Thursday, June 21, 2018

காலிபிளவர் 65 | Cauliflower 65

காலிபிளவர் 65, மொறுமொறுப்பான இந்த காலிபிளவர் ஸ்னாக்ஸ் கடையில் கிடைப்பதை போலவே  நம் வீட்டில் ரொம்ப ஈசியாக செய்யலாம். இதை சாதமுடன் சைடு டிஷாக அல்லது ஸ்னாக்ஸ்-ஆகா கூட பரிமாறலாம். எப்படியென்றாலும்  ரொம்ப சுவையாக இருக்கும்.இதற்கு முன்னாடி காலிபிளவர் 65 நீங்க ட்ரை பண்ணி அது எண்ணெயை ரொம்ப குடிச்சு மொறுமொறுவென்று வராத அநுபவம் உங்களுக்கு இருந்துச்சுன்னா,உங்களுக்கு இந்த ரெசிபி ரொம்ப உதவியாக இருக்கும், ஏனென்றால் எனக்கும் அப்படி தான் ஆரம்பத்தில் வந்தது,அப்புறம் ரெசிபியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி பெர்பெக்ட் காலிபிளவர் 65 செய்வது எப்படினு தெரிஞ்சுகிட்டேன்.வாங்க இப்போ எப்படி செய்வதுனு பார்க்கலாம். 

காலிபிளவர் 65 | Cauliflower 65

Preparation Time : 30 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
காலிபிளவர் - 1 & 1/2 கப் 
தயிர்  -1/4 கப் 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்  
கரம் மசாலா தூள் -1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
சிவப்பு கலர் - 1 சிட்டிகை 
லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன் 
சோள மாவு - 3-4 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையானளவு 


செய்முறை
முதலில் காலிபிளவர்-யை சிறு சிறு துண்டுகளாக எடுத்து நன்கு கழுவி தண்ணீரில்லாமல் ஒரு கிட்சன் பேப்பரில் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் தயிர்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு,இஞ்சி பூண்டு விழுது,சிவப்பு கலர்  மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.அதில் காலிபிளவர்-யை போட்டு நன்கு  கலந்து ஒரு 1/2 மணி நேரம் ஊற விடவும்.பொரிப்பதற்கு முன் சோள மாவை காலிபிளவர்-வுடன்  சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை காய வைத்து, காலிபிளவர்-யை போட்டு நன்கு மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.கடைசியாக கறிவேப்பில்லை-யை எண்ணெயையில் பொரித்து காலிபிளவர்-வுடன் கலந்து கொள்ளவும்.சுவையான காலிபிளவர் 65 தயார்.
குறிப்புக்கள்:

  • நன்கு கெட்டியான தயிரை பயன்படுத்தவும்.
  • முதலில் 3 டேபிள் ஸ்பூன் சோள மாவை காலிபிளவர்-வுடன் சேர்த்து பொரித்து பார்க்கவும். நல்ல கிரிஸ்பாக வரவில்லை என்றால் கூட  1 டேபிள் ஸ்பூன் சோள மாவை சேர்த்து கொள்ளவும்.


No comments:

Post a Comment