Thursday, November 1, 2018

பாதாம் கட்லி | பாதாம் பர்பி | Badam Katli

பாதாம் கட்லி/ பாதாம் பர்பி, சுலபமாக எளிதில் செய்த கூடிய ஒரு சூப்பர் ஸ்வீட். கடையில் கிடைக்கும் முந்திரி/பாதாம் கட்லி விலை ரொம்ப அதிகமா இருக்கும், அதற்கு பதில் நம் வீட்டிலே இதனை செய்தால் செலவும் கம்மி மற்றும் சுவையும் அட்டகாசமாக இருக்கும். பாதாம் கட்லி வீட்டில் செய்வது ரொம்ப சுலபம், இதற்கு முக்கியமாக தேவைப்படும் பொருட்கள் இரண்டு தான், பாதாம் மற்றும் சர்க்கரை. இந்த தீபாளிக்கு நீங்களும் இந்த சுவையான பாதாம் கட்லியை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள் !!!  

பாதாம் கட்லி | பாதாம் பர்பி | Badam Katli

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsMakes : 15-20 small pieces 
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பாதாம்  - 1 கப் 
சர்க்கரை - 1/2 கப் 
தண்ணீர் - 1/4 கப் 
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை
முதலில் பாதாம் தோலை நீக்கவேண்டும், அதற்கு ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பாதாமை சேர்த்து ஒரு 2 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.அடுத்து தண்ணீரை வடித்து பாதாமை சிறுது நேரம் ஆற விடவும், பின் லேசாக உரித்தாலே பாதாம் தோல் சுலபமாக வந்துவிடும். அனைத்து பாதாம் தொலியை நீக்கி ஒரு tissue பேப்பர் / துணியில் தண்ணீர் போக பாதாமை சிறுது நேரம் உலர விடவும்.பின் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.அடுத்து ஒரு கடாயில் 1/4 கப் தண்ணீர்  மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும்,பின் அதில் பொடித்த பாதாமை சேர்க்கவும்.தீயை மிதமாக வைத்து கிளறி கொன்டே இருக்கவும், சிறுது நேரத்தில் நன்கு கெட்டியாக வரும்.பாதாம் கலவை கரண்டியுடன் சுற்றி கொண்டு வரும் போது சிறு எடுத்து உருட்டி பார்க்கவும், உருட்ட வந்தால் அது தான் பதம் , அடுப்பை அணைத்துவிடவும், இல்லாவிட்டால் மேலும் சிறுது நேரம் கிளறவும்.அடுத்து ஒரு தட்டில் நெய் சேர்த்து அதில் பாதாம் கலவை கொட்டவும்.கை பொறுக்கும் சூடு வந்து பின் பாதாம் கலவை நன்கு கையால் ஸ்மூத்-ஆகா பிசைந்து கொள்ளவும்.பின் அதனை சப்பாத்தி கட்டையால் மெலிதாக தேய்த்து கொள்ளவும். ஒட்டாமல் இருக்க மேலும் கீழும் பட்டர் பேப்பர் விரித்து கொள்ளவும்.அடுத்து உங்கள் விருப்பம்போல் துண்டுகள் போட்டு கொள்ளவும்.சுவையான பாதாம் கட்லி / பாதாம் பர்பி தயார்.
குறிப்புக்கள் 
  • இதற்கு சர்க்கரை பாகு பதம் ஒன்றும் தேவையில்லை, சர்க்கரை கரைந்த உடனே பொடித்த பாதாமை சேர்த்து கொள்ளவும்.
  • மிக்ஸில் பாதாமை pulse mode-ல் பொடித்து கொள்ளவும், ரொம்ப நேரம் அரைத்தால் பாதாமில் இருந்து எண்ணெய் வெளியேற ஆரம்பித்துவிடும்.
  • ஆறிய பின்பும் துண்டங்கள் போட வராவிட்டால், கடாயில் மீண்டும் பாதாம் கலவையை சேர்த்து சிறுது நேரம் கிளறி கொள்ளவும். 

No comments:

Post a Comment