Thursday, September 20, 2018

பீட்ரூட் பொரியல் | Beetroot Poriyal

பீட்ரூட் பொரியல், ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு பொரியல். இது சாம்பார் மற்றும் கார குழம்பு-வுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். மேலும் பீட்ரூட்டில் நிறைய சத்துகள் உள்ளன, இதனை அடிக்கடி நமது உணவில் சேர்த்து கொள்வது நல்லது, பீட்ரூட்டையை கொண்டு பொரியல் மட்டுமின்றி புலாவ் மற்றும் தயிர் பச்சடி கூட செய்யலாம் ரொம்ப நன்றாக இருக்கும். வாங்க இப்போ இந்த பீட்ரூட் பொரியல் எப்படி செய்வதுனு பார்க்கலாம். 

பீட்ரூட் பொரியல் | Beetroot Poriyal

Preparation Time : 10 mins | Cooking Time : 10 minsServes :
Recipe Category: Poriyal | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 
அரைத்து கொள்ள தேவையான பொருட்கள் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
சின்ன வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 1 
தாளிக்க 
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
கடுகு & உளுந்து - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - சிறுதளவு 

செய்முறை
முதலில் பீட்ரூட்-யை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அடுத்து ஒரு வாணலியில் பீட்ரூட், தேவையான தண்ணீர் மற்றும் உப்பு  சேர்த்து  நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கொரகொரவென்று அரைத்து பீட்ரூட்-யில் சேர்க்கவும்.அடுத்து துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பீட்ரூட் பொரியலில் சேர்க்கவும் .சுவையான பீட்ரூட் பொரியல் தயார்.
குறிப்புக்கள் 
  • பீட்ரூட்-யை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும், சீக்கிரம் வேக உதவும்.
  • காரத்திற்கு ஏற்ப மிளகாய் சேர்த்து கொள்ளவும்.

No comments:

Post a Comment