Wednesday, October 17, 2018

பூம்பருப்பு | கடலை பருப்பு சுண்டல் | Chana Dal Sundal

பூம்பருப்பு / கடலை பருப்பு சுண்டல், சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சுண்டல். சரஸ்வதி/ஆயுத  பூஜை நாட்களில் திருநெல்வேலி பக்கம்  இந்த சுண்டலை செய்வது ரொம்ப பிரசித்தம். இதனை செய்வது சுலபம் மற்றும் சுவையும் அருமையாக இருக்கும். நீங்களும் இந்த சரஸ்வதி/ஆயுத  பூஜைக்கு இந்த பூம்பருப்பை செய்து பாருங்கள்.

பூம்பருப்பு | கடலை பருப்பு சுண்டல் | Chana Dal Sundal

Preparation Time : 2 hrs | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு  - 1/2 கப் 
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 2 
கறிவேப்பில்லை - ஒரு கொத்து 
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 

செய்முறை
முதலில் கடலை பருப்பை  ஒரு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதி வர விடவும் .அதில் கடலைப்பருப்பு சேர்க்கவும்.அடுத்து அதற்கு தேவையான உப்பு சேர்த்து கடலை பருப்பை 13-15 நிமிடம் வேகவிடவும்.கடலை பருப்பை எடுத்து விரல்களில் இடையே வைத்து அழுத்தினால் மைய வேண்டும், அந்த பதத்தில் கடலை பருப்பை அடுப்பிலிருந்து இறக்கி தண்ணீரை வடித்துகொள்ளவும்.அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சூடு பண்ணி கடுகு மற்றும் உளுந்து போட்டு தாளித்து கொள்ளவும் ,பின்  கறிவேப்பில்லை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து சிறுது நேரம் வதக்கி கொள்ளவும்.அடுத்து அதில் வேகவைத்த கடலை பருப்பு மற்றும் துருவிய தேங்காய்  சேர்க்கவும்.ஒரு 2 நிமிடம் வதங்கிய பின்  அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.சுவையான கடலை பருப்பு /பூம்பருப்பு சுண்டல் தயார்.
குறிப்புக்கள் 
  • கடலை பருப்பை குக்கரில் கூட வேகவைக்கலாம், ஆனால் கொஞ்சம் கவனமாக பருப்பு குலைந்து விடாமல் வேகவைத்து கொள்ளவும்.
  • தேங்காய் எண்ணெய் சுண்டலுக்கு நல்ல வாசனை மற்றும் சுவை தரும். 

No comments:

Post a Comment