தக்காளி தொக்கு, சுவையான இந்த தொக்கு இட்லி,தோசை,சப்பாத்தி மற்றும் சாதம் எப்படி எதனுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். தக்காளி மலிவாக கிடைக்கும் சமயங்களில் இதை செய்து வைத்துக்கொண்டால் வார கணக்கில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி இந்த தக்காளி தொக்கு பயணங்களில் எடுத்து செல்ல ஒரு சிறந்த உணவு, சீக்கரம் கெட்டுப்போகாமல் நன்றாக இருக்கும்.வாங்க இப்போ இந்த சுவையான தொக்கை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
வீடியோ ரெசிபிக்கு கீழே பார்க்கவும்.
தக்காளி தொக்கு | Tomato Thokku
Preparation Time : 10 mins | Cooking Time : 20 mins | Makes : 1 cup
Recipe Category: Accompaniment | Recipe Cuisine: Indian
Recipe Category: Accompaniment | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
தக்காளி - 4
பூண்டு - 6
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - 1 கொத்து
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வெல்லம் - 1 டீஸ்பூன்
வெந்தய பொடி -1/4 டீஸ்பூன்
தக்காளி - 4
பூண்டு - 6
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - 1 கொத்து
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வெல்லம் - 1 டீஸ்பூன்
வெந்தய பொடி -1/4 டீஸ்பூன்
செய்முறை
முதலில் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்து பூண்டை தோல் உரித்து எடுத்து கொள்ளவும்.
பூண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளியை மட்டும் போட்டு நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடான பின் கடுகை தாளித்து கொள்ளவும். அடுத்து பூண்டு மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து கொள்ளவும்.
பூண்டு நன்கு வதங்கிய பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து கொள்ளவும்.
கூடவே மஞ்சள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
நன்கு கொதி வந்த பின் மூடி வைத்து மெல்லிய தீயில் சுருள வரும் வரை விடவும். இடையில் அடிபிடிக்காமலிருக்க அடிக்கடி கிளறி கொள்ளவும்.
கடைசியாக வெல்லம் மற்றும் வெந்தய தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை தொக்கை வதக்கவும்.
சுவையான தக்காளி தொக்கு தயார்.
குறிப்புக்கள் 






- சிறிய பூண்டாக இருந்தால் நறுக்காமல் அப்படியே போட்டு கொள்ளலாம்.
- பிரிட்ஜ்-ல் 2 வாரம் வரை இந்த தொக்கை வைத்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment