பச்சை பயிறு சுண்டல் , சுவையான மற்றும் சத்தான ஒரு சுண்டல். இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்த கொண்டக்கடலை சுண்டல் போல் இதற்கு இரவு முழுவதும் ஊற வைக்க தேவையில்லை. 4-5 மணிநேரம் ஊறினாலே போதும் ரொம்ப சுலபமாக இந்த சுண்டலை செய்துவிடலாம் . வாங்க சுவையான எந்த சுண்டல் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
செய்முறை
பச்சை பயிர் சுண்டல் | Green Moong Dal Sundal
Preparation Time : 4 hrs | Cooking Time : 15 mins | Serves : 2
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பச்சை பயிறு - 1/2 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பில்லை - ஒரு கொத்து
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையானளவு
பச்சை பயிறு - 1/2 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பில்லை - ஒரு கொத்து
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையானளவு
பச்சை பயிரை 4-5 மணிநேரம் தண்ணீரில் ஊற போடவும். ஊறிய பின் தண்ணீரை வடித்துவிட்டு குக்கரில் போட்டு தேவையானளவு உப்பு சேர்க்கவும்.கூடவே மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து 3 விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சூடு பண்ணி கடுகு மற்றும் உளுந்து போட்டு தாளித்து கொள்ளவும்.பின் கறிவேப்பில்லை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து சிறுது நேரம் வதக்கி கொள்ளவும், அடுத்து அதில் பச்சை பயிரை சேர்க்கவும்.ஒரு நிமிடம் வதங்கிய பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.சுவையான மற்றும் சத்தான பச்சை பயிர் சுண்டல் தயார்.
குறிப்புக்கள் - பச்சை பயிரை நன்கு மெதுவாக வேகவைத்துக்கொள்ளவும்
- தேவைக்கேற்ப தேங்காய் கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளலாம்.
- இராத்திரி முழுவதும் ஊற வைத்ததால் 2 விசில் வேகவைத்தால் போதும். 4-5 மணி நேரம் ஊறவைத்தால் 3 விசில் வேகவைக்கவும்.
No comments:
Post a Comment