Friday, October 12, 2018

சுண்டல் பொடி | Sundal Podi | Curry Powder

சுண்டல் பொடி, சுண்டல் மற்றும் பொரியலுக்கு பயன்படுத்த கூடிய ஒரு மசாலா தூள். இதனை தேவையானளவு செய்து வைத்துக்கொண்டால் இந்த கொலு நாட்களில் சுண்டல் செய்வதற்கு ரொம்ப சுலபமாக இருக்கும். சுண்டல் செய்யும்போது இந்த பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள், சுண்டலுக்கு நல்ல சுவை மற்றும் மணத்தை கொடுக்கும், அதுமற்றுமின்றி இதனை அன்றாடம் செய்யும் பொரியலுக்கும் பயன்படுத்தலாம் சுவையும் மணமும் அட்டகாசமாக இருக்கும். வாங்க இப்போ இந்த சுண்டல் போடி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

சுண்டல் பொடி | Sundal Podi | Curry Powder


Preparation Time : 5 mins | Cooking Time : 10 minsMakes : 1/4 cup 
Recipe Category: Curry Powder | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி விதை -  2 டேபிள்ஸ்பூன் 
கடலை பருப்பு  - 1 டேபிள்ஸ்பூன்
முழு உளுந்து  - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 5


செய்முறை
அனைத்து பொருட்களையும் அளந்து எடுத்து வைத்துக்கொள்ளவும் . ஒரு கடாயை காயவைத்து அதில் அனைத்தையும் சேர்த்து  நன்கு வாசம் வரும்வரை வறுக்கவும். வறுத்த பின் சில நிமிடங்கள் ஆற விடவும்.அடுத்து அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு நைசாக பொடித்து கொள்ளவும்.மணமான சுண்டல் பொடி தயார்.
குறிப்புக்கள் 

  • மிதமான தீயில் வைத்து அனைத்து பொருட்களையும் வறுத்து கொள்ளவும்.
  • கொடுத்துள்ள அளவில் காரம்  மிதமான இருக்கும். உங்கள் தேவைக்கு ஏற்ப கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளவும்.

No comments:

Post a Comment