சில்லி சீஸ் பிரட் டோஸ்ட், பிரட் துண்டுகளை கொண்டு சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான டோஸ்ட் ரெசிபி. இதை காலை பிரேக்பாஸ்ட்-ஆகா அல்லது மாலை பசங்க ஸ்கூலிருந்து வந்தவுடன் ஸ்னாக்ஸ்-ஆகா கூட செய்து கொடுக்கலாம். ரொம்ப சீக்கரம் செய்துடலாம், சுவையும் அசத்தலாக இருக்கும்.வாங்க இப்போ இந்த டோஸ்ட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
செய்முறை
Chili Cheese Bread Toast
Preparation Time : 5 mins | Cooking Time : 10 mins | Makes : 4
Recipe Category: Breakfast/Snacks | Recipe Cuisine: Indian
Recipe Category: Breakfast/Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள் - 4
பச்சை மிளகாய் - 3
மொசரில்லா/பீட்சா சீஸ் - 1/3 - 1/4 கப்
எலுமிச்சை பழம் சாறு - 1 டீஸ்பூன்
குடை மிளகாய்(பொடியாக நறுக்கியது ) - 1/4 கப்
கொத்தமல்லி இலை - ஒரு கையளவு
உப்பு - தேவைக்கேற்ப
வெண்ணெய் - பொரிப்பதிற்கு - 2 டீஸ்பூன்
பிரட் துண்டுகள் - 4
பச்சை மிளகாய் - 3
மொசரில்லா/பீட்சா சீஸ் - 1/3 - 1/4 கப்
எலுமிச்சை பழம் சாறு - 1 டீஸ்பூன்
குடை மிளகாய்(பொடியாக நறுக்கியது ) - 1/4 கப்
கொத்தமல்லி இலை - ஒரு கையளவு
உப்பு - தேவைக்கேற்ப
வெண்ணெய் - பொரிப்பதிற்கு - 2 டீஸ்பூன்
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகாய், எலுமிச்சை பழம் சாறு மற்றும் உப்பை சேர்க்கவும்.
அடுத்து கொத்தமல்லி இலையை சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும். பிரட் டோஸ்ட் செய்ய தேவையான மற்ற பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.
ஒரு பிரட் துண்டில் தேவைக்கேற்ப அரைத்த மிளகாய் விழுதை தடவி கொள்ளவும்.அடுத்து குடை மிளகாயை மேலே தூவி கொள்ளவும்.கடைசியாக தேவையான அளவு சீஸை தூவவும்.
ஒரு கடாயில் வெண்ணையை சேர்த்து அது உருகிய பின் பிரட் துண்டையை அதில் வைத்து ஒரு மூடியால் மூடி விடவும்.
மெல்லிய தீயில் சீஸ் லேசாக உருகும் வரை டோஸ்ட் பண்ணி எடுக்கவும். விருப்பட்டபடி கட் பண்ணி பரிமாறவும்.
சுவையான சில்லி சீஸ் டோஸ்ட் ரெடி !!!
குறிப்புக்கள் 




- மெல்லிய தீயில் பிரட்-யை டோஸ்ட் செய்யவும், இல்லையென்றால் சீஸ் உருகும் முன் பிரட் ஒரு பக்கம் கருகி விடும்.
- சீஸ் சீக்கரம் உருக மூடியால் கடாயை மூடுவது அவசியம்.
- எந்த கலர் குடை மிளகாயும் பயன்படுத்தலாம் அல்லது குடை மிளகாய் இல்லாமலும் இந்த டோஸ்ட்-யை செய்யலாம்.
- உங்கள் தேவைக்கேற்ப மிளகாயை விழுதை கூடவோ குறையவோ சேர்த்து கொள்ளவும்.
No comments:
Post a Comment