Tuesday, October 2, 2018

குதிரைவாலி பொங்கல் | சிறுதானிய பொங்கல் | Millet Pongal

குதிரைவாலி பொங்கல், சுவையான,சத்தான மற்றும் ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு பொங்கல் ரெசிபி.சிறுதானியங்களில் அதிக அளவில் சத்துகள் உள்ளன, நமது சமையலில் தொடர்ந்து சிறுதானியங்களை சேர்த்து கொள்வது உடல் ஆரோகியத்திற்கு ரொம்ப நல்லது.  சிறுதானியங்களில் கஞ்சி மட்டும் செய்யாமல் இந்த மாதிரி வித்தியாசமாக செய்து  வீட்டிலுள்ள பெரியவர்கள் முதல் குட்டிஸ் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.இன்னைக்கு ரெசிபியில் நான் குதிரைவாலி சேர்த்து பொங்கல் செய்துள்ளேன்,இதே மாதிரி வரகு,சாமை கூட பயன்படுத்தி இந்த பொங்கலை செய்யலாம், ரொம்ப சூப்பரா இருக்கும். வாங்க எப்போ இந்த சத்தான குதிரைவாலி பொங்கல் செய்வது எப்படினு பார்க்கலாம்.

குதிரைவாலி பொங்கல் | சிறுதானிய பொங்கல் | Millet Pongal

Preparation Time : 5 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Pongal | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
குதிரைவாலி சிறுதானியம் - 1/2 கப் 
பாசி பருப்பு - 1/4 கப் 
தண்ணீர் - 2 கப் 
உப்பு - தேவையானளவு
தாளிக்க 
நெய் - 2 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்(பொடியாக நறுக்கியது )
முந்திரி பருப்பு - 6
பெருங்காய தூள் - 1/4 டீஸ்பூன் 


செய்முறை
முதலில் பிரஷர் குக்கரில்  குதிரைவாலி மற்றும் பாசி பருப்பு இரண்டையும் சேர்த்து கொள்ளவும், நன்கு இருமுறை கழுவிய பின் அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.பிரஷர் அடங்கிய பின் திறந்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு வாணலியில் நெய்யை சேர்த்து சூடு பனி கொள்ளவும்.அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வாசம் வரும் வரை வதக்கி கொள்ளவும்.அதனை பொங்கலில் சேர்த்து கலந்து கொள்ளவும்.சுவையான மற்றும் சத்தான சிறுதானிய பொங்கல் தயார்.
குறிப்புக்கள் 

  • இஞ்சி பொங்கலுக்கு நல்ல மணம் மற்றும் சுவையை கொடுக்கும்.
  • தேவைப்பட்டால் பரிமாறும் போது சிறு நெய்யை மேலே ஊற்றி கொள்ளவும்.

No comments:

Post a Comment