Wednesday, October 24, 2018

ரசகுல்லா | பெங்காலி ஸ்வீட் | Rasgulla Sweet

ரசகுல்லா, ரொம்ப சுவையான மற்றும் பிரபலமான ஒரு பெங்காலி ஸ்வீட். நிறைய பேரு இதனை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க, ஆனால் உங்களுக்கு தெரியுமா இதனை வீட்டில் செய்வது ரொம்ப சுலபம். பால் மற்றும் சர்க்கரை இருந்தால் போதும் நிமிடத்தில் இதனை நீங்களே செய்துவிடலாம். ரசகுல்லா செய்வதற்கு முதலில் மிருதுவான பன்னீர் செய்ய வேண்டும்.மிருதுவான பன்னீர்  தயார் என்றால் சூப்பரா வாயில் கரையும் ரசகுல்லா நொடியில் செய்து விடலாம். வாங்க முதலில் மிருதுவான பன்னீர் அப்புறம் சுவையான ரசகுல்லா எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

ரசகுல்லா | பெங்காலி ஸ்வீட் | Rasgulla Sweet

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பால் - 2 கப் 
லெமன் ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன் 
சர்க்கரை - 1 கப் 
தண்ணீர் - 2 & 1/4  கப்
ஐஸ் கட்டி - 2 கப் 
ஏலக்காய் - 2
பிஸ்தா பருப்பு - 3-4


செய்முறை
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு சூடு பண்ணவும், பால் பொங்கி வரும்போது தீயை குறைத்து வைத்து லெமன் ஜூஸை சிறுது  சிறிதாக ஊற்றி கலக்கவும்.பால் முழுவதும் திரிந்து பின் அதில் உடனடியாக ஐஸ் கட்டியை சேர்க்கவும்.பின் அதனை ஒரு துணியில் வடிகட்டி விடவும், தண்ணீரை நன்கு பிழிந்து துணியில் ஒரு அரை மணி நேரம் வடியவிடவும்.அடுத்து அதனை ஒரு தட்டில் போட்டு உள்ளங்கையால் நன்கு பிசைந்து கொள்ளவும். ஒரு 6-8 நிமிடம் பிசைந்த பின் பன்னீர் நன்கு மிருதுவாக பால் போல வந்துவிடும்.அதிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். அடுத்து சர்க்கரை பாகு தயார் செய்ய ஒரு பாத்திரத்தில் சர்க்கரை எடுத்து கொள்ளவும்.அதில் தண்ணீர் சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும், பின் அதில் ஏலக்காய் தூளை சேர்க்கவும்.சர்க்கரை பாகு நன்கு கொதிக்கும் போது பன்னீர் உருண்டைகளை அதில் சேர்க்கவும். பன்னீர் உருண்டைகளை இரண்டு மடங்காகும் வரை கொதிக்க விடவும், அதற்கு மிதமான தீயில் 18-10 நிமிடம் வரை ஆகும்.சுவையான  ரசகுல்லா தயார். நன்கு ஆறவைத்து பிரிட்ஜில் ஒரு 3-4 மணிநேரம் வைத்து பின்பு பரிமாறவும். 
குறிப்புக்கள் 

  • ரசகுல்லா வெந்த பின்பு சர்க்கரை பாகு ரொம்ப தண்ணீராக இருந்தால், ரசகுல்லாவை பாகிலிருந்து எடுத்து விட்டு சர்க்கரை பாகை இன்னும் கொஞ்சம் நேரம் கொதிக்க விட்டு பின் ரசகுல்லாவை அதில் சேர்த்து கொள்ளவும்.
  • ஐஸ் கட்டியை சேர்ப்பது நல்ல மிருதுவான ரசகுல்லாவை கொடுக்கும்.
  • ரசகுல்லாவை மிதமான தீயில் வேகவைக்கவும்.

No comments:

Post a Comment