருந்தால் சேர்த்து கொள்ளுங்கள், இல்லாவிட்டால் தேவையில்லை அதனை விட்டுவிடலாம்.

Read more »