Monday, October 8, 2018

கொண்டைக்கடலை சுண்டல் | Kondakadalai Sundal

கொண்டைக்கடலை சுண்டல்,சுலபமாக செய்யக்கூடிய ஒரு சூப்பர் ஸ்னாக்ஸ். இன்னும் சில தினங்களில் கொலு நாட்கள் வர போகின்றன, அதற்கு செய்யக்கூடிய ஒரு முக்கியமான பிரசாதம் இந்த சுண்டல் வகைகள். ரொம்ப சீக்கிரம் செய்யக்கூடியது மற்றும் கொலு பார்க்க வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுப்பதற்கு ரொம்ப உதவியாக இருக்கும்.  வாங்க இப்போ இந்த கொண்டைக்கடலை சுண்டல் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

கொண்டைக்கடலை சுண்டல் | Kondakadalai Sundal

Preparation Time : 8 hrs | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை  - 1/2 கப் 
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 2 
கறிவேப்பில்லை - ஒரு கொத்து 
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 


செய்முறை
முதல் நாள் இரவே கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊற போடவும், அடுத்த நாள் தண்ணீரை வடித்துவிட்டு அதனை குக்கரில்  சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் சேர்க்கவும்கூடவே தேவையானளவு உப்பு சேர்த்து 3 விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சூடு பண்ணி கடுகு மற்றும் உளுந்து போட்டு தாளித்து கொள்ளவும் ,பின்  கறிவேப்பில்லை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து சிறுது நேரம் வதக்கி கொள்ளவும், அடுத்து அதில் கொண்டக்கடலை சேர்க்கவும்.ஒரு நிமிடம் வதங்கிய பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.சுவையான மற்றும் சத்தான கொண்டக்கடலை சுண்டல் தயார்.
குறிப்புக்கள் 
  • கொண்டக்கடலை நன்கு மெதுவாக வேகவைத்துக்கொள்ளவும் 
  • தேவைக்கேற்ப தேங்காய் கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளலாம்.  
  • இதில் நான் வெள்ளை கொண்டைக்கடலை பயன்படுத்தியுள்ளேன், இதே போல் கருப்பு கொண்டைக்கடலை கூட பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment