கருப்பட்டி காபி , சீனிக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்து செய்யப்படும் இந்த காபி நமது பாரம்பரிய ரெசிப்பிகளில் ஒன்று. பொதுவாகவே சர்க்கரை விட கருப்பட்டி, வெல்லம் போன்றவை உடலுக்கு ரொம்ப நல்லது.அதுமட்டுமின்றி கருப்பட்டி காபிக்கு தனியொரு சுவை மற்றும் மணத்தையும் கொடுக்கும் . சர்க்கரை சேர்த்து செய்யப்படும் காபியை விட ரொம்ப நன்றாக இருக்கும். நீங்க இது வரை இந்த காபியை செய்தது இல்லையென்றால் கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க, அப்போது தான் நான் சொல்றது சரினு நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.வாங்க இப்போ இந்த கருப்பட்டி காபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். 
செய்முறை
கருப்பட்டி காபி | Karupatti Kapi
Preparation Time : 5 mins | Cooking Time : 5 mins | Serves : 2
Recipe Category: Coffee | Recipe Cuisine: Indian
Recipe Category: Coffee | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
கருப்பட்டி - 1/4 கப்
தண்ணீர் - 2 கப்
காபி பொடி - 1 & 1/4 டேபிள் ஸ்பூன்
கருப்பட்டி - 1/4 கப்
தண்ணீர் - 2 கப்
காபி பொடி - 1 & 1/4 டேபிள் ஸ்பூன்
முதலில் கருப்பட்டியை லேசாக தட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதி வந்த பின் காபி பொடியை அதில் சேர்த்து ஒரு 2 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு அதில் கருப்பட்டியை சேர்க்கவும்.
கருப்பட்டி முழுவதும் கரைந்த பின் அடுப்பை அணைத்துவிட்டு காபியை வடிகட்டவும்.
சுவையான கருப்பட்டி காபி தயார்.
குறிப்புக்கள் 


- உங்கள் சுவைக்கு ஏற்ப கருப்பட்டியை கூடவோ அல்லது குறைத்தோ சேர்த்து கொள்ளவும்
- நீங்கள் விருப்பபட்டால் இதில் பால் கூட சேர்த்து கொள்ளலாம்.
maida illamal bread seivathu eppadi? tamilil irukkuma??
ReplyDeletei want to know how to make bread without maida.... i didnot understand properly in english... do you have a tamil version?? thanks
ReplyDeleteWill soon share the recipe in tamil.
Delete