Monday, July 2, 2018

உருளைக்கிழங்கு பொடிமாஸ் | Potato Podimas

உருளைக்கிழங்கு பொடிமாஸ், ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான உருளைக்கிழங்கு சைடு டிஷ். இது சாம்பார் மற்றும் கார குழம்பு வகைகளுடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் நாம் செய்யும் உருளைக்கிழங்கு கார பொரியல் போல காரசாரமாக இல்லாமல் ரொம்ப சிம்பிளாக இருக்கும்,அதனால் இதனை சாம்பாரை விட  கார குழம்புடன் சாப்பிட எங்கள்  வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். வாங்க இப்போ  இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு பொடிமாஸ் | Potato Podimas

Preparation Time : 5 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் -1/2
பூண்டு - 2 பல் 
பச்சை மிளகாய் - 2
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் 
தேங்காய்  எண்ணெய்  - 1 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி இலை - சிறுது 

செய்முறை
முதலில் உருளை கிழங்கை நன்கு வேகவைத்து,பொடியாக  நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை மெல்லிசாக நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக வகுந்து மற்றும் பூண்டை நசுக்கி  எடுத்து கொள்ளவும். ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி,காய்ந்த பின் அதில் கடுகு & உளுந்த பருப்பை போட்டு தாளித்து கொள்ளவும்.அடுத்து வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
 வெங்காயம் நன்கு வதங்கிய பின் அதில் உருளை கிழங்கு மற்றும் தேவையானளவு உப்பை  சேர்த்து, நன்கு ஒரு 3-4 நிமிடம் வதக்கவும். கடைசியாக துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
சுவையான உருளை கிழங்கு பொடிமாஸ் தயார்.
குறிப்புக்கள் 
  • தேங்காய் எண்ணெய் இந்த பொடிமாஸ்-க்கு நன்கு சுவையும்,மணத்தையும் கொடுக்கும்.
  • உங்கள் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்.

No comments:

Post a Comment