Saturday, October 27, 2018

பட்டர் முறுக்கு | Butter Murukku

பட்டர் முறுக்கு, சுலபமாக வீட்டிலே செய்யக்கூடிய ஒரு சூப்பர் முறுக்கு ரெசிபி. மற்ற முறுக்குக்கை  போல இதற்கு shape பற்றி எல்லாம் கவலைபடாமல்  ரொம்ப ஈஸியாக செய்துவிடலாம்.  வரும் தீபாவளிக்கு நீங்களும் இந்த சூப்பர் முறுக்கை நீங்களும் செய்துபாருங்கள்.

பட்டர் முறுக்கு | Butter Murukku

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப் 
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
எள்ளு - 1 டீஸ்பூன் 
சோடா உப்பு - 1 சிட்டிகை 
தண்ணீர் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு 
எண்ணெய் - பொரிப்பதற்கு 


செய்முறை
வெண்ணெய் மற்றும் பொரிப்பதற்காக எண்ணெய் தவிர பிற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்கு கலந்து கொள்ளவும்,அதில் அடுத்து வெண்ணெயை சேர்த்து நன்கு மாவுடன் பிசைந்து கொள்ளவும்.பின்பு தேவையானளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக மாவை பிசைந்து வைத்து கொள்ளவும்.பொரிப்பதற்கு எண்ணெயை காய வைத்து கொள்ளவும். முறுக்கு பிழியும் கருவியில் ஸ்டார் வடிவம் உள்ள அச்சை பயன்படுத்தி கொள்ளவும், அதில் தேவைக்கேற்ப மாவை நிரப்பி கொள்ளவும்.எண்ணெய் சூடான பின் அதில் முறுக்கை பிழிந்து கொள்ளவும். எண்ணெயில் "ஸ்ஸ்"என்ற  சத்தம் அடங்கிய பின் எண்ணெயிலிருந்து முறுக்கை எடுத்துவிடவும்.நன்கு ஆறியபின் ஒரு காற்று போகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும். சுவையான பட்டர் முறுக்கு தயார்.
குறிப்புக்கள் 
  • முறுக்கை நேரடியாக எண்ணெயில் பிழியும் போது அதிலிருந்து சூடான ஆவி அதிகமாக வரும், அதனால்  கையில் ஆவி படாதபடி சற்று உயரத்தில் வைத்து பிழிந்து கொள்ளவும்.
  • பொட்டுக்கடலை மாவு நன்கு நைசாக இருக்கவேண்டும், இல்லாவிட்டால் முறுக்கு வெடிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

No comments:

Post a Comment