ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி/மில்க் ஷேக் , சுலபாக செய்யக்கூடிய ஒரு சுவையான ஸ்மூத்தி/மில்க் ஷேக். இந்த மில்க் ஷேக் செய்வதற்கு மொத்தமே 3 பொருட்கள் ஸ்ட்ராபெர்ரி,பால் மற்றும் தேன்/சர்க்கரை ஆகியவை தான் தேவை.எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸில் அடித்ததால் போதும், உங்கள் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி/மில்க் ஷேக் நொடியில் தயார். தேவைப்பட்டால் ஒரு ஸ்கூப் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்,அது இன்னும் சுவையை கூட்டும். வாங்க எப்போ இந்த ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி/மில்க் ஷேக் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

செய்முறை
ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி/மில்க் ஷேக் | Strawberry Milkshake/Smoothie
Preparation Time : 5 mins | Cooking Time : 0 mins | Serves : 2
Recipe Category: Drinks | Recipe Cuisine: International
Recipe Category: Drinks | Recipe Cuisine: International
தேவையான பொருட்கள்
ஸ்ட்ராபெர்ரி - 100கிராம்
பால் - 1/2 - 3/4 கப்
தேன் - தேவைக்கேற்ப
ஸ்ட்ராபெர்ரி - 100கிராம்
பால் - 1/2 - 3/4 கப்
தேன் - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஸ்ட்ராபெர்ரி-யை நன்கு கழுவி,சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, பாலையும் சேர்க்கவும்.
அடுத்து தேவையானளவு தேனை சேர்த்து மிக்ஸில் நன்கு அடித்து கொள்ளவும்.
அவ்வளவுதான் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி/மில்க் ஷேக் தயார்.
குறிப்புக்கள் :

- ஸ்மூத்தி திக்காக வேண்டுமென்றால் 1/2 கப் பால் சேர்க்கவும் இல்லையெனில் 3/4 கப் பால் சேர்த்து கொள்ளவும்.
- சூடு பண்ணி நன்கு ஆறவைத்த பாலை பயன்படுத்தவும்.
- தேனுக்கு பதில் சர்க்கரையும் சேர்க்கலாம்.
No comments:
Post a Comment