Sunday, October 28, 2018

அதிரசம் | Athirasam | Deepavali Sweet

அதிரசம், பச்சரிசி மற்றும் வெல்லம்  கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரியமான இனிப்பு பலகாரம். தீபாவளி மற்றும் சில முக்கியமான பண்டிகைகளுக்கு தலைமுறையாக செய்யப்படும் ஒரு பலகாரம் இது. அத்தகைய  பாரம்பரியமானஅதிரசத்தை எப்படி செய்வதுனு இன்னைக்கு பார்க்கலாம் வாங்க. அதிரசம் செய்வதுற்கு பாகு பதம் மிக முக்கியம் அடுத்து பச்சரிசி மாவு அப்போது செய்ததாக இருக்க வேண்டும், அவ்வளவுதான் இத மட்டும் சரியாக செய்துவிட்டால் போதும் சூப்பரா அதிரசம் செய்துவிடலாம், நீங்களும் இந்த தீபாவளிக்கு செய்து பாருங்கள்.

அதிரசம் | Athirasam

Preparation Time : 3 hr | Cooking Time : 20 minsMakes : 15 
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பச்சரிசி  - 1 கப் 
வெள்ளம் - 3/4 கப்
ஏலக்காய் - 4
எள்ளு - 1 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - 1/4 கப் 
எண்ணெய் - பொரிப்பதற்கு 

செய்முறை
முதலில் பச்சரிசியை நன்கு 2 முறை கழுவி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஒரு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.2 மணி நேரத்துக்கு அப்புறம் தண்ணீரை வடித்து அதனை ஒரு துணியில் 30 நிமிடம் உலர்த்தவும். 30 நிமிடத்திற்கு அப்புறம் அரிசி லேசாக ஈரப்பதத்துடன் இருக்கும் அப்போது மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும்.பொடித்த அரிசி மாவை மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து கொள்ளவும். மீதமாகும் அரிசி குருணையை மீண்டும் ஒரு முறை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து கொள்ளவும்.அடுத்து எள்ளை வெறும் வாணலில் நன்கு பொரியும் வரை வறுத்து அதனை மாவுடன் சேர்க்கவும்.பின் வெல்ல பாகுக்கு தேவையான வெல்லம் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.வெல்லம் கரைந்த பின் அதனை ஒரு முறை வடிகட்டி மீட்டும் ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும், இடையில் பொடித்த ஏலக்காயை சேர்த்துக்கொள்ளவும்.மாவு மற்றும் எள்ளை நன்கு கலந்து வைத்து கொள்ளவும் ,அதில் வெல்ல பாகை ஊற்றி நன்கு கிளறவும்.பாகு நன்கு மாவுடன் கலந்த பின் அதனை மூடி வைத்து  ஒரு நாள் வரை அப்படியே விடவும்.அடுத்த நாள் மாவு கொஞ்சம் கெட்டிப்பட்டு இருக்கும். இப்போது பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை காய வைத்துகொள்ளவும்.மாவை சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் ஒரு இலையில்/பட்டர் பேப்பரில் தட்டி கொள்ளவும்.அதனை எண்ணெயில் சேர்த்து மெல்லிய தீயில் பொரித்து எடுக்கவும்.சுவையான அதிரசம் தயார் .
குறிப்புக்கள் 

  • அதிரசம் பொரிப்பதற்கு எண்ணெய் மிதமான சூட்டிலேயே இருக்க வேண்டும். அதனால் மெல்லிய தீயிலே அடுப்பை வைத்து கொள்ளவும்
  • பாகு ஒரு கம்பி பதம் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் நேரம் ஆனா பின்பும் மாவு தண்ணீயாகவே இருக்கும் கெட்டியாகாது.
  • மாவு தயார் ஆனவுடனே அதிரசம் செய்யலாம் ஆனால் ஒரு நாள் கழித்து செய்தால் சுவை இன்னும் நன்றாக இருக்கும்.
  • தயார் செய்த மாவை ஒரு நாளுக்கு அப்புறம் பிரிட்ஜில் 7-10 நாட்கள் வரை வைத்து தேவையான போது பொரித்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment