முருங்கைக்காய் கார குழம்பு, சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு குழம்பு வகை. சாதம் கூட சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.கார குழம்பு வகைகளுக்கு நம்ம ஊர் நாட்டு காய்கறிகள் முருங்கைக்காய்,கத்தரிக்காய் எல்லாம் ரொம்ப நல்ல இருக்கும். இன்னைக்கு ஷேர் பண்ற கார குழம்பு ரெசிபியில் நான் முருங்கைக்காய் மட்டும் தான் பயன்படுத்தியுள்ளேன், உங்களுக்கு விருப்பட்டால் நீங்கள் இதே ரெசிபியில் முருங்கைக்காய் மற்றும் கத்தரிக்காய் இரண்டையும் சேர்த்து பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த கார குழம்புக்கு தொட்டுக்க கூட்டு வகைகள் அல்லது வெறும் அவித்த முட்டை கூட அருமையாக இருக்கும். வாங்க சுவையான இந்த கார குழம்பை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
செய்முறை
Murungakai Kara Kulambu
Preparation Time : 30 mins | Cooking Time : 20 mins | Serves : 2
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
முருங்கைக்காய் - 7 துண்டுகள்
சின்ன வெங்காயம் - 4/ பெரிய வெங்காயம் -1/4
தக்காளி - 1
பூண்டு - 2 பல்
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
சாம்பார் தூள் -1& 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
முருங்கைக்காய் - 7 துண்டுகள்
சின்ன வெங்காயம் - 4/ பெரிய வெங்காயம் -1/4
தக்காளி - 1
பூண்டு - 2 பல்
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
சாம்பார் தூள் -1& 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
முதலில் புளியை ஒரு 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்து வெங்காயம் மற்றும் பூண்டு பொடியாக நறுக்கி கொள்ளவும் . ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு மற்றும் உளுந்தை தாளித்து கொள்ளவும்.
அடுத்து வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பில்லை போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.வெங்காயம் வதக்கிய பின் தக்காளி மற்றும் முருங்கைக்காயை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வதக்கவும்.
அடுத்து மஞ்சள்,மிளகாய்,சாம்பார் தூள் மற்றும் உப்பை சேர்த்து எண்ணெயில் 2-3 நிமிடம் நன்கு வதக்கவும். பின்பு ஊற வைத்த புளியை கரைத்து புளி சாறை கடாயில் விடவும்.
நன்கு கொதி வரும் வரை காத்திருக்கவும். அதற்கிடையில் அரைக்க தேவையான பொருட்களை தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக மிக்ஸில் அரைத்து எடுத்து கொள்ளவும். புளி தண்ணீர் கொதி வந்த பின் அரைத்த தேங்காயை சேர்த்துக்கொள்ளவும்.எண்ணெய் மேலே மிதக்கும் வரை குழம்பை மெல்லிய தீயில் கொதிக்க விடவும்.
சுவையான முருங்கைக்காய் கார குழம்பு தயார்.
குறிப்புக்கள் 



- குழம்பை தீயிலிருந்து இறக்கும் முன் முருகைக்காயை வெந்திருக்கானு பார்த்து கொள்ளவும்.
- குழம்பு நல்ல நிறமாக வர நல்ல பழுத்த தக்காளி மற்றும் நல்ல தரமான மிளகாய் தூளை பயன்படுத்தவும்.
No comments:
Post a Comment