பொட்டுக்கடலை முறுக்கு, ரொம்ப சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஒரு சூப்பர் முறுக்கு. முறுக்குக்கு வீட்டில் எப்போதும் உளுந்து மாவு சேர்த்து தான் செய்வோம், இப்போ சமீபத்தில் தான் பொட்டுக்கடலை மாவும் சேர்த்து செய்யலாம்னு தெரிச்சிச்சு,சரி ட்ரை பண்ணி பார்க்கலாம்னு செய்து பார்த்தேன்,ரொம்ப சூப்பரா நல்ல மொறுமொறுப்பாக இருந்துச்சு. சுவையும் கடையில் கிடைக்கும் முறுக்கு போலவே இருந்துச்சு, நீங்களும் இந்த தீபாவளிக்கு இந்த முறுக்கை செய்து பாருங்கள்.
செய்முறை
பொட்டுக்கடலை முறுக்கு | Pottukadalai Murukku
Preparation Time : 10 mins | Cooking Time : 20 mins | Makes : 16 to 18
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப் (கோபுரமாக )
பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 2 டீ ஸ்பூன்
எள்ளு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
அரிசி மாவு - 1 கப் (கோபுரமாக )
பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 2 டீ ஸ்பூன்
எள்ளு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,உப்பு மற்றும் எள்ளை எடுத்து கொள்ளவும்,அடுத்து பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடித்து கொள்ளவும் .அதையும் அரிசி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் ,அடுத்து அதில் உருகிய வெண்ணெயை சேர்த்து நன்கு மாவுடன் பிசைந்து கொள்ளவும்.பின்பு தேவையானளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக மாவை பிசைந்து வைத்து கொள்ளவும். முறுக்கு பிழியும் கருவியில் தேன்குழல் அச்சை பயன்படுத்தி கொள்ளவும்.அதில் தேவைக்கேற்ப மாவை நிரப்பி கொள்ளவும்.சிறிய கரண்டி/தட்டில் முறுக்கை பிழிந்து ரெடியாக வைத்து கொள்ளவும்.பொரிப்பதற்கு எண்ணெயை காய வைத்து கொள்ளவும். எண்ணெய் சூடான பின் அதில் பிழிந்து வைத்துள்ள மாவை மெதுவாக போடவும் .எண்ணெயில் "ஸ்ஸ்"என்ற சத்தம் அடங்கிய பின் எண்ணெயிலிருந்து முறுக்கை எடுத்துவிடவும். நன்கு ஆறியபின் ஒரு காற்று போகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும். சுவையான மற்றும் மொறுமொறுப்பான முறுக்கு தயார்.
குறிப்புக்கள்- முறுக்கை நேரடியாக எண்ணெயில் பிழியும் போது அதிலிருந்து சூடான ஆவி அதிகமாக வரும், அதனால் முன்னாடியே எப்படி பிழிந்து வைத்து கொண்டால் சுலபமாக இருக்கும்
- பொட்டுக்கடலை மாவு நன்கு நைசாக இருக்குவேண்டும், இல்லாவிட்டால் ஒரு முறை சலித்து கொள்ளவும்.
No comments:
Post a Comment