Friday, June 29, 2018

மட்டன் சுக்கா | Mutton Sukka

மட்டன் சுக்கா,ஆட்டுக்கறியைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான வறுவல். இது பிரியாணி மற்றும் வெறும் சாதமுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் லிஸ்ட்-யை பார்த்து,லிஸ்ட் பெரிசா இருக்கே இதை செய்வது கடினம்னு  நினைச்சிடாதீங்க, மட்டன் வேக வைக்க மற்றும் மசாலா செய்வதற்குன்னு தனி தனியாக பொருட்கள் லிஸ்ட் கொடுத்துள்ளேன், அதனால் லிஸ்ட் பெருசாக இருக்கு,மற்றபடி நாம் கிட்சனில் உள்ள பொருட்களை கொண்டே ரொம்ப சுலபமாக இந்த மட்டன் சுக்கா/வறுவல்-யை செய்துவிடலாம். வாங்க இப்போ எப்படி செய்வதுனு பார்க்கலாம்

மட்டன் சுக்கா | Mutton Sukka

Preparation Time : 10 mins | Cooking Time : 30 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
மட்டன்/ஆட்டு இறைச்சி  - 200 கிராம் 
சின்ன வெங்காயம் - 7 
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது  - 3/4 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் பொடி - 1/4 டீ ஸ்பூன் 
மிளகாய் பொடி - 1/2 டீ ஸ்பூன் 
கொத்தமல்லி பொடி - 1 டீ ஸ்பூன் 
நல்லண்ணெய் -  1/2 டேபிள் ஸ்பூன் 
பட்டை - 1/2 அங்குலம் துண்டு 
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து 
மசாலாவுக்கு தேவையான பொருட்கள் 
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது  - 1/2 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் பொடி - 1/8 டீ ஸ்பூன் 
மிளகாய் பொடி - 1/2 டீ ஸ்பூன் 
கொத்தமல்லி பொடி - 1 & 1/2 டீ ஸ்பூன் 
நல்லெண்ணெய் - 1  டேபிள் ஸ்பூன் 
பட்டை - 1/2 அங்குலம் துண்டு 
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
கொத்தமல்லி இலை - தேவைக்கேற்ப 
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
முதலில் மட்டனை  நன்கு சுத்தப்படுத்தி எடுத்து வைத்து கொள்ளவும். பிரஷர் குக்கரில் எண்ணெய்யை காய வைத்து பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.அடுத்து சின்ன  வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை போடவும், வெங்காயம் சற்று நிறம் மாறும் வரை வதக்கவும்.அடுத்து மட்டன் ,மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசம் போனபின் அதில்  மஞ்சள் மற்றும் மிளகாய் பொடி சேர்க்கவும்.தேவைக்கேற்ற தண்ணீர் ஊற்றி மட்டனை ஒரு 5 விசில் வேக விடவும்.அடுத்து மசாலாவுக்கு தேவையான வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலில் எண்ணெயை காய வைத்து பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும், வெங்காயம் சற்று நிறம் மாறும் வரை வதக்கவும்.அடுத்து  இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசம் போனபின் அதில் தக்காளியை போடவும்.கூடவே மஞ்சள், மிளகாய், கொத்தமல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும், கொதித்த பின் அதில் அவித்த மட்டன்-யை சேர்த்து கொள்ளவும்.மெல்லிய தீயில் வைத்து நன்கு சுருள வைத்தவும். கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.சுவையான மட்டன் சுக்கா தயார்.
குறிப்புக்கள்:
  •  நல்லெண்ணெய் மற்றும் சின்ன வெங்காயம் நல்ல சுவையை கொடுக்கும்.
  • தேவைப்பட்டால் 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

4 comments:

  1. Seems there us some repeatence. Check steps after adding meat in cooker. After five whistles ew must saute further and thicken the gravy rught? Clarify.

    ReplyDelete
    Replies
    1. If you don't want more masala, then you can thicken the gravy once the mutton is cooked, since we like more masala, I saute extra onion and tomato before thickening the gravy. Hope it's useful

      Delete