பருப்பு பாயாசம் , பாசி பருப்பு மற்றும் ஜவ்வரிசி கொண்டு செய்யக்கூடிய ஒரு சுவையான பாயாசம். இந்த பருப்பு பாயாசம் தலைமுறையாக எங்கள் வீட்டில் செய்யப்படும் ஒரு பாயாசம். பால் பாயாசத்தை விட இந்த பருப்பு பாயாசம் தான் எங்கள் வீட்டில் அனைவர்க்கும் பிடிக்கும். இந்த பாயாசத்துக்கு தேவையான பருப்பு மற்றும் ஜவ்வரிசியை ரொம்ப சுலபமாக பிரஷர் குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொண்டால், ஒரு 20 நிமிடத்தில் இந்த பாயசம் தயார் செய்துவிடலாம். இந்த ஆயுத பூஜைக்கு நீங்களும் இந்த பருப்பு பாயசத்தை ட்ரை பண்ணி பாருங்கள்.
செய்முறை
பருப்பு பாயாசம் | பாசி பருப்பு பாயாசம் | Paruppu Payasam
Preparation Time : 10 mins | Cooking Time : 20 mins | Serves : 2
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு - 1/4 கப்
ஜவ்வரிசி - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2
பால் - 1/2 கப்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி பருப்பு -1 ஸ்பூன்
வேர்க்கடலை - 1 டீஸ்பூன்
தேங்காய் துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன்
பாசி பருப்பு - 1/4 கப்
ஜவ்வரிசி - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2
பால் - 1/2 கப்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி பருப்பு -1 ஸ்பூன்
வேர்க்கடலை - 1 டீஸ்பூன்
தேங்காய் துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன்
பிரஷர் குக்கரில் பருப்பு மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் சேர்த்து,நன்கு கழுவி தேவையானளவு தண்ணீர் ஊற்றி ஒரு 2-3 விசில் வேகவைத்து எடுக்கவும்.ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை நன்கு கொதிக்க விடவும் . பின் ஒருமுறை வடிகட்டி வெல்ல பாகை எடுத்து கொள்ளவும்.அடுத்து வெல்ல பாகு மற்றும் வெந்த பருப்பு மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து மீண்டும் ஒருமுறை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.அதில் பொடித்த ஏலக்காய் மற்றும் கொதிக்க வைத்த பால் இரண்டையும் சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.வேறு ஒரு கடாயில் நெய்யை சூடுபண்ணி அதில் வேர்க்கடலை,முந்திரி மற்றும் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து பாயாசத்துடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.சுவையான பருப்பு பாயாசம் தயார்.
குறிப்புக்கள்
No comments:
Post a Comment