Monday, October 22, 2018

நெய் உருண்டை | பாசி பருப்பு லட்டு | Pasi Paruppu laddu

பாசி பருப்பு  லட்டு/ நெய் உருண்டை, சுவையான எளிதில் செய்யக்கூடிய ஒரு லட்டு. இன்னும் தீபாவளிக்கு இரண்டு வாரங்கள் தான் உள்ளன, நிறைய பேர் இந்த  தீபாவளிக்கு என்ன பலகாரம் எல்லாம் செய்யலாம்னு ஏற்கனவே யோசிச்சு வச்சிருப்பீங்க, அப்படி இல்லனாலும் பரவாயில்லை வரும் நாட்களில் தினமும் ஒரு பலகார ரெசிபி இந்த பக்கத்தில் பார்க்கலாம், அது உங்களுக்கு உதவியாக இருக்கும். வாங்க முதலாவது இந்த பாசி பருப்பு லட்டு எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

நெய் உருண்டை | பாசி பருப்பு லட்டு | Pasi Paruppu laddu

Preparation Time : 10 mins | Cooking Time : 5 minsMakes : 12 
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு  - 1/2 கப் 
சர்க்கரை - 1/2 கப் 
நெய் - 1/4 கப் 
முந்திரி பருப்பு  - 2 டீஸ்பூன் 
ஏலக்காய் - 2


செய்முறை
முதலில்  ஒரு வாணலியில் பாசி பருப்பை போட்டு நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.அதனை சிறுது நேரம் ஆறவைத்து பின் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும்.பின் அதே  மிக்ஸி ஜாரில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு பொடித்து கொள்ளவும்.பொடித்த பருப்பு மற்றும் சர்க்கரையை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.அடுத்து ஒரு வாணலியில் நெய் சேர்த்து,காய்ந்த பின் முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.நெய்யுடன் முந்திரி பருப்பை கலந்து வைத்துள்ள பருப்பில் சேர்த்து நன்கு விரவி கொள்ளவும். பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.சுவையான நெய் உருண்டை தயார்.
குறிப்புக்கள் 

  • பருப்பை நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும் 
  • நெய்யின் அளவை குறைக்காமல் சேர்த்து கொள்ளவும் , அப்போதுதான் லட்டு பிடிக்க நன்றாக வரும்.

No comments:

Post a Comment