கோழி கறி,சுலபமாக தேங்காய் இல்லாமல் செய்யக்கூடிய இந்த கிரேவி சப்பாத்தி மற்றும் டிபன் ஐட்டமுடன் சாப்பிட அருமையாக இருக்கும். "One Pot recipe " என்பது இப்போது ரொம்ப பிரபலம், அதாவது ரெசிபி ஆரம்பித்திலிருந்து முடியும் வரை ஒரே பாத்திரத்தை படுத்தி செய்வது , இந்த கோழி கறியும் அப்படி செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான். இந்த சிக்கன் கிரேவியை செய்வது மட்டுமல்ல அதற்கு அப்புறம் பாத்திரம் கழுவதும் ரொம்ப சுலபம் :-) வெங்காயம் பயன்படுத்தி செய்யப்படும் இந்த கிரேவி ரொம்ப ருசியாகவும் மற்றும் எளிதில் கெட்டுப்போகாமலும் இருக்கும். இந்த சூப்பர் சிக்கன் கிரேவியை செய்வது எப்படினு பாக்கலாம் வாங்க.


செய்முறை

Chicken Curry| சிக்கன் கிரேவி
Preparation Time : 15 mins | Cooking Time : 25 mins | Serves : 3 to 4
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
கோழி - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 டீ ஸ்பூன்
கொத்தமல்லி பொடி - 2 & 1/2 டீ ஸ்பூன்
எண்ணெய் - 1 & 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1/2 அங்குலம் துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி இலை - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கோழி - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 டீ ஸ்பூன்
கொத்தமல்லி பொடி - 2 & 1/2 டீ ஸ்பூன்
எண்ணெய் - 1 & 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1/2 அங்குலம் துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி இலை - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் கோழியை நன்கு சுத்தப்படுத்தி எடுத்து வைத்து கொள்ளவும் . ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும் , மற்றொரு வெங்காயத்தை அரைப்பதற்காக கொஞ்சம் பெரிதாக நறுக்கி கொள்ளவும். பிரஷர் குக்கரில் எண்ணெய்யை காய வைத்து பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்கவும் .
அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை போடவும், வெங்காயம் சற்று நிறம் மாறும் வரை வதக்கவும். மற்றொரு வெங்காயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.
அரைத்த வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை குக்கரில் போட்டு வதக்கவும். பச்சை வாசம் போனபின் அதில் தக்காளியை போடவும்.
அடுத்து மஞ்சள்,மிளகாய் மற்றும் கொத்தமல்லி தூளை போடவும். அனைத்தையும் நன்றாக கிளறி விடவும். லேசாக எண்ணெய் கசியும் வரை மசாலாவை வதக்கவும்.
பின்பு கோழி மற்றும் தேவையானளவு உப்பை போடவும்,கோழியை நன்கு மசாலாவில் பிரட்டி எடுக்கவும்.
1/2 கப் போல தண்ணீர் ஊற்றி,நன்கு ஒரு முறை கலந்து விடவும். பிரஷர் குக்கரை மூடி , மூன்று விசில் வேகவிடவும்.
பிரஷர் தன்னால் அடங்கிய பின், குக்கர்யை திறந்து கொத்தமல்லி இலையை தூவவும்.
சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய கோழி கறி தயார் !!!
குறிப்புக்கள் 






- கிரேவி அதிகமா வேண்டுமென்றால் கூட ஒரு வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.
- விருப்பப்பட்டால் 1/2 டீஸ்பூன் கரம் மசாலா கடைசில் சேர்த்து கொள்ளவும்.
No comments:
Post a Comment