Tuesday, October 23, 2018

ராகி முறுக்கு | கேழ்வரகு முறுக்கு | Ragi Murukku

ராகி /கேழ்வரகு முறுக்கு, ரொம்ப சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஒரு சூப்பர் முறுக்கு. அரிசி மாவில் செய்வது போல ராகி மாவிலும் முறுக்கு செய்யலாம், ரொம்ப நன்றாக இருக்கும். எப்போதும்  அரிசி மாவு முறுக்காவே இருக்கே அப்படி நினைச்சீங்கனா கொஞ்சம் வித்தியாசமாக இந்த  ராகி முறுக்கை வரும் தீபாவளிக்கு செய்து பாருங்கள்.வாங்க இப்போ இந்த ராகி முறுக்கை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

ராகி முறுக்கு | கேழ்வரகு முறுக்கு | Ragi Murukku

Preparation Time : 10 min | Cooking Time : 20 minsMakes : 12 to 15 
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
ராகி மாவு - 1/2 கப் 
அரிசி மாவு - 1/4 கப் 
கடலை மாவு   - 2 டேபிள் ஸ்பூன் 
வெண்ணெய் - 1 டடேபிள்  ஸ்பூன் 
வெள்ளை எள்ளு - 1 டீஸ்பூன்  
தண்ணீர் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு 
எண்ணெய் - பொரிப்பதற்கு 

செய்முறை
முதலில்  ராகி மாவு,அரிசி மாவு,கடலை மாவு மூன்றையும் ஒரு முறை சலித்து ஒரு  பாத்திரத்தில்  எடுத்து கொள்ளவும்,அதில் உப்பு  மற்றும் எள்ளை சேர்த்து கொள்ளவும்.அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும் ,அடுத்து அதில் உருகிய வெண்ணெயை சேர்த்து நன்கு மாவுடன் பிசைந்து கொள்ளவும்.பின்பு தேவையானளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக மாவை பிசைந்து வைத்து கொள்ளவும்.முறுக்கு பிழியும் கருவியில் ஸ்டார்  அச்சை பயன்படுத்தி கொள்ளவும்.அதில் தேவைக்கேற்ப மாவை நிரப்பி கொள்ளவும்.சிறிய கரண்டி/தட்டில் முறுக்கை பிழிந்து ரெடியாக வைத்து கொள்ளவும்பொரிப்பதற்கு எண்ணெயை காய வைத்து கொள்ளவும். எண்ணெய் சூடான பின் அதில் பிழிந்து வைத்துள்ள மாவை  மெதுவாக போடவும்.எண்ணெயில் "ஸ்ஸ்"என்ற  சத்தம் அடங்கிய பின் எண்ணெயிலிருந்து முறுக்கை எடுத்துவிடவும். நன்கு ஆறியபின் ஒரு காற்று போகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும். சுவையான மற்றும் மொறுமொறுப்பான ராகி முறுக்கு தயார். 
குறிப்புக்கள்:
  • முறுக்கை நேரடியாக எண்ணெயில் பிழியும் போது அதிலிருந்து சூடான ஆவி அதிகமாக வரும், அதனால்  முன்னாடியே எப்படி பிழிந்து வைத்து கொண்டால் சுலபமாக இருக்கும் .
  • வெள்ளை எள்ளுக்கு பதில் கருப்பு எள்ளை கூட பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment