Tuesday, February 11, 2020

பிரிஞ்சி சாதம் | Brinji Rice

பிரிஞ்சி சாதம், சுவையான எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் ரைஸ் ரெசிபி. பிரியாணி இலை/பிரிஞ்சி இலை சேர்த்து செய்வதால் இதற்கு இந்த பெயர். இந்த பிரிஞ்சி சாதம் குர்மா மற்றும் நான்-வெஜ் கிரேவி கூட சாப்பிட அருமையாக இருக்கும். இந்த பிரிஞ்சி சாதத்தை தேங்காய் பால் சேர்த்து பண்ணினால் ரொம்ப சுவையாக இருக்கும்,அது எப்படினு இன்னைக்கு நம்ம பார்க்கலாம். 

பிரிஞ்சி சாதம் | Brinji Rice

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Rice | Recipe Cuisine: Indian
Brinji Rice, Coconut milk rice, Bay leaf rice,பிரிஞ்சி சாதம் பிரிஞ்சி சாதம், சுவையான எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் ரைஸ் ரெசிபி.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1/2 கப்  
தண்ணீர் - 1/2 கப்
தேங்காய் பால் -1/2 கப் 
வெங்காயம் - 1/2
தக்காளி - 1/2
பச்சை மிளகாய் - 2 
 மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - சிறுதளவு 
புதினா  மற்றும் கொத்தமல்லி  - ஒரு கைப்பிடி 
பட்டை - 1/2 அங்குல துண்டு 
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
நெய் - 1  டீஸ்பூன் 
எண்ணெய் - 1 டீஸ்பூன்  
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
அரிசி-யை ஒரு 20 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை  மெலிதாக, தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி  கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக வகுந்து கொள்ளவும். தேவையான புதினா மற்றும் கொத்தமல்லியை சுத்தப்படுத்தி எடுத்து வைக்கவும்.அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து  எண்ணெய்  ஊற்றி கொள்ளவும். எண்ணெய்  சூடான பின் பட்டை,கிராம்பு ,ஏலக்காய் மற்றும் பிரியாணி இலையை சேர்த்து ஒரு 30 நொடி வதக்கவும். பின் வெங்காயம் மற்றும் சிறுதளவு உப்பு , பச்சை மிளகாய்  சேர்த்து வதக்கி கொள்ளவும்.வெங்காயம் நன்கு வதங்கிய பின் அதில் புதினா, கொத்தமல்லி &  இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும்.இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனபின் அதில் தக்காளி மற்றும் தேங்காய் பாலை சேர்க்கவும்.அடுத்து அதில் தண்ணீர் மற்றும்  மஞ்சள் தூள் சேர்த்து  கொள்ளவும்.தேவையானளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதி வர விடவும் .ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு சேர்க்கவும். கடைசியாக நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.குக்கரை மூடி 3 விசில் வேகவிடவும்.சுவையான பிரிஞ்சி சாதம் தயார்.
குறிப்புக்கள் 
  • கொடுத்துள்ள பச்சை மிளகாய் சாதத்திற்கு மிதமான காரத்தை கொடுக்கும்.
  • தக்காளியை ரொம்ப வதக்க வேண்டாம், சாதத்தின் நிறம் மாறிவிடும்.

Read more »