Monday, June 25, 2018

மஷ்ரூம் பிரியாணி | காளான் பிரியாணி | Mushroom Biryani

மஷ்ரூம்/காளான் பிரியாணி, சுவையான எளிதில் பிரஷர் குக்கரில் செய்யக்கூடிய ஒரு பிரியாணி. ஒரு 20-25 நிமிடத்தில் செய்யக்கூடிய பிரியாணி இது, அதனால் இந்த பிரியாணி-யை  ரொம்ப ஈஸியாக லஞ்ச் பாஸ்-க்கு  செய்து கொடுத்திடலாம். சைடு டிஷ் என்றும் பெருசாக இந்த பிரியாணிக்கு எதும் தேவையில்லை சிம்பிளா ஒரு தயிர் பச்சடி இருந்தாலே போதும், சூப்பரா இருக்கும். வாங்க இப்போ இந்த சூப்பர் மஷ்ரூம்/காளான் பிரியாணி-யை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

மஷ்ரூம் பிரியாணி | காளான் பிரியாணி | Mushroom Biryani

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Biryani | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
மஷ்ரூம்/காளான்  - 200 கிராம்
பாஸ்மதி அரிசி - 1/2 கப்  
வெங்காயம் - 1/2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1 
தயிர் - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
புதினா  மற்றும் கொத்தமல்லி  - ஒரு கைப்பிடி 
முந்திரி பருப்பு - 5
பட்டை - 1/2 அங்குல துண்டு 
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
நெய் - 1 & 1/2 டீஸ்பூன்  
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
அரிசி-யை ஒரு 20 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம் மற்றும் மஷ்ரூம்-யை  மெலிதாக, தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி  கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக வகுந்து கொள்ளவும். தேவையான புதினா மற்றும் கொத்தமல்லியை சுத்தப்படுத்தி எடுத்து வைக்கவும்.அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து  நெய் ஊற்றி கொள்ளவும். நெய் சூடான பின் பட்டை,கிராம்பு ,ஏலக்காய் மற்றும் பிரியாணி இலையை சேர்த்து ஒரு 30 நொடி வதக்கவும். பின் முந்திரி பருப்பு சேர்த்து கொள்ளவும்.முந்திரி பருப்பு பொன்னிறமாக ஆனபின் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும்.இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனபின் அடுத்து தக்காளி,மஷ்ரூம் மற்றும் புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு ஒரு 2 நிமிடம் வதக்கவும்.வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் , உப்பு மற்றும் தயிர் சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்கவும்.அடுத்து தண்ணீரை ஊற்றி அது கொதி வந்த பின் அதில் ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு சேர்க்கவும்.குக்கரை மூடி 3 விசில் வேகவிடவும்.சுவையான மஷ்ரூம் பிரியாணி தயார்.
 குறிப்புக்கள்:
  • ப்ரவுன் மற்றும் வெள்ளை எந்த மஷ்ரூம் என்றாலும் பயன்படுத்தலாம்.
  • நெய்க்கு பதிலாக எண்ணெயும் பயன்படுத்தலாம் அல்லது பாதி நெய் பாதி எண்ணெயும் பயன்படுத்தலாம்.
  • தேவைப்பட்டால் 1/2 டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment