Thursday, October 4, 2018

பூசணிக்காய் மோர் குழம்பு | Pumpkin Moor Kuzhambu

பூசணிக்காய் மோர் குழம்பு,சுலபமாக எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் மோர் குழம்பு. மோர் குழம்பிற்கு வெள்ளை பூசணிக்காய்/தடியங்காய் ரொம்ப நன்றாக இருக்கும். இந்த மோர் குழம்பில் வெங்காயம் மற்றும் பூண்டு எதுவும் சேர்க்கவில்லை அதனால் விரத நாட்களில் செய்வதற்கு ஏற்ற ஒரு குழம்பு.வாங்க இப்போ இதனை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

பூசணிக்காய் மோர் குழம்பு | Moor Kuzhambu

Preparation Time : 10 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வெள்ளை பூசணிக்காய் /தடியங்காய்  - 1 கப்(நறுக்கியது )
தயிர் - 1 கப் 
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 
துருவிய தேங்காய் - 1/4 கப் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
தாளிக்க 
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு மற்றும் உளுந்த பருப்பு - 1/2 டீஸ்பூன் 
வெந்தயம் - 1/4 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை
முதலில் பூசணிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும், அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.இதற்கிடையில் பச்சை மிளகாயை கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்,அடுத்து தேங்காய் மற்றும் சீரகத்தை நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.பூசணிக்காய் வெந்த பின் அதில் மிளகாயை, தேங்காய் விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.அடுத்து உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும் . தயிரை கட்டில்லாமல் அடித்து கொள்ளவும்.தயிரை குழம்பில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து குழம்பில் சேர்த்து கொள்ளவும்.சுவையான பூசணிக்காய் மோர் குழம்பு தயார்.
குறிப்புக்கள் 
  • தேவைக்கேற்ப பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும் 
  • தேங்காய் எண்ணெய் நல்ல மணத்தை கொடுக்கும். 

No comments:

Post a Comment