Thursday, October 25, 2018

பச்சரிசி மாவு | Home made Rice flour

தீபாவளிக்கு செய்யப்படும் நிறைய பலகாரங்களுக்கு பச்சரிசி மாவு தேவைப்படும், அதிலேயும் அதிரசம் போன்ற பலகாரத்துக்கு வீட்டிலே தயாரித்த  பச்சரிசி மாவு தான் நன்றாக இருக்கும். அதுமட்டுமின்றி முறுக்கு மற்றும் சீடை ஆகியவையும் அதில் செய்தலால் இன்னும் ருசியாக இருக்கும். நிறைய மாவு தேவைப்பட்டால் நீங்கள் மாவு மெஷினில் அரைத்து வாங்கி கொள்ளலாம், அப்படியில்லாமல் கொஞ்சமாக தேவைப்படுது அல்லது நீங்கள் இருக்கும் இடத்தில் மாவு மெஷின் இல்லயென்றால், இந்த பதிவு உங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். வாங்க எப்போ வீட்டிலே பச்சரிசி மாவு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

பச்சரிசி மாவு | Home made Rice flour

Preparation Time : 2 hrs | Cooking Time : 15 minsMakes : 2 & 1/2 cup 
Recipe Category: Basic | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 2 கப் 

செய்முறை
முதலில் பச்சரிசியை நன்கு 2 முறை கழுவி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஒரு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.2 மணி நேரத்துக்கு அப்புறம் தண்ணீரை வடித்து அதனை ஒரு துணியில் 30 நிமிடம் உலர்த்தவும். 30 நிமிடத்திற்கு அப்புறம் அரிசி லேசாக ஈரப்பதத்துடன் இருக்கும் அப்போது மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும்.பொடித்த அரிசி மாவை மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து கொள்ளவும். மீதமாகும் அரிசி குருணையை மீண்டும் ஒரு முறை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து கொள்ளவும்.அடுத்து ஒரு வாணலியில் அரிசி மாவை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை கைவிடாமல் வறுத்து கொள்ளவும். அரிசி மாவு நன்கு வறுபட்டபின் மணல் போன்று இருக்கும், அதனை கொண்டு கோலம் கூட போட முடியும். அது தான் பதம், அப்போது மாவை அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறவிடவும், ஆறியபின் அதனை காற்று போகாத பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும்.சுத்தமாக தயாரிக்கப்பட்ட அரிசி மாவு தயார்.
குறிப்புக்கள் 

  • ஊறவைத்த தண்ணீரை நன்கு வடித்து அரிசியை உலரவிடவும், அப்போதுதான் சீக்கரம் உலரும்.
  • அரிசி மாவை நிறம் மாறாமல் நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.

No comments:

Post a Comment