புதினா சட்னி, சுவையான நொடியில் செய்யக்கூடிய ஒரு சட்னி, இது இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். புதினா சட்னியை தேங்காய் சேர்த்து அல்லது இல்லாமல் இரண்டு விதமாகவும் பண்ணலாம்,இன்னைக்கு ஷேர் பண்ற ரெசிபி தேங்காய் இல்லாமல் செய்யக்கூடியது, உணவகங்களில் கிடைக்கும் புதினா சட்னி போலவே ரொம்ப சுவையாக இருக்கும். வாங்க இப்போ இந்த புதினா சட்னி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
செய்முறை
புதினா சட்னி | Pudhina Chutney
Preparation Time : 5 mins | Cooking Time : 10 mins | Serves : 2
Recipe Category: Chutney | Recipe Cuisine: Indian
Recipe Category: Chutney | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
புதினா - 1/2 கட்டு
வெங்காயம் - 1 (சிறியது )
தக்காளி - 1
பூண்டு - 1 பல்
காய்ந்த மிளகாய் - 2
கடலை பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க
நல்லெண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீ ஸ்பூன்
கறிவேப்பில்லை - 1 கொத்து
புதினா - 1/2 கட்டு
வெங்காயம் - 1 (சிறியது )
தக்காளி - 1
பூண்டு - 1 பல்
காய்ந்த மிளகாய் - 2
கடலை பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க
நல்லெண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீ ஸ்பூன்
கறிவேப்பில்லை - 1 கொத்து
செய்முறை
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை கொஞ்சம் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். புதினாவை காம்பு நீக்கி எடுத்து கொள்ளவும் அடுத்து ஒரு வாணலில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பின் அதில் கடலைப்பருப்பை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.அடுத்து அதில் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து ஒரு 30 நொடி வதக்கவும் , பின் அதில் வெங்காயம் மற்றும் சிறுதளவு உப்பு சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.பின் தக்காளி சேர்த்து நன்கு தக்காளி வேகும் வரை வதக்கி கொள்ளவும்.அடுத்து புதினா சேர்த்து ஒரு 2 நிமிடம் புதினா சுருக்கும் வரை வதக்கி கொள்ளவும். பின் சிறுது நேரம் ஆறவிடவும் .ஆறியபின் மிக்ஸி ஜாரில் போட்டு கூடவே உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்த்து கொள்ளவும்.சுவையான புதினா சட்னி தயார்.
குறிப்புக்கள்
No comments:
Post a Comment